(Reading time: 16 - 32 minutes)

நாங்க போனதுக்கு அப்புறம் தான் பள்ளத்தில் இருந்து காரையும் அவங்களையும் மீட்டெடுத்தாங்க..”

“க்ரிய இளநீர் கடையில் மயங்கி விழுததை எப்போ நோட்டிஸ் பண்ணாங்கன்ன்னு தெரியுமா..??”

“நாங்க அங்க போறதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் க்ரியா அங்க மயங்கி இருக்கறது தெரிஞ்சிருக்கு..”

“உங்களுக்கு க்ரியா மாதிரி இந்த விபத்து சதின்னு எப்பொழுதாவது தோன்றியிருக்கா..??”

நிமிடங்கள் அமைதியில் கழிய,”சந்தேகம் இல்லை..அதற்கான காரணகர்த்தா யாருன்னு எனக்கு தெரியும்..”,என்றாள் தியா..

“என்ன சொல்ற..?? யாருன்னு தெரியுமா..?? தெரிஞ்சும் நீ ஏன் என்கிட்ட சொல்லல..??”,கோபமாய் வெளிவந்தது க்ரியாவின் குரல்..

“ஹ்ம்..தெரியும்..ஆனால் அதை யார்க்கிட்டயும் இப்போதைக்கு சொல்லமாட்டேன்..”, க்ரியாவிற்கு பதில் சொல்லாமல் பொதுவாக சற்று அழுத்தமாக கூறினாள் தியா..

“ஏன்..??”,கூர்மையாக கேட்டான் வ்ருதுஷ்..

“நான் தான் அது யாருன்னு சொல்லவேண்டாம்னு சொன்னேன்..”,என்றது அவர்கள் அமர்ந்திருந்த டேபிளின் பின் அமைந்திருந்த பெரிய பிஷ் டாங்கின் பின்னிருந்து வெளிப்பட்ட அகிலன் கூறியது..

“ஏன் அகி..??”,இப்பொழுது அகிலனிடம் பல்லை கடித்தாள் க்ரியா..

“உன் பிரென்ட் பெரிய டிடக்டீவ்ல..?? அவனே கண்டுபிடிக்கட்டும்னு தான் அவளை அது யாருன்னு சொல்ல வேண்டாம்னு சொன்னேன்..”,என்றது அகிலன் சற்று நக்கலாக..

அகிலனை சற்று உற்றுப் பார்த்த வ்ருதுஷ்,“சரி.. நீங்க ஆள் யாருன்னு சொல்ல வேண்டாம்.. ஆனால் எனக்கு அந்த இரண்டாம் ஓலைச்சுவடியை பற்றி டீடைல்ஸ் சொல்றீங்களா..??”

“எனக்கு அதைப் பற்றி ஒன்னும் தெரியாது வ்ருதுஷ்.. அது சக்ரவர்த்தி கிட்ட தானே இருந்தது..”,பாவமாக பதிலளித்தது அகிலன்..

“அகி நான் உன்கிட்ட கேக்கல..தியா கிட்ட கேட்டேன்..”,இப்பொழுது பல்லைக் கடிப்பது வ்ருதுஷின் முறையானது..

அந்நேரத்து இறுக்கம் குறைய சிறிது புன்னகைத்த தியா,“அகிலன் சொல்றது உண்மை தான் வ்ருதுஷ்..இரண்டாம் ஓலைச்சுவடி மட்டுமல்ல முதல் ஓலைச்சுவடியும் சக்ரவர்த்தி சார் கிட்ட தான் இருந்துச்சு..”,என்றாள்..

“உங்களுக்கு அது எப்படி தெரியும்..??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“நான் ஊட்டிக்கு கிளம்பும் முன் நானும் அப்பாவும் சக்ரவர்த்தி சாரை பார்க்க சென்றோம்..”

“வாட்..??உங்களுக்கு முன்னாடியே அப்போ அவரைத் தெரியுமா..??”

“இல்லை.. அவரை நான் முதலும் கடைசியுமாக பார்த்தது அன்று தான்..”

“ஓ..எப்போ எதுக்கு அவரைப் பார்க்க போனீர்கள்..??”

“பொதுவா எங்க அப்பா அவரோட வர்க் சர்கிள் நண்பர்களைப் பற்றி எதுவும் எங்களுடன் ஷேர் செய்ய மாட்டார்..ஆனால் அவர் செய்யும் வர்க்கை பற்றிய டிஸ்க்கஷனஸ் செய்வதுண்டு..

நான் ஊட்டிக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தாத்தா பாட்டிக்கு கிப்ட் வாங்க நானும் அப்பாவும் வெளியில் போயிருந்தோம்.. அப்போ சக்ரவர்த்தி சாரை மீட் பண்ணனும்னு சொல்லி அப்பா ஒரு பார்க்குக்கு கூட்டிட்டுப் போனாரு..அங்க வெச்சு அப்பா அந்த ஓலைச்சுவடிகளை அவருக்கு கொடுத்ததை பார்த்தேன்..”

“அவங்க இரண்டு பேரும் ஏதாவது பேசிக்கிட்டாங்களா..?? உங்களுக்கு ஏதாவது நியாபகம் இருக்கா..??”

“இல்லை வ்ருதுஷ்.. நான் அவங்க பேசிட்டு இருந்தப்போ பார்க்ல பார்த்த என் பிரெண்ட்ஸ் கூட விளையாட போயிட்டேன்..”

“ஹ்ம்.. எனக்கு என்னமோ அந்த ஓலைச்சுவடி சக்கரவர்த்தி சார் கிட்ட இருந்த மாதிரி தெரியல..”

“ஏன் அப்படி சொல்றீங்க..??”,என்று கேட்டாள் தியா..

“விபத்து நடந்த இடம் முழுசா தேடியிருக்காங்க.. ஆனால் அங்க சுவடி இருந்த மாதிரி எந்த ஒரு அறிகுறியும் இல்லை.. அகிலன்.. தியாக்கிட்ட நீ ஏன் அந்த கொலைகாரனை பற்றி எங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்ற..??”,என்று கேட்டான்..

“அந்த நபரை நீ நெருங்கிட்ட வ்ருதுஷ்.. இன்னும் ஒரு வாரத்திற்குள் உனக்கு அது யார் என்னனு தெரிஞ்சிடும்.. அந்த நபரை கண்டுபிடிக்க இரண்டு வருடங்கள் உழைத்த நீ ஒரு வாரம் பொறுமை காக்க மாட்டாயா..??”,என்று கேட்டது அகிலன்..

அதன் வார்த்தைகளில் பொருள் புரிந்தவன் சரி என்பது போல் தலையசைத்தான்..

“மூன்று பேரும் சாப்பிட்டு வாங்க.. நான் செழுவூர்க்குப் கிளம்பறேன்..”,என்றபடி மீண்டும் அந்த பிஷ் டாங் பின் சென்று மறைந்தது..

நிலவொளியில் நிலவுமகளாய் மயா ஒரு சிறு பாறையின் மேல் அமர்ந்து எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்..

“ஹாய் மயா.. என்ன யோசனை பலமாக இருக்கு..??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.