(Reading time: 14 - 28 minutes)

“அப்புறம் ஏன் நான் நினைத்த அடைய முடியலை..??”

“உன் ஒருத்தியால் மட்டும் இதனை சாதிக்க முடியாது.. கௌரவர்களை அழிக்க கிருஷ்ணனுக்கு பாண்டவர்கள் எவ்வாறு தேவைப்பட்டர்களோ அவ்வாறு இந்த கிருஷ்ணாவிற்கும் சிலர் தேவை..உன்னுடன் இருக்கும் இந்த மூவர் போக இன்னும் சிலர் உன்னை இன்னும் ஐந்து தினங்களில் வந்தடைவர்..”

“நீங்க சொல்றதை பார்த்தால் அவர்கள் வந்தால் தான் என்னால் என் இலட்சியத்தை அடைய முடியுமா..??”

“ஆம் பெண்ணே.. பொறுமையாக இரு.. விரைவில் நல்லதே நடக்கும்..”,என்றுவிட்டு தன் சிருகுகளில் ஒட்டியிருந்த நீரை மயங்கியிருந்தோரின் முகத்தில் தெளித்தது..

நீர் பட்ட சில நொடிகளில் தியாவின் எதிரில் ஒரு கருடன் இருப்பதைக் கண்டு என்னவென்று விசாரிக்க அவசரமாக எழுந்தனர்..

மூவரும் எழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த கருடன் தன் உருவத்தை ஒரு வயதான மனிதனாக மாற்றி மீண்டும் கருடனாக மாற்றிக்கொண்டது.. ஆம்.. அவர்கள் காணவந்த அந்த பெரியவர் தான் பறவைகளின் அரசனான கருடன்..

தங்கள் முன் நிகழ்ந்த இந்த உருமாற்றம் மயங்கி எழுந்தோற்கு அதிர்ச்சியையும் தியாவிற்கு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது..

“தியா என்ன நடக்குது இங்க..??”,அதிர்ச்சியிலிருந்து முதலில் மீண்டது சுஜன் தான்..

“நம்ம தேடி வந்த தாத்தா இவர் தான்..”

“அது தெரியுது.. ஆனால் இவர் எப்படி கருடனா இருந்து மனுஷனா மாறி மீண்டும் கருடனா மாறினார்..??”,என்று கேட்டான் எழில்..

“எனக்கும் ஒன்னும் புரியல அண்ணா..”,என்றாள் தியா அப்பாவியாக..

“நீங்க என்ன சித்தரா..??”,என்று கருடனிடம் கேட்டான் எழில்..

“நான் சித்தனெல்லாம் அல்ல.. என்னைத் தேடி நீங்கள் வந்த செய்தி என்ன..??”

“இந்த ஊரில் புதைப்பட்டிருந்த ஒன்றை பற்றிக் கேட்க வந்தோம்..”,என்றான் எழில்..

“இவ்வூரில் பல மர்மங்கள் புதைந்துள்ளது..எதை பற்றி நீ கேட்கிறாய்..??”

“நெறைய மர்மங்களா..??”, என்றாள் மயா..

“ஆம் பெண்ணே.. நீங்கள் எதை பற்றிக் கேட்கின்றீர்..”

“நாங்க கண்டுபிடித்த கோயிலைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்..”,என்றான் சுஜன்..

“ஹா.. ஹா..”,மண்டமெங்கும் எதிரொலிக்க சிரித்தது கருடன்..

“நாங்க என்ன கேட்டுட்டோம்னு இப்படி சிரிக்கறீங்க..??”

“இந்தக் கோயிலைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்..”

“எங்களைப் பற்றித் தெரிஞ்சுக்க என்ன இருக்குது..??”,இது மயா..

“நிறைய இருக்கின்றது..”

“தெளிவா சொல்லுங்க.. எங்களுக்கு புரியல..”,என்றாள் மயா..

“புரியும் காலம் நெருங்கிவிட்டது பெண்ணே..இன்று விடியல் தொடங்கி ஏழாம் நாள் எல்லாம் தெளிவாகும்..”,என்றபடி உதித்துக் கொண்டிருந்த கதிரவனை நோக்கிப் பறந்தது கருடன்..

நடந்தது மெய்யா பொய்யா என்று உணர முடியாமல் மூவரும் மண்டபத்திலேயே அமர்ந்தனர் தெளிவில்லாத வானத்தை பார்த்தபடி..

தியாவின் மனமோ கருடனின் வார்த்தைகளிலேயே உழன்டு கொண்டிருந்தது.. சில நிமிடங்கள் மற்றவர்கள் போல் வானத்தை வெறித்தவள் ஏதோ முடிவு செய்தவளாக எழுந்து,”இங்க நடந்து நிஜமான்னு தெரியாம இதபத்தி ஆச்சார்யா சார்க்கிட்ட சொல்லவேண்டாம்..கெளம்பலாம் வாங்க..வானம் வெளுதிருச்சு..”,என்ற தியாவை தொடர்ந்து கூடாரம் நோக்கி செல்லத் தொடங்கினர் மூவரும்..

சென்னை

"நீ எப்படி இங்க வந்தேன்னு நான் சொல்லவா..??",பக்கவாட்டிலிருந்து ஒரு குரல் ஒலித்தது..

குரல் வந்த திசையை நோக்கியவர்கள் அங்கு ஒரேயிடத்தில் பறந்தபடி இருந்த அன்னப் பறவையைக் கண்டு அழகாய் ஆச்சர்யமடைந்தனர்..

“ஹே நீ இங்க என்ன பண்ற..??”,இருவரும் ஒரே நேரத்தில் அதனிடம் கேட்டனர்..

“உங்க ரெண்டு பேர்க்கிட்டயும கொஞ்சம் பேசவேண்டும்..அதான் உங்களை பார்க்கவேந்தேன்..”

“சரி சரி.. நான் எப்படி வந்தேன்..”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“உன்னை நான் தான் வழிமாரவெச்சு என் மந்திரத்தால் இங்கு வரவைத்தேன்..”,என்று பாவமாக லுக் விட்டது..

“ம்..என்னது வழிமாரவச்சியா..??”,பாசமாக முறைத்தபடி கேட்டான் வ்ருதுஷ்

லுக்கை மாற்றாமல் ஆம் என்று தலையசைத்த அன்னத்தைக் கண்டு சிரித்தபடியே,”என்ன விஷயம்..??”,என்று கேட்டாள் க்ரியா..

“நீ ஏன் உனக்கு பிடிச்ச வேலைய வேண்டாம்னு சொல்லிட்ட..??”

“எந்த வேலை..??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.