(Reading time: 14 - 28 minutes)

அவன் கூறுவதை ஜீரணிக்க முடிந்தும் முடியாமலும் மண்டையை உருட்டினான் விக்கி..

அகிலனை நோக்கி ரிக்கி,”இப்போ நாங்க என்ன பண்ணனும்னு சொல்லு..”,என்றான் அமைதியாக..

“என்கூட நீங்க என் வீடு வரைக்கும் வரணும்..”,என்றபடி தன் பொந்தை சுட்டிக் காட்டி கிளை வழியே பொந்துக்குள் அவர்களை அழைத்துச் சென்றது அகிலன்..

ருள் சூழ்ந்திருந்த அந்த சிறு பொந்திற்கு விளக்கேத்த வந்து சேர்ந்தது அந்த மின்மினி..

நம்ம ஊர் பைவ் ஸ்டார் ஹோட்டலை மிஞ்சிவிடும் அழகுடன் இருந்த அந்த பொந்தை ஸ்.. ஸ்.. மாளிகையைக் கண்டு பிரமித்துப் போயினர் இருவரும்..

வட்டவடிவிலிருந்த பொந்தின் நுழைவாயில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.. உள்நுழையும் பொழுதே கண்களையும் மனதையும் குளிர்விப்பது போல் எதிரே ஒரே நீர்வீழ்ச்சி.. அமரவென சின்ன சின்ன மரத்துண்டிலான பலகைகள்.. 

பொந்தில் சுவரில் பூக்களால் அலங்காரம்..மனங்கமிழும் மலர்களின் மனம் நாசியை கடந்து இதயத்தைத் தொட்டு ஒரு வகை அமைதியை உருவாக்கியது..

“விக்கி, ரிக்கி இவர் தான் உங்களை பார்க்கணும்னு சொன்னாரு..”,பக்கவாட்டில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவரை சுட்டிக் காட்டியது அகிலன்..

அடுத்த அதிர்ச்சிக்கு தயாரானவர்கள் அகிலன் காட்டிய திசை நோக்கித் திரும்பினர்..

பால் வண்ண நிறத்தில் சாந்த ஸ்வரூபமாய் அவர்களை நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தது ஒரு பசு..

கிலன் தலைவன் என்றவுடன் அதுவும் ஒரு அணிலாக இருக்கும் என நினைத்தவர்கள் அங்கிருந்த பசுவைக் கண்டு கண்களை விரித்தனர் இருவரும்..

பசுவை கண்ட சந்தோஷத்தில் ரிக்கி,விக்கியும் அதன் அருகில் சென்று “வைட்டி” என்றபடி அதனை அணைத்துக் கொண்டனர்..

“நீங்க உயிரோட இருக்கீங்களா..?? நாங்க அன்னைக்கு எங்க வீட்டிக்கு பின்னாடி பார்த்தது..??”,வினவினான் ரிக்கி..

“அன்று நீங்கள் கண்ட அழுகிப்போன பசு நான் அல்ல..அது வேற..”

“இதே மாதிரி அன்னைக்கு நாங்க பள்ளத்துக்குள்ள பார்த்த பிணங்கள் அந்த நாலு பேரோடு இல்லைன்னு சொன்னால் நல்லா இருக்கும்..”,விரக்தியில் கூறினான் விக்கி..

“அந்த நான்கு உடல்கள் உங்களவர்களுடையது அல்ல.. உங்களவர்கள் உயிருடன் இருக்கின்றனர்..”

நம்பாமல் ரிக்கியும் விக்கியும் தன்னை வெறித்து நோக்குவதை கண்ட வைட்டி,“நான் உரைத்தது உண்மைதான்.. அன்று நீங்கள் பார்த்த உடல்கள் அவர்களது உடல்கள் அல்ல..”,என்றது,,

“அப்போ அன்னைக்கு நடந்த விபத்து..??”,இது ரிக்கி..

“அன்று விபத்து நடந்தது போல் ஒரு தோற்றம் உண்டாக்கப் பட்டது..”

“அப்படீனா அவங்க நாலு பேரும் இப்போ எங்கே..??”,என்று கேட்டான் விக்கி..

“பாதுகாப்பா இருக்காங்க..”

“எங்க..??”,இது ரிக்கி..

“அதை நீங்க தான் கண்டுபிடிக்கணும்..”

“நாங்களா..??”

“ஆமாம்.. இவர்கள் எங்கு மறைந்தனர் என்று கூறப்பட்டதோ அங்கு சென்று தேட ஆரம்பியுங்கள்.. நீங்கள் கேட்காமலே உதவி செய்ய காத்திருக்கின்றனர் சிலர்.. தேவைப்படும்பொழுது நானும் வருவேன்..”

“சரி.. எப்போ போகணும்..??”,என்றபடி தயாரானார்கள் இருவரும்..

“இன்றே..”,என்ற வைட்டி இருவரையும் ஆசீர்வதித்த அகிலனை காட்டி,”எனது சீடன் இவன்..உங்களுக்கு துணையாய் அழைத்து செல்லுங்கள்..”,என்றபடி எழுந்து போந்தின் நுழைவாயிலுக்கு எதிரில் இருந்த நீர்வீழ்ச்சிக்கும் புகுந்து மறைந்தது..

மனதில் எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்த இருவரையும் நோக்கி,”ரிக்கி,விக்கி கெளம்பலாம்..விடியல் தொடங்கிவிட்டது..”,என்றது..

குறிப்பு : Northern flying squirrel (Glaucomys sabrinus) எனப்படும் பறக்கும் அணில்கள் அமெரிக்காவிலுள்ள Yosemite Valley என்னும்  இடத்தில் காணப்படுகிறது..

செழுவூர்

"நான் என்ன செஞ்சுக்கிட்டிருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா..??",என்று திகைதவளுக்கு விண்ணின் மாயாஜாலம் அவள் எதிரில் நின்றுகொண்டிருக்கும் அந்த உருவத்தை இம்முறை வெளிச்சம் போட்டு காட்டியது..

ம்பீரமாக பறவைகளின் அரசன் கருடன் தன் எதிரில் நிற்பதை கண்டவள்,”நீங்க தான் எங்க அப்பா சொன்ன வழிகாட்டியா..??”

“நானே தான்.. சமயம் வரும்பொழுது உன் முன் தோன்றுவேன் என உன் தந்தையிடம் சத்தியம் செய்துகொடுத்தவன்..”

ஒரு வகையான மகிழ்ச்சியூற்று தியாவின் மனதில் தோன்றியது..

“நீ சரியான பாதையில் தான் பயனிக்கின்றாய் பெண்ணே..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.