(Reading time: 10 - 19 minutes)

என்னவோ அவனும் மூஞ்சியும் எனக்கு அவன பாத்தாலே பிடிக்கல..போலாம் மாமா..அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து கிளம்பினான்..

ஹானாவை வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டை அடைந்தவன் தங்கள் ட்ரிப் பிளானை பற்றி பெற்றவர்களிடம் கூற..கீதா தான் பயந்தார்..என்னப்பா கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் சரி வருமாயாராவது எதாவது சொல்ல போறாங்க..

ம்மமா எல்லாரும் சேர்ந்து தான போறோம் அங்கயும் சஹானாவோட பூர்வீக வீட்ல தான் தங்க போறோம் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்கம்மா..

என்னவோப்பா இந்தகால பசங்களுக்கு எல்லாம் விளையாட்டுதான் பாத்து போய்ட்டு வாங்க என்றவாறு மோகனும் கீதாவும் நகர,அண்ணா என்ன ஏன் கோர்த்துவிடுற??நீங்க போய்ட்டு வாங்க..

என்ன ஷரவன் ஜஸ்ட் அ பேமிலி ட்ரிப் ஜாலியா போய்ட்டு வரலாம் வாடா..நாம ஸௌத் சைட்லா போனதேயில்லையே இதுவரை..உனக்கும் போட்டோ எடுக்க நிறைய சீனரீஸ் கிடைக்கும்.. அப்பறம் ஷரவ்  சிவாட்ட நானே கேக்கவா இல்ல நீ கேக்குறியா??போ அண்ணா நீயே கேட்டுக்கோ..என்று உள்ளே ஓடிவிட மொபைலை கையில் எடுத்தவாறு வாசலுக்கு வந்தவன் சிவாவை அழைத்து விஷயத்தை கூற,

வாவ் செம ப்ளான் கார்த்திக்ஆமா டீச்சரம்மாகிட்ட கேட்டீங்களா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் அவங்க தான்..

ஹாஹா அதெல்லாம்கேட்டாச்சு தைரியமா வாங்க

க்ரேட்தென் நாளைக்கு மீட் பண்ணி ப்ளான் பைனலஸ் பண்ணிடலாம்..

போனை வைத்துவிட்டு திரும்பியவனின் கண்களில் ஏதோ வித்தியாசமாய் பட அதனருகில் lசென்றான்..அரச மரத்தின் ஒரு கிளை கீழே விழுந்துகிடக்க அதை கையில் எடுத்தவனுக்கோ தன் கண்களையே நம்ப முடியவில்லை அழகழகான ஓவியங்கள் வயல்வெளி,வீடு,நதி அதையடுத்து ஒரு பெரிய கோவில் அதையே பார்த்திருந்தவனை ஷரவன் அழைக்கும் சத்தத்தில் சட்டென கிளையை கீழே விட வா அண்ணா அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க.. இதோ வரேன் என்றவன் கீழே பார்க்க அது வெறும் இலைகளாய் இருந்தது..

என்ன அண்ணா எதையாவது தொலைச்சுட்டியா??

அதெல்லாம் ஒண்ணுமில்ல டா வா போவாம் என அங்கிருந்து நகர்ந்தான்..

றுநாள் டிர்ப் ப்ளான் பைனலைஸ் செய்வதற்காக சிவாவை பார்க்க சென்றிருந்தான்..கார்த்திக் கொஞ்ச நாளாவே வொர்க் ஜாஸ்தி நானே ப்ரேக் எடுக்கனும்னு நினைச்சேன் கரெக்ட் டைம்ல இந்த ப்ளான் அமைஞ்சுடுச்சு..நம்ம கார்லயே போய்டலாம்..நீங்களும் ட்ரைவ் பண்ணுவீங்க சோ மேனேஜ் பண்ணிக்கலாம்..என்ன கார்த்திக் நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன யோசிக்குறீங்க??

ஆங்ங் இல்ல ஒரு கோவில் பாத்தேன் ரொம்ப நல்லாயிருந்தது சிவா..

ஓ நைஸ் எங்கயிருக்கு??

எங்க வீட்டு வாசல்ல..

வாட்?????

ஸாரி நா உங்ககிட்ட முழுசா விஷயத்தை சொல்லல..என நடந்தவற்றை கூற சிவா தலையில் கை வைத்துவிட்டான்..

சுத்தம் இவ்ளோ நாள் சஹானா தான் யாருக்கோ டப்பிங் குடுத்துட்டு இருந்தானா இப்போ நீங்க ராமநாராயணன் படம் மாறி விஷுவல் எபெக்ட்லா குடுக்குறீங்க..வர வர நம்ம நிலைமை சூனியகாரிட்ட மாட்டின சோட்டாபீம் மாறி ஆய்டுச்சு..என சோகமாய் கூற,

தன் சிந்தனையையும் மீறி கார்த்திக் சிரித்துவிட்டான்..

ம்ம் சிரிங்க சிரிங்க இன்னும் அங்க போனா என்னெல்லாம் நடக்குமோ கடவுளே நீ தான் காப்பாத்தனும்..

அடுத்த இரண்டு நாட்கள் ரெக்கை கட்டிபறக்க இரவு 8 மணிக்கு சஹானாவோடு சிவா கார்த்திக் வீட்டை அடைய இனிதே ஆரம்பமானது அவர்களின் பயணம்..சிவா அருகில் கார்த்திக் அமர மற்ற மூவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்..திண்டிவனம் தாண்டிய மோட்டலில் உணாவை முடித்துவிட்டு கிளம்ப கார்த்திக் வண்டியை இக்கினான்..சுமோ டைப் வண்டி என்பதால் ஷரவன் ஷரவந்தி பின்னிருக்கை களில் படுத்துக் கொள்ள சஹானா நடுவில் படுத்திருந்தாள்..அதிகாலை ஐந்து மணி சில்லென்று அடிக்கும் வாடை காற்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசெலென வயல்வெளிகள்..அத்தனை ரம்மியமான காலை வேளையை முதன்முறையாய் அனுபவித்தவன் கண்களில் படுகிறது அந்த பெயர்பலகை..

அம்பாசமுத்திரம் நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.!!!!!!

ஹாய் மக்களே இன்றைய எபி எப்படியிருந்தது..அனைவரையும் அம்பாசமுத்திரத்திற்கு வரவேற்கிறேன்..எடுத்த எபில ஊரை சுத்திக் காட்றேன்..

தொடரும்

Ninnai saranadainthen - 10

Ninnai saranadainthen - 12

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.