(Reading time: 16 - 32 minutes)

“ஒன்னும் இல்லை..சும்மா..”,என்று திரும்பியவள் அங்கு யாரையும் காணாது திறுதிறுவென முழித்தாள்..

“ஏய் இங்க பாரு..”,என்றபடி அவள் மடிமேல் பறந்து வந்து அமர்ந்தது அகிலன்..

அன்று கருடனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது போல் இன்று அதிர்சியாகவில்லை என்றாலும் அகிலனைக் கண்டு,”நீ எப்படி பறக்கற..??”,என்று ஆச்சர்யமாக வினவினாள்..

“எனக்கு ரெக்க இருக்கு..”,என்ற படி அவளை சுற்றி வட்டமிட்டது அகிலன்..

அது பறக்கும் அழகில் மயங்கியவள்,“நீ ரொம்ப அழகா இருக்க..”,என்றாள்..

“நன்றி..என் பெயர் அகிலன்.. நைஸ் மீட்டிங் யூ..”,என்று ஷேக் ஹான்ட் கொடுத்தது அகில்..

“நைஸ் மீட்டிங் யூ டூ..உனக்கு இங்கிலீஷ் தெரியுமா..??”

“தெரியும்..உன் டார்லிங் க்ரியா கற்றுக் கொடுத்தா..”

“க்ரியா சொன்ன அணில் பிரென்ட நீதானா..??”

ஆமாம் என்பது போல் தலையாட்டிய அகிலன் எழில் வருவது கண்டு அமைதியானது..

யா..இந்தா சாப்பிடு..”,என்றபடி இரவு உணவை மயாவின் கையில் திணித்தான் எழில்..

“தாங்க்ஸ்”,என்று பெற்றுக் கொண்டவள் அகிலிடம் திரும்பி,”உனக்கு வேண்டுமா..??”

“நான் சாப்டாச்சு.. நீ சாப்பிடு..”,என்றது..

அகிலனைக் கண்ட எழில் திரும்பவும் ஒரு ப்ளாக் மாஜிக்கா என முனுமுனுத்தான்..

“எலி இது ப்ளாக் மாஜிக் எல்லாம் கிடையாது..நிஜம் தான்..”,என்றது அகிலன்..

“எனக்கு நம்பிக்கை இல்லை..”,என்று தோள் குலுக்கியவன் தன் உணவிற்குள் முழ்கினான்..

“அகில் உன்னால் பறவைகள் மாதிரி உயரமா பறக்க முடியுமா..??”

“இல்லை மயா.. என்னால ரொம்ப உயரம் பறக்க முடியாது..ஆனால் என்னால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சில நொடிகளில் யாருக்கும் தெரியாமல் போக முடியும்..“

“சினிமாவில் வரும் கடவுள்கள் மாதிரியா..??”,என்று கேட்டான் எழில் சிறிது நக்கலாக..

“ஆமாம்..”,என்று சீரியஸாக பதிலளித்தது அகிலன் சட்டென மறைந்து போனது..

“என்னதிது..??”,என்று திகைத்து போன எழில் சுற்றியும் தேடிக்கொண்டிருந்தான் தன் தலையின் மேல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு தாளம் தட்டிக் கொண்டிருந்த அகிலனை உணரால்..அகிலனின் சேட்டையைக் கண்ட மயாவிற்கு சிரிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது..

“ஏய்.. உனக்கு என்ன சிரிப்பு வேண்டி கெடக்கு..??”,என்று எரிந்து விழுந்தான் எழில்..

“எலீ..உன் தலையில் அகீ..”,என்று சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள் மயா..

தன் தலையில் மேல் அமர்ந்திருந்த அகிலை பிடிக்க ட்ரை செய்யத் தொடங்கினான் எலி..அகிலனோ எலிக்கு போக்கு காட்டிய வண்ணம் மயாவின் தோளின் மேல் ஏறி கம்பீரமாய் அமர்ந்தது..

அகிலனை முறைத்துக் கொண்டிருந்த எழிலிடம்,“காம் டவுன் மேன்.. கூல்..”,என்று அவனை சமாதன படுத்தினாள்..

“நீ சொல்றதால அத விட்டு வைக்கிறேன்..”,என்று இருவரையும் முறைத்தபடி எதிரில் அமர்ந்தான் எழில்..

“இவ இல்லைனா என்ன பண்ணிருப்ப..??”,என்று கேட்டது அகிலன் நக்கலாக..

“லைப்ல முதல் முறையா பிச்சுப் போட்ட அணில் சாப்பிட்டிருப்பேன்..”,கையிலிருந்த போர்க்கை அகிலனின் முன் நீட்டியபடி..

“உன்னால என்ன ஒன்னும் பண்ணமுடியாது முடியாது எலிகுட்டி..”, என்றபடி பறந்த அகிலன் எழிலின் தலையில் ஒரு கொட்டை வைத்துவிட்டு தஞ்சமடைந்தது மீண்டும் மயாவின் தோளில்..

சிறுபிள்ளை போல் தங்களை முறைத்துக் கொண்டிருந்த எலியை கண்டவுடன் மீண்டும் சிரிப்பு பொங்கியது மயாவிற்கு..

ரிக்கி..வா கூடாரத்துக்குள் போயிடலாம் மழை வர மாதிரி இருக்கு..”

“ஹ்ம்.. ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்துப் போகலாம்..”,காரிருளை வெறித்தபடியே கூறினவன் ஏதோ நினைவு வந்தது போல்,”அந்த பொண்ணு தியாவுக்கு தெரிஞ்சது கூட நமக்கு தெரியலை..”,என்றான்..

“நீ எதை சொல்ற..??”

“நம் அப்பாக்களோட ஆராய்ச்சி பற்றி..”

“எனக்கும் அந்த சொல்றப்போ கேட்க அதிர்ச்சியா தான் இருந்தது.. இப்போ வரைக்கும் நடந்ததை நம்மால் மாற்ற முடியாது.. ஆனால் இனி இந்த ஆராய்ச்சியில் நம் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..”

“நானும் அதே தான் முடிவு பண்ணி இருக்கேன்..”

“எனக்கு ஒரு சந்தேகம் ரிக்கி.. நம்ம சித்தப்பா ஏன் இதுவரைக்கும் நம்மக்கிட்ட இந்த ஆராய்ச்சியை பற்றி சொல்லவில்லை..??”

“நம் பெற்றவர்களின் நினைவு நம்மை அண்ட கூடாதுன்னு நினைதிருக்கலாம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.