(Reading time: 16 - 31 minutes)

“ஏண்டா நம்பிக்கை இல்லாம சொல்ற..??”

“சொல்லத் தெரியலை விக்ஸ்.. அன்னைக்கு நடந்தது எனக்கு கனவு மாதிரி தான் தோனுது..ப்ராக்டிக்கல்லா திங் பண்ணிப் பாரு..இந்த உலகத்துள்ள கிளியைத் தவிர வேற எந்த பறவையாவது பேசுமா..??”

“...................”

“பதில் இல்லைல.. அதான் எனக்கு நம்பிக்கை வரல..”,என்றவன் தன் பொருட்களை ஒரு கூடாரத்தில் அடுக்க ஆரம்பித்தான்..

சுஜன் தியா..நான் கொடுத்த ஓலைச் சுவடியை டீகோட் பண்ணிட்டீங்களா..??”

“பண்ணிட்டோம் சார்..”,என்றபடி ஒரு பைலைக் கொடுத்தாள் தியா..

“சார் எனக்கு ஒரு டவுட்..”,என்ற சுஜன் கேள் என்பது போல் ஒரு பார்வை பார்த்தார் ராமகிருஷ்ண ஆச்சார்யா..

“நீங்க ஆல்ரெடி இதை டீகோட் பண்ணிட்டீங்களே அப்புறம் எதுக்கு எங்களையும்....”

“எங்களையும் டீகோட் பண்ண சொன்னீங்க..?? அதானே..??”

“...................”

“அதுக்குக் காரணம் நம் மொழி.. தமிழை பொறுத்தவரை ஒரு சொல்லுக்கு பல பொருள்களும்.. ஒரு பொருளுக்கு பல சொற்கள் கொண்டது.. பண்டைய கால எழுத்துக்களை பெயர்க்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் வரும்.. அதை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டாமா..??”,என்றபடி அவர் மாற்று செய்ததை அவர்களுக்குக் காட்டினார்..

“சார்.. இது எழுத்துக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா..??”,இது தியா..

“இல்லை.. சித்திரங்களுக்கும் இது பொருந்தும்..”

“சித்திரங்களா..??”,என்று இழுத்தான் சுஜன்..

“அமாம்.. அரசர்கள் ஆட்சி செய்யும் காலத்தில் சில போர் முறைகளை சித்திரமாக மண்டபத்தில் வரைந்து பார்வைக்கு வைத்திருப்பார்கள்.. சாதரணமாக அதைப் பார்த்தால் அதன் பொருள் விளங்காது.. உதாரணத்திற்கு மலரை ஏந்தியபடி ஒரு நங்கையின் சித்திரம்.. சாமானியனுக்கு நங்கையின் அழகு மட்டுமே கண்ணில் படும்.. ஒரு சிறந்த போர் வீரன் அந்த சித்திரத்தின் ஒவ்வொரு புள்ளியை ஆராய்வான்.. அந்த நங்கையின் சித்திரத்தில் அவள் அணிந்திருக்கும் நகைகளிளிருந்து ஏந்தியிருக்கும் மலர் வரை பல போர் வியூகங்கள் மறைந்திருக்கும்..”

“இது சிலைகளுக்கும் பொருந்துமா..??”,புதைபட்டிருந்த கோயிலை மனதில் வைத்துக்கொண்டு கேட்டாள் தியா..

“புதைபட்டிருந்த கோயிலுக்கும் இது பொருந்தும்..”,என்றார் அவள் மனதை படித்தபடியே..

“ஓ கே சார்..”,என்று அவரிடமிருந்து விடைபெற்றவர்கள் க்ரியா மட்டும் எழிலை நோக்கி சென்றனர்..

ழில் மயா.. கோயிலுக்கு போயிட்டு வரலாமா..??”,என்று கேட்டாள் தியா..

“இன்னும் ஒரு கூடாரம் போடணும் தியா.. அது முடிச்சுட்டு போலாமா..??”

“இன்னும் ஒரு கூடாரமா..?? எதுக்கு..??”,என்று கேட்டான் சுஜன்..

“புதுசா நம்ம கூட ஜாயின் பண்ண நாலு பேர் வரங்கள்ள..”,இது எழில்..

“நாலு பேரா..?? இரெண்டு பேர்னு தானே நேத்து சார் சொன்னார்..”,என்ற சுஜன் யாராகயிருக்கும் என யோசிக்கத் தொடங்கினான்..

அவன் யோசனைக்கு தடை போட அப்பகுதிக்குள் நுழைந்தது அந்த கார்..

காரிலிருந்து இறங்கியவளைக் கண்டு முதலில் திகைத்த எழில் மேகி என்று கூவினான் என்றால் தியாவின் இதழ்கள் வாலு என்றது..

தியாவைக் கண்ட க்ரியா அவளை நெருங்கி அனைத்து கன்னத்தில் அழுந்த முத்தம் ஒன்று வைத்தாள்..

தியாவிடம் உரிமையெடுத்து முத்தம் கொடுத்தவளை ஏதோ வினோத ஜந்துவை போல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மயா அவர்களில் உருவ ஒற்றுமையைக் கண்டு வியந்து போனாள்..

தியாவும் க்ரியாவும் செராக்ஸ் காபி எடுத்தது போல் ஒரே போல் இருந்தார்கள்..ஒரே வித்யாசம் அவர்களது முடி..தியாவிற்கு அலையலையாக நீளமான கூந்தல்.. க்ரியாவிற்கோ சுருள் முடி,அதனை தோல் வரை வெட்டி ப்ரீ ஹேர் விட்டிருந்தாள்..

“உன்னை இங்க இப்போ யார் வர சொன்னா..??”,பல்லை கடித்தபடி க்ரியாவிடம் முனுமுனுத்தாள் தியா கன்னத்தில் இருந்த க்ரியாவின் எச்சிலை துடைத்தபடியே..

“உன்னை பார்க்க ஆசையா வந்தா கேக்கற பாரு கேள்வி..??”,என்றாள் க்ரியா சலித்தபடியே..

அவளுக்கொரு உஷ்ண பார்வையளித்த தியா,”நீ இங்க வந்தது பெருசுங்களுக்கு தெரியுமா..??”

“தெரியாது.. பிரென்ட் கல்யாணத்துக்கு போறேன்னு சொல்ல்லிட்டு வந்திருக்கேன்.. சொல்லிடறேன்..”

“சீக்கிரம் சொல்லிரு இல்லைனா வருத்தபடுவாங்க..”,என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள் தன் கூடாரம் நோக்கி..

தியாவின் தலை மறைந்ததும் க்ரியாவின் அருகில் வந்த எழில்,”ஹலோ மேடம்..என்னை அடையாளம் தெரியுதா..??”,என்று கேட்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.