(Reading time: 10 - 19 minutes)

11. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்

என்னாகும் உயிரே உயிரே....

என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்

என்னாகும் உயிரே உயிரே....!

 

இரவில் வந்தது சந்திரனா

என் அழகே வந்தது உன் முகம்தான்

வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே

உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா

பகலில் இருப்பது சூரியனா

என் அழகே உன் இரு பார்வைகள்தான்

உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்

என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

 

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

 

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்

உலகையே மறக்கலாம்

வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்

பறக்கலாம் மிதக்கலாம்

காற்றாகி கைகோர்த்து போவோமே

முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

டையிலிருந்து கிளம்பியவர்கள் அருகிலிருந்த ஹோட்டலில் அமர்ந்திருந்தனர்..கார்த்திக் வேண்டியவைகளை ஆர்டர் செய்துவிட்டு திரும்ப சஹானா அப்போதும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..

என்னாச்சு சஹி அப்படி பாக்குற??

இல்ல தீடீர்நு இப்படி வெளில கூட்டிட்டு வந்துருக்கியே அதான்..

அடிப்பாவி நா உன்ன வெளிலேயே கூட்டிட்டு போகாத மாறி சொல்ற?

அவ்ளோ மோசம் இல்லதான் இருந்தாலும் எல்லார்ட்டையும் சொல்லிட்டு கெத்தா வந்தியே அதான் என்று கண்சிமிட்டி கூற

சரியான வாலுடீ நீ..

ஹப்பாடா இப்போதான் நீ என்ன லவ் பண்றநு கொஞ்சம் நம்பிக்கை வந்துருக்கு கார்த்திக்..

அடிப்பாவி என்ன சொல்ற??

இல்ல எனக்கு யாரும் டீ போட்டு கூப்டாலே பிடிக்காது ஆனா அப்பா அம்மாவ கூப்பிடும்போது ஒருமாறி நல்லாயிருக்கும் இப்போ நீ என்ன அப்படி கூப்பிட்டவுடனே ஒருமாறி ஜாலியா இருக்கு என தோள்குலுக்கிச் சிரித்தாள்...

வாய்விட்டே சிரித்தவன் சத்தியமா நீ ஒரு எல் கேஜி தான்.. .கல்யாணத்துக்கப்பறம் ரொம்ப கஷ்டம்தான் என்று கூறி மறுபடியும் சிரித்தவாறே வந்திருந்த உணவை எடுத்து வாயில் வைக்கபோக சஹானா சாப்பிடாமலே அமர்ந்திருப்பதை கண்டு என்னவென கேட்க வாய்திறந்து ஊட்டிவிடுமாறு செய்கை செய்தாள்..தன்னவளை ரசித்தவாறு அவளிடம் உணவை நீட்ட அவள் உண்ண ஆரம்பித்தாள்..

ங்கு ஷரவ் சிவாவோடு பீச்சில் அமர்ந்திருக்க,ஷரவ்  இருக்குற விலைவாசில எதுக்கு என்கேஜ்மெண்ட்ட தனியா கல்யாணத்தை தனியா பண்ணிகிட்டு பேசாம உங்க அண்ணா கல்யாணத்தனைக்கே நாமளும் மேரேஜ் பண்ணிப்போம் என்ன சொல்ற??

ஹா அதெல்லாம் முடியாது..இன்னும் இரண்டு வருஷத்துக் கதையவே பேசி முடிக்கல அதுக்குள்ள மேரேஜ்ஜா நோ வே..

நீ இந்த இரண்டு வருஷத்தை விடவே மாட்ட போலேயே..அப்படி என்னதான் தெரினும் உனக்கு..

நல்லா கேட்டீங்க போங்க எனக்காக ஒருத்தர் ரெண்டு வருஷம் காத்திருந்தாருங்கிறது எவ்ளோ பெரிய விஷயம் அதைப்பத்தி எனக்கு தோணுற அப்போ எல்லாம் கேட்டுட்டே தான் இருப்பேன்..ஆமா எந்த நம்பிக்கைல நா கிடைச்சுருவேன்னு நினைச்சீங்க??

ம்ம் உண்மைதான் ஷரவ்..உன்னை பாத்த நாள்ல இருந்து இங்க குன்னூர்லநு தேடினேன்..ஆனா உன் பேர் கூட தெரியாம எப்படி தேட முடியும்நு அப்போ எனக்கு தோணவேயில்ல..என் ப்ரெண்ட்ஸ்லா திட்டினாங்க..என்னடா சின்ன பையன்மாறி பேசுற எந்த டீடெயில்லுமே இல்லாம என்னனு தேடுறதுநு கேட்டாங்க நாள் ஆக ஆக எனக்கும் நா பண்றது முட்டாள்தனம்நு தோணிச்சு..அதே நேரம் வீட்ல கல்யாண விஷயமா பேச அவங்ககிட்டயும் விஷயத்த சொன்னேன்..ஆனா அம்மா அப்பா ரெண்டு பேருமே கோபம்லா படல ப்ரெண்ட்ஸ் கேட்ட கேள்விதான் அவங்களுக்கும்..எனக்கும் என்னோட சந்தோஷத்துக்காக அவங்கள வருத்தப்பட வைக்குறதுல இஷ்டமில்ல அதனால ரெண்டு வருஷம் டைம் கேட்டேன்..கேரியர்ல இம்ப்ரூவ் ஆகனும் அதே நேரம் அதுக்குள்ள உன்னை பாத்துட்டேன்னா உன்னதான் கல்யாணம் பண்ணிப்பேன்..ஒரு வேளை நீ கிடைக்கலனா கண்டிப்பா அம்மா அப்பா பேச்ச கேட்டுத்தான் நடந்துருப்பேன் பட் தேங்க் காட் அதுகுள்ள நா உன்ன பாத்துட்டேன் என்றவாறு அவளை பார்க்க அவனையே கண்கொட்டாமல் பார்த்திருந்தவளை தோள்தட்டி என்னவென கேட்க..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.