(Reading time: 16 - 32 minutes)

சுமார் ஒரு நான்கு மணிக்கு தங்கள் வேலைகளை முடித்தவர்கள் ஒன்றாய் அமர்ந்து தாங்கள் செய்தவற்றை டிஸ்க்கஸ் செய்யத் தொடங்கினர்..

“பாதிக்கு பாதி சிலை முற்றுபெறாமல் இருக்கு..”,என்றான் சுஜன்..

“ஆமாம் இங்கயும் அப்படித்தான் இருக்கு..”,மயாவும் எழிலும் கோரஸ் பாடினர்..

“நீ ஏன் அமைதியா இருக்க தியா..??”,என்றான் சுஜன்..

“நாங்க பார்த்த சைட்ல ரெண்டு சிலை மட்டும் தான் முழுமை அடைந்திருக்கிறது..”

“அப்படியா வாங்க பார்க்கலாம்..”,என்றபடி அனைவரும் கிழக்கு பக்கம் சென்றனர்..

ஒவ்வுறு சிலையாக காட்டிய தியா இதில் கை விரல் ஒன்று இல்லை,இதில் கண்கள் முழுமையடையவில்லை என்று ஒவ்வொன்றிற்கும் காரணம் கூறினாள்..

இவ்வாறாக எல்லாவற்றையும் தெளிவாய் கூறியவள் முழுமையடைந்த இரு சிலைகளை காட்டினாள்..அவ்விரண்டு சிலைகளும் சுவரின் பக்கவாட்டில் தாமரை மலர்களுக்கு மத்தியில் கண்ணுக்குத் தெரியாமல் சிறியதாய் இருந்தது..அதனைக் கண்டு வியந்து போயினர் அனைவரும்..

அவ்விரண்டு சிலைகளிலும் மார்க் ஒன்று வைத்துவிட்டு மற்றவர்கள் கண்ட முழுமையடைந்த சிலைகளைக் காண சென்றனர் அனைவரும்..

“இது நாங்க பார்த்த சைட்..”,முன் வந்த க்ரியாவும் எழிலும் சிலைகளுள் உள்ள குறைகளை காட்டவிட்டு முழுமையடைந்த சிலைகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர்..

“இந்த மான் குட்டியைப் பாரேன்..அப்படியே ஒரிஜினல் மாதிரி இருக்குல..”,என்றபடி ஒரு சிலையைக் காட்டினான் எழில்..

“இந்த சிலை முழுமையடையல எழில்..”,என்றாள் தியா..

“என்ன சொல்ற தியா..?? எல்லாமே கரெக்டா தானே இருக்கு..??”

“இந்த மானோட ஒரு புருவம் தான் முழுமையா செதுக்கப் பட்டிருக்கு..”,என்றவள் மானின் அருகில் வடிக்கப் பட்டிருந்த ஒரு சிங்கத்தின் ஒரு காலை சுட்டிக் காட்டி,”இந்த சிலையில் உள்ள ஒரு காலில் ஒரு விரலில் மட்டும் நகத்தை செதுக்காமல் விட்டிருக்கின்றனர்..”,என்றாள்..

அவளது பேச்சைக் கேட்டு அசந்து நின்றவர்களைப் பார்த்து மெல்ல கனைத்த தியா,”இந்த கோயில் சிலைகளில் நகங்களை கூட மைன்யூட்டா செதுக்கி இருக்காங்க.. சோ இன்னொருவாட்டி எல்லா சிலைகளையும் நல்லாப் கவனமாக பாருங்க..”,என்றவள் தானும் சில சிலைகளை பார்வையிட ஆரம்பித்தாள்..

கோவில் சுவரில் மேற்கு, வடக்கு தெற்கு பகுதிளில் திசைக்கு இரு சிலைகள் என முழிமையடைந்த நான்கு ஆண் சிலைகளள் இரண்டு பெண் சிலைகள் என ஆறு சிலைகளை இருப்பதை கண்டுபிடித்தனர்..

“இந்த சிலைகள் ஏதோ தேவர்களோட சிலைகள் மாதிரி இருக்குள்ள..??”,என்றாள் மயா..

“ஆமா..நானும் அதுதான் நினைத்தேன்..”,என்ற ரிக்கி தியாவிடம் திரும்பி,”இந்த சிலைகளில் தான் க்ளூ இருக்குமா..??”,என்று கேட்டான்..

“சுவடியில் அப்படித் தான் இருக்கு..”,என்றாள் தியா..

சுவடி எழுத்துக்கள் மெய்யா பொய்யா..??

வணக்கம் நண்பர்களே

ஒரு வழியா கதைமாந்தர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விட்டேன்..

இந்த பதிவு எப்படி இருக்கிறது என படித்துவிட்டு கமென்ட் செய்யுங்கள்.. சந்தேகம் இருந்தாலோ கதையின் ப்ளோ புரியவில்லை என்றாலோ குறிப்பிடுங்கள்..

நன்றி..!! 

வியூகம் வகுக்கலாம்...

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.