(Reading time: 16 - 32 minutes)

11. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

சிற்பங்கள் பரவிக்கிடக்கும் அந்த சிற்பக் கோவிலில் தியாவின் முணுமுணுப்பைக் கேட்ட மற்றவர்கள் அவ்விரவின் விளிம்பில் அதிர்ச்சியில் நிசப்தத்தை தத்தெடுத்தனர்..

 க்ரியாவோ அதிர்வு தாங்காமல் சிற்பங்களுக்குப் போட்டியாக சிற்பமானாள்..

“இந்த ப்ராஜெக்ட் பற்றி ஏதாவது சந்தேகம் இருக்கா..??”,என்று கேட்டாள் தியா நிசப்தத்தை கிழித்துக்கொண்டு..

“இரண்டாம் ஓலைச்சுவடியில் என்ன எழுதியிருந்துச்சு..??”,என்று கேட்டான் எழில்..

“அந்த ஓலைச்சுவடியில் எந்த எழுத்துக்களும் இல்லை..”

“என்னது..?? எந்த எழுத்துக்களும் இல்லையா..??”,என்று கேட்டாள் மயா..

“ஆமாம்..ஆனால் அந்த ஓலைச்சுவடியில எதுவோ இருக்கு..”,என்றார் ராமகிருஷ்ண ஆச்சார்யா அமைதியான குரலில்..

“எப்படி சித்தப்பா சொல்றீங்க..??”,சற்று குழப்பமாக ஒலித்தது விக்கியின் குரல்..

“அந்த ரெண்டு ஓலைச்சுவடியை நாங்கள் தாழியிளிருந்து எடுத்தபொழுது முதல் ஓலைச்சுவடி கொஞ்சம் சிதைந்து போயும் இரண்டாம் ஓலைச்சுவடி புதுசு போலவும் இருந்துச்சு..தட்ஸ் பிஷ்ஷி..”

“அந்த ஓலைச்சுவடி எப்படி தொலைஞ்சு போச்சு..??”,கூர்மையாக விழுந்தது வ்ருதுஷின் கேள்வி..

“அந்தச்சுவடி சக்ரவர்த்திக்கிட்ட இருந்துச்சு..எங்க சொந்த ஊரான்ன நல்லூர்க்குப் பக்கத்தில் சுவடியை பயன்படுத்தி ஜாதகம் பார்க்கிற ஒருவர் இருந்தார்..ஊருக்கு போகும் பொழுது அவர்கிட்ட அந்தச் சுவடியை காட்டி அவருக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமான்னு கேட்கணும்னு நெனச்சு கிளம்பினோம்.. ஆனால் போகும் வழியில் நடந்த ஒரு விபத்தில் அந்த சுவடியையும் என் மகளோடு சேர்த்து என் தம்பிகளின் குடும்பத்தை இழந்து விட்டேன்..”,முகம் முழுதும் துயரத்தை தேக்கியபடி..

தான் பட்ட துயரத்தை தொண்டைக்குள் விழுங்கியவர்,”மிச்சத்தை நாளைக்கு பார்க்கலாம்.. கூடாரத்துக்கு கிளம்புங்க..”,என்று பொதுவாக அனைவரையும் பார்த்து கூறினார்..

ஒருவர் பின் ஒருவராக கோயிலை விட்டு விட்டு வெளி வந்தவர்கள் தங்களது கூடாரம் நோக்கி செல்லத் தொடங்கினர்..

க்ரியா தியா ஒரு நிமிஷம்..”,என்றான் வ்ருதுஷ்..

“என்ன வ்ருதுஷ்..??”,என்று கேட்டாள் க்ரியா..

“உங்க இரண்டு பேர்க்கிட்டையும் கொஞ்சம் பேசணும்..டவுனுக்கு போகலாமா..??”,என்றான் யோசனையுடன்..

“என்கிட்டயுமா..??”,என்று கேட்டாள் தியா ஆச்சர்யமாக..

“உங்ககிட்ட தான் முக்கியமா பேசணும்..”,என்றான் தீவிரமாக..

வ்ருதுஷின் தீவிர முக பாவத்தை கண்ட தியா,“போகலாம்..நான் சுஜன் அண்ணாகிட்ட சொல்லிட்டு வரேன்..நீங்க கார்ல வெயிட் பண்ணுங்க..”,என்றபடி சென்றாள்..

செழுவூரில் அடுத்த டவுன் என்றால் அது தேனி..தியா க்ரியா வ்ருதுஷுடன் தேனியில் அமைந்துள்ள ஏ பி எம்  (ABM) கிராண்ட் ஹோட்டலில் அமர்ந்திருந்தனர்..

“க்ரியா என்னை பற்றி உங்ககிட்ட சொல்லிருப்பான்னு நினைக்கறேன்..நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி..”

“தெரியும் வ்ருதுஷ்..எங்க அம்மா அப்பா விபத்தைப் பற்றி இன்வெஸ்டிகேட் பண்றீங்க..க்ரியா சொன்னா.. கேளுங்க வ்ருதுஷ்..என்கிட்ட நீங்க என்ன தெரிஞ்சுக்கணும்..??”,சுற்றி வளைக்காமல் வ்ருதுஷிடம் கேட்டாள் தியா..

அவளை கண்களால் மெச்சியபடியே,“க்ரியா என்கிட்ட அவளுக்கு தெரிஞ்ச விஷயம் எல்லாம் சொன்னாள்..இருந்தாலும் சில விஷங்களை உங்க மூலமா தெரிஞ்சுக்கணும்னு ஆசைப் படறேன்..உங்க அப்பா அம்மாக்கு விபத்து நடந்த பொழுது நீங்க எங்க இருந்தீங்க..??”

“ஊட்டில இருக்க என் அம்மா வீட்ல..”

“கொஞ்சம் டீட்டெயிலா சொல்ல முடியுமா..??”

“ஹ்ம்..எங்க பேரெண்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணது எங்க அம்மாவோட பேரெண்ட்ஸ்க்குப் பிடிக்கல..சோ சில வருடங்கள் அவங்ககூட பெருசா ஒட்டுதல் இல்லாம இருந்தோம்.. நாங்க பிறந்து நாலு வருடங்களுக்கு அப்புறம் பேத்திகளை கொஞ்சனுங்கர ஆசையில் கொஞ்சம் இறங்கி வந்தாங்க..அப்போ இருந்து நானும் க்ரியாவும் லீவ்க்கு அங்க போய் இருந்து வர ஆரம்பித்தோம்..

எங்க அப்பா அம்மா இறந்தப்போ எங்களுக்கு சம்மர் லீவ்.. பரீட்சை முடிந்த அடுத்த நாளே நான் ஊட்டிக்கு போகணும்னு அடம்பிடித்தேன்.. ஒரு வாரம் கழித்து எல்லாரும் போலாம்னு அப்பா சொன்னாரு..நான் ரொம்ப அடம் பிடிச்சதால சித்தப்பா கூட என்னை அங்க அனுப்பி வைத்தார்கள்..

நான் ஊட்டிக்கு போய் ஒரு ஒன் அண்ட் ஹால்ப் வீக்ல அவங்களுக்கு விபத்து..”,என்றாள் கண்ணீரை அடக்கியபடி..

“கூல் தியா.. நீங்க எப்படி விபத்து நடந்த இடத்துக்கு போனீங்க..??”

“அவங்களுக்கு விபத்து நடந்து ஒரு மூன்று மணி நேரத்திற்கு பிறகு விபத்து நடந்திருக்குன்னு சித்தப்பாக் கிட்ட இருந்து கால் வந்துச்சு.. நாங்க அங்க போக கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆயிருச்சு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.