(Reading time: 16 - 32 minutes)

விக்கி ரிக்கி.. நீங்க இன்னும் தூங்க போகலையா..??”, அங்கு வந்த மயாவும் எழிலும் கேட்டனர்..

“இனி தான் போகனும்..”,என்றான் விக்கி..

“நீங்க இரண்டு பேரும் எங்க சித்தாப்பக்கிட்ட என்னவா வர்க் பண்றீங்களா இல்லை ட்ரைனிங் வந்திருக்கீங்களா..??”,என்று கேட்டான் ரிக்கி..

“நாங்க இரண்டு பேருமே ட்ரைனிங் தான்.. சுஜன் அண்ணாவும் தியாவும் தான் இவர்க்கிட்ட வர்க் பண்ண வந்திருக்காங்க.. நீங்க இரண்டு பேரும் ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ் ஆ..??”,இது எழில்..

“இல்லை.. நான் மரைன் ரிக்கி ஆஸ்ட்ரோனோமி..நாங்க இரண்டு பேருமே ரிசெர்ச் சைட் வர்க் பண்ணிட்டு இருக்கோம்..”

“சூப்பர்.. நீங்களும் எங்க கூட இந்த ப்ராஜெக்ட் காரி பண்ண வந்திருக்கீங்களா..?? இல்லை உங்க சித்தப்பாவை பார்க்கவா..??”,இது மயா..

“சித்தப்பாவை பார்க்கத்தான் இங்க வந்தோம்.. ஆனால் அநேகமா வீ வில் பீ இன்சைட் தி ப்ராஜெக்ட்..”,என்றான் விக்கி..

ங்களவாழ்த்தாய் இடியொன்று இடிக்க நாதஸ்வர குயிலிசையுடன் காகங்களின் கரையோசையுடன் செந்நிற கதிரவன் புதியதோற் துடக்கத்தை தொவங்கி வைத்தான்..

புலாராத பொழுதில் ஒருவர் பின் ஒருவராய் ஆச்சார்யாவுடன் கோயிலுக்குள் பிரவேசித்தது எட்டு பேர் கொண்ட அந்த பெரிய படை..

“இங்கிருக்கம் சிலைகளில் இருந்து நாம் நம் அடுத்தக் கட்ட ஆராய்ச்சியை தொடர வேண்டும்..”,என்ற ஆச்சார்யா தன்னை சுற்றி இருந்தவர்களை அழுத்தமாக பார்த்தார்..

ஏன் தங்களை இப்படி பார்க்கிறார் என்று அறியாத க்ரியா கண்களால் தன் டார்லிங்கிடம் விடை தேடினாள்..

“இது இவரோட ஒரு பழக்கம்.. முதலில் நம் கருத்தை கேட்பது.. பிறகு அவருடைய தீர்மானத்தை உரைப்பது..”,என்று முனுமுனுத்தாள் மயா..

சரி என்பது போல் தலையசைத்த க்ரியா அந்த கோயிலை வெளிச்சத்தில் பார்வையிட தொடங்கினாள் கூர்மையாக..

“சார்.. இந்த கோயிலில் சில சிலைகள் முற்றுப் பெறாமல் இருக்கிறது.. அதை பார்த்தோமானால் ஏதாவது குறிப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்..”,என்றான் சுஜன்..

சுஜனின் கூற்றை அனைவரும் ஏற்றுக் கொண்டதை கண்ட ஆச்சார்யா கோ அஹெட் என்றபடி கோயிலின் பின் இருந்த சிற்ப மண்டபத்திற்குல் சென்று மறைந்தார்..

“அண்ணா.. இரண்டிரண்டு பேராக சேர்ந்து நான்கு அணிகளாய் பிரிந்து சிலைகளை பார்வையிடுவோம்..”,என்றாள் தியா சுஜனிடம்..

“சரி..முதலில் விமானத்தையும் கோபுரத்தையும் முடிச்சிடலாம்..அதற்கு பிறகு சுவரில் இருக்கும் சிலைகளை பார்வையிடலாம்..”,என்ற சுஜன்,” க்ரியா எழில் நீங்க வடக்கு பகுதயை எடுத்துக்கொள்ளுங்கள், மயா விக்கி நீங்க தெற்கு, தியா ரிக்கி நீங்க மேற்கு, நானும் வ்ருதுஷும் கிழக்கு..”,என்றான்..

விமானத்தையும் கோபுரத்தையும் முதலில் முடித்தவர்களுக்கு ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை.. எல்லா சிலைகளும் அங்கு முற்று பெற்றிருந்தது..

மதியத்திற்கு பிறகு சலிப்போடு சுவர்களில் உள்ள சிலைகளை பார்வையிட தொடங்கியது அந்த எட்டு பேர் கொண்ட படை..

“மயா இங்க பாருங்க இந்த சிலை முழுசா செதுக்கி இருக்காங்க..ஆனால் நீங்க முற்றுப் பெறவில்லைனு மார்க் பண்ணியிருக்கீங்க..”,என்றான் விக்கி..  

“இது என்ன சிலைன்னு விக்கி..??”

“ஹென் ஓட சிலை..”

“இது ஹென் இல்லை..நல்லா பார்த்து சொல்லுங்க இது என்னன்னு..??”

அந்த சிலையையும் மயாவையும் உற்று நோக்கிய விக்கி,“உங்க கிளாஸ் பவர் என்ன..??”,என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டான்..

“மைனஸ் டூ பாயின்ட் பைவ்.. ஏன் புது கண்ணாடி வாங்கி தர போறீங்களா..??”,சூரியனின் சூட்டை குரலில் ஏற்றி..

“அதுக்கில்லைங்க..”,என்றவன் தன் போனிலிருந்த ஒரு சேவலின் படத்தைக் காட்டி,”இதுதானெங்க ஹென்..?? நீங்க சொல்றது பீஹென்..”,என்றான் விளக்கமாக..

கொலைவெறியுடன் அவனை முறைத்த மயா,“டேய் பக்கி..சேவலுக்கும் கோழிக்கும் வித்தியாசம் தெரியாம கூமுட்டையா இருந்துக்கிட்டு எனக்கு கண்ணு தெரியலைன்னா சொல்ற..உன்ன..”,என்றபடி அருகில் கிடந்த குச்சியை எடுத்து அடிக்க கை ஓங்கினாள்..

“ஏங்க நோ கோபம்.. கோழிய கிட்ட தட்ட பத்து வருஷமா பாக்கெட்லையும் பக்கெட்லையும் மட்டுமே பார்த்ததனால் ஒரு சின்ன குழப்பம்..”,என்றான் பாவமாக..

பொழச்சு போ என்பது போல் அவனை ஒரு லுக் விட்டாள் மயா..

இந்த மங்காத்தா மயாகிட்டிருந்து தப்பிச்சோம்டா சாமி என மனதில் நினைத்த விக்கி டாபிக்கை மாற்றும் விதமாய்,”இந்த சிலை எப்படி நீங்க முழுசா முடிக்கலைன்னு சொல்றீங்க..??”,என்று கேட்டான்..

“சேவலுக்கு தோகை கொஞ்சம் பெருசா இருக்கும்..ஆனால் இந்த சிலையில் தோகையை செதுக்காமல் விட்டிருக்கின்றனர்”,என்றாள்..

மீதம் இருக்கும் சிலைகளை எல்லாம் கூர்ந்து நோக்கி முழுமையடைந்த சிலைகளுக்கு ஒரு மார்க் இட்டுக் கொண்டே வந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.