(Reading time: 14 - 28 minutes)

“அதான் மூன்று மாதங்களுக்கு முன் நீ ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபொழுது கிடைத்த வேலை..”

“அது வந்து.. தாத்தாப் பாட்டியை..”

“எல்லார்க்கிட்டையும் சொல்ற பொய்யை என்கிட்ட சொல்லாத க்ரியா..”,என்றது அன்னம் கூர்மையாக..

“உனக்குத் தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே..அப்புறம் என்ன..??”,என்றாள் சற்று கடுப்பாக..

“கொவப்படாதே க்ரியா..நீ எப்போ அங்க போகணும்..??”

பெருமூச்சொன்றை விட்டவாறே,”அடுத்த வாரம்..”,என்றாள்..

“நாளை மறுநாள் அங்க கெளம்பு..”,என்றது அன்னம்..

“ஏன்..??”

“ஏன்னு கேள்வி கேட்காதே.. என் மேல் நம்பிக்கை இருந்தா கெளம்பு..”,என்றது அழுத்தமாக..

“சரி..”,என்று அரைமனதாக சொன்னவள்,”வ்ருதுஷை எதற்கு வரவெச்ச..??”

“அவனும் உன்னுடன் நீ போகும் இடம் வருவான்..”

“நானுமா..?? நான் எதுக்கு..??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“க்ரியாவின் பாதுகாப்பிற்கு..”

“அவளுக்கு எதாவது ஆபத்தா..??”,என்று பதற்றமாக கேட்டான் வ்ருதுஷ்..

“ஆபத்திருந்தா மட்டும் தான் நீ துணைக்கு போகனுமா..?? உனக்கு அங்க செஞ்சு முடிக்க வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு..”

“எனக்கு முடிக்கவேண்டிய விஷயமா..??என்னது..??”

“அங்கயே போய் தெரிஞ்சுக்கோ..”,என்றுவிட்டு,”இரெண்டு பேரும் ஒன்னாவே கெளம்புங்க..”,என்றது..

வ்ருதுஷை முந்திகொண்டு க்ரியா,“அவனுக்கு ஒரு வேலை கொடுத்திருக்கேன்..”,

என்றாள்..

“அதுக்கு வேற ஆள் ஏற்பாடு பண்ண முடியாதா..??”,கேட்டது அன்னம்..

முடியும் என்பது போல் தலையசைத்தான் வ்ருதுஷ்..

“அவளுடன் கிளம்ப நீயும் தயாராகு..”,என்றவிட்டு பறந்து சென்றது அன்னம்..

க்ரியா.. அன்னம் சொன்னமாதிரி நானும் உன் கூட வரேன்.. கேஸ் பார்த்துக்க நான் என் பிரென்ட் கிட்ட சொல்றேன்..”

“சரி.. எல்லாம் சரியா வருமா..??”,சற்று கவலையாக..

“அவனும் நானும் அவனும் தானே இத இவ்ளோ நாளா டீல் பண்ணுனோம்.. அவன் பார்த்துப்பான்..அதுவும் இப்போ இல்லாதவங்களுக்காக இருக்கறவங்க வாழ்க்கையை எனக்கு பணயம் வைக்க விருப்பமில்லை..”

அவன் கூறுவதை கேட்டு கண்கலங்கியவளை தோள் சாய்த்துக் கொண்டான் அந்த நல்ல நண்பன்..

“க்ரியா நீ வேலைக்கு வரத்தை பற்றி அந்த ஆர்க்கியோலஜிஸ்ட்க்கு கால் பண்ணி சொல்லிடு..நான் வரேன்..”,என்றபடி அவளிடமிருந்து விடைப்பெற்றான்..

காலை உணவு முடிந்ததும் தனது கைபேசியை எடுத்து ஆர்க்கியோலஜிஸ்ட்க்கு (தொல்பொருள் ஆய்வாளர்) டயல் செய்தாள் க்ரியா..

”ராமகிருஷ்ண ஆச்சார்யா ஹியர்..”

“சார்.. நான் க்ரியா பேசறேன்..”

“எஸ் மை சைல்ட்..ஹவ் ஆர் யூ..??”

“குட் சார்.. வாட் அபவ்ட் யூ..??”

“கிரேட் மை சைல்ட்.. திடீர்னு கால் பண்ணி இருக்க..??”

“நீங்க எனக்குக் கொடுத்த ஆபரை அக்ஸப்ட் செய்யறேன்..”

“என்னைக்கு ஜாயின் பண்ற..??”

“வில் பீ தேர் இன் டூ டேஸ்.. கூடவே என் பிரென்ட் ஒருத்தரும் என் ஹெல்ப்க்கு வருவாரு..அதுக்கு உங்க பர்மிஷன் வேண்டும்..”

“முடிவு பண்ணிட்ட.. பார்க்கலாம்..”,என்றபடி போனை அணைத்தார்..

எயர் ஏஷியா விமானம் - பிலிப்பைன்ஸ் டூ சென்னை

திவாசி குடியிருப்பிற்கு அகிலனுடன் வந்தடைந்த ரிக்கியும் விக்கியும் ட்ரெக்கிங் வந்திருந்தவர்களிடம் எமெர்ஜென்சி என்பதால் தங்களால் இந்த ட்ரிப்பில் கலந்துகொள்ள முடியாது என்றும் பலவன் தீவிற்கு அவசரமாக போக வேண்டும் என்றும் கூறினால்..

அவர்களின் பரபரப்பையும் அவசரத்தையும்க் கண்டு சில ஆதிவசிகளோடு அவர்களை பலவன் தீவிற்கு அனுப்பி வைத்தனர் ட்ரெக்கிங் வந்திருந்தோர்..

ரெசோர்டிற்கு வந்து சேர்ந்தவர்கள் மாலையில் சென்னைக்கு ஒரு பிளைட் இருப்பதை அறிந்து அதற்கு புக் செய்து இப்பொழுது ப்ளைட்டில் அமர்ந்திருக்கின்றனர்..

“அகிலனை நம் கூட கூட்டிட்டு போக சொல்லி தானே வைட்டி நம்ம கூட அதை அனுப்புச்சு.. ஆனா இந்த அகிலன் என்னடானா ரெசார்ட் வந்ததும் நீங்க இந்தியாவுக்கு ரீச் ஆகறதுக்கு முன்னாடி நான் இருப்பேன்னு சொல்லி பறந்திருச்சு..”,என்று கம்ப்ளைன்ட் வாசித்தான் விக்கி..

“அதுகிட்ட என்னமோ பவர் இருக்கு விக்கி.. வந்துரும்..”,என்றபடி சீட்டில் நன்றாக சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்..

சென்னையை நோக்கிய இவர்களது பயணம் தொடங்கியது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.