(Reading time: 16 - 31 minutes)

என்னவென்று உணரும் முன் அந்த சுமோவை இடித்துத் தள்ளிய அந்த லாரி நேராக நரசிம்ஹனின் காரையும் ஒரு இடி இடித்துவிட்டு நிற்காமல் சென்றது..

காரின் வெளியில் நின்று இளநீர் குடித்துக்கொண்டிருந்த நரசிம்ஹனும் வேதாவும் இரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்தனர்.. அதைக் கண்டு பயந்த க்ரியா அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தாலென்றாள், இளநீர் கடைக்காரரோ தனக்கு ஏதாவது பிரச்சனை வருமென பயந்து இடத்தை காலி செய்தார்..

சில மணி நேரங்களுக்குப் பின்..

விக்கி.. அழாதே.. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒன்னும் ஆகியிருக்காது..”,மனதில் பயமிருந்தாலும் அழுதுகொண்டிரிந்த விக்கியை சமாதனப்படுத்த முயன்றான்..

“எனக்கென்னமோ ரொம்ப பயமாயிருக்கு டா..நம்மளும் அவங்க கூடவே வந்திருக்கணும்..”,கதறல் குரலில் மொழிந்தான்..

“கவலைப்படாதே டா.. ஒன்னும் இல்லை..”,என்ற ரிக்கிக்கு அப்பொழுது தான் பப்புவின் ஞாபகம் வந்துது..

ன்யாகுமரிக்கு கிளம்பிய கார்களில் முதல் கார் (ராமக்ரிஷ்ணனுடையது) பெரியப்பா காரில் அமர்ந்திருப்பதால் சீராக போய்க் கொண்டிருந்தது..

குட்டீஸ்கள் இருந்த காரில் ஆட்டமும் பாட்டும் நிரம்பி வழிந்து சந்தோஷப் பூக்களை பரப்பிக் கொண்டிருந்தது..

“ரிக்கி.. அப்படிப்போடு பாட்டு போடுடா..”,பின்னிருக்கையில் இருந்த தம்பு கூறினான்..

“அது போர் அடிச்சிருச்சு டா..தல போல வருமா பாட்டு போடு ரிக்கி..”,என்றான் விக்கி..

“இங்கேயும் உங்க தல தளபதி சண்டையை ஆரம்பிக்காதீங்க டா..”,இது சுயோதன்..

பசங்க கூட்டத்தில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பப்பு,”தாத்தா..நான் சித்தப்பா கார்ல வரேன்..எனக்கு தூக்கம் வருது..”,என்றாள்..

அவள் கண்கள் தூக்கத்திற்காக ஏங்குவதைக் கண்ட தாத்தாவும் காரை நிறுத்தி பின்னால் வந்த தன் மகனின் காரில் அவளை ஏற்றிவிட்டார்..

ம்புலன்சின் அபாய சத்தமும் மனிதர்களின் கதறல்களும் மயக்கத்திலிருந்து விழிக்கவைத்தது க்ரியாவை..

தன் தாய் வழித் தாத்தா ப்ரனதீசன் தன்னை அனைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு,”தாத்தா.. அப்பா.. அம்மா..”,என்றபடி அழ ஆரம்பித்தாள்..

“குட்டிமா.. அழக்கூடாது.. ஒண்ணுமில்லை..”,என்று அவளை வருடிக் கொண்டுக்கத் தொடங்கினார்..

கதறல் சற்று குறைந்து கேவலக மாறியபொழுது அவள் எதிரில் ஒரு பசுவின் உடலையும் ஏழு மனித உடல்களையும் பள்ளத்திலிருந்து கிரேன் மூலம் தூக்கப்பட்டது.. அந்த கொடூரக் காட்சியைக் கண்டு ரிக்கி விக்கியுடன் சேர்ந்து சிலர் கதறுவதை கண்ட க்ரியா மீண்டும் மயங்கி சரிந்தாள்..

ரிக்கி விக்கி மற்றும் க்ரியாவிற்கு அவர்களது கடந்தகாலத்தை நினைவுபடுத்திய அகிலன் சிறிது நேரம் அமைதி காத்தது..

“நீங்க பாண்டிச்சேரி ரெஜிஸ்ட்ரேஷன் பற்றி சொன்னீங்களே..?? அது ஆக்ஸிடன்ட் பண்ண லாரியோடதா..??”,கனத்த மௌனத்தைக் கலைத்த ரிக்கி க்ரியாவிடம் கேட்டான்..

“ஆமா..ஆனால் அது ஒரு ஃபேக் நம்பர்..”

“நீங்க எங்க போய்ட்டு இருக்கீங்க..??”,என்று கேட்டான் விக்கி..

“செழுவூர்க்கு..”,என்றான் வ்ருதுஷ்..

“நாங்களும் அங்க தான் போறோம்..”,என்ற விக்கி ரிக்கியின் புறம் ஒரு பார்வை வீசினான்..

“நாலுபேரும் ஒரே இடத்துக்குத் தானே போறீங்க..?? ஒன்னாவே போலாமே..”,என்ற அகிலனை ஒத்தூதினான் வ்ருதுஷ்..

முதலில் சற்று தயங்கினாலும் அகிலனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு சரியென ஒத்துக்கொண்ட ரிக்கியும் விக்கியும் காரை இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு இவர்களுடன் செழுவூர் நோக்கி பயணிக்கத் தயாரானார்கள்..

செழுவூர்..

நான்கு நாட்களுக்கு முன் பெய்த மழையால் சிறு புற்கள் முளைக்கத் தொடங்கியிருந்தது செழுவூரில்..

கூடாரங்களை சுற்றி மழைநீர் தேங்கிவிட்டதால், அவைகளைப் பிரித்து மேடான பகுதியில் அதனை அமைத்துக் கொண்டிருந்தனர்..

“மயா.. நம்ம க்ரூப்க்கு புதுசா இரண்டு பேர் ஜாயின் பண்றாங்க தெரியுமா..??”,என்றான் எழில்..

“தெரியும் எலி.. சுஜன் அண்ணா சொன்னாங்க..”

“ஒரு வேலையும் இல்லாம நாம வெட்டியா இருக்கோம்.. இவங்க எதுக்கு வராங்கன்னு தெரியல..”

“நானும் அதான் நினைத்தேன்.. ஆனால் அன்னைக்கு அந்த கருடன் சொல்லுச்சே..யாரோ வருவாங்கன்னு..அது இவங்களா இருக்குமோ..??”

“இருக்கலாம் விக்ஸ்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.