(Reading time: 16 - 31 minutes)

வயதான எழுந்து நடக்க முடியாத சொந்த குடும்பத்தால் பார்த்துக்கொள்ள முடியாத முதியவர்களை உயிருடன் சில சமயம் இந்த தாழிகளில் புதைப்பதுண்டு.. இவர்களுக்கு தேவையான உணவு நீர் ஆகியவற்றை நாளுக்கு ஒருதரம் இந்த தாழியில் இருக்கும் சிறு ஓட்டை வழியாக இவர்கள் இறக்கும் வரை கொடுப்பார்கள்..இவர்கள் இறந்த பின் இதனுள் தாழியில்லுள்ள முதியவர் உபயோக படுத்திய சில பொருட்களையும் சேர்த்து புதைப்பர்..

சுமார் இருபது வருடங்களுக்கு முன் இவ்வாரான ஒரு தாழியை புதைபாறை என்னும் இடத்தில் கண்டுபிடித்தனர்..

இந்த தாழி சுமார் மூன்றாயிரம் வருடங்குக்கு முன்னது.. இந்த தாழிக்குள் புதைக்கப்பட்டிருந்தது ஒரு பெண் என்பது பாரென்சிக் ரிபோர்ட் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது..

இவருடன் இரண்டு ஓலைச்சுவடிகள் புதைந்திருந்தது.. அந்த ஓலைச்சுவடியின் அடிப்படையில் தான் நாம் இந்த தொல்லியல் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறோம்..”,என்ற தியா ஒரு நிமிடம் இடைவெளி விட்டு தன்  பேச்சை தொடர்ந்தாள்..

“முதல் ஓலைச்சுவடியின் குறிப்பு யாதெனில் ஆதிசெழுவூரில் புதைந்திருக்கும் சிற்ப கோயிலை கண்டுபிடி சிற்பங்கள் பதில் சொல்லும்..”

“அப்போ நாம் கெஸ் செய்த மாதிரி இந்த கோயில்ல இருக்கற சிற்பங்களுக்குள் எதுவோ புதைந்திருக்குமோ..??”, என்று கேட்டான் எழில்..

“ஆமாம்..அந்த சுவடியின் பொருள் அதுதான்..”

“இருபது வருடங்களுக்கு முன்னாடியே  கண்டுபிடிச்சாங்கன்னு சொல்றீங்க..ஏன் இவ்ளோ வருடங்களாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்காம இருந்தாங்க..??”,என்று கேட்டான் விக்கி..

“இது அன் அபிஷியலா தொடங்குன ஒரு ஆராய்ச்சி..இந்த தாழியை கண்டுபிடித்த நால்வரில் மூவர் இந்த ஆராய்ச்சி தொடங்குவதற்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள்.. அம்மூவருடன் இரண்டாம் ஓலைச்சுவடியும் மறைந்துவிட்டது..அதனால் இந்த ஆராய்ச்சி டிராப் ஆனது..”

“இந்த தாழியை கண்டிபிடிச்ச ஒருத்தர் உயிருடன் இருக்கார்னு சொன்னல அவர் யார்..??அவர் இந்த ஆராய்ச்சியை தொடர்ந்திருக்கலாமே..??”,இது வ்ருதுஷ்..

“நம்ம ஹெட் ப்ரொபசர் ராமகிருஷ்ண ஆச்சார்யா தான் அந்த நான்காவது நபர்.. இறந்து போன மூவருள் இருவர் அவரது சகோதரர்கள் சக்ரவர்த்தி மற்றும் ஹம்சவாணன்.. இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவே இவருக்கு சில காலங்கள் தேவைப்பட்டது..”,என்றாள் ராமகிருஷ்ணன் அவர்களை நெருங்குவதை கண்டு மெதுவாய்..

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரிக்கியும் விக்கியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..

“ஓ.. இறந்து போன இன்னொருத்தர் யார்..??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“எங்க அப்பா..”,முனுமுனுத்தன தியாவின் இதழ்கள்..

இப்பொழுது அதிர்வது க்ரியாவின் முறையானது..

வணக்கம் நண்பர்களே..

ஓரளவிற்கு உங்கள் கேள்விகளுக்கான விடைகளை கொடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன்..

படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கமென்ட் செய்யுங்கள்..

நன்றி..!!

 

வியூகம் வகுக்கலாம்...

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.