(Reading time: 18 - 36 minutes)

12. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

ஏ.. தந்தன தந்தன தந்தா..

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா..

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்

இங்கே ஏதும் கேட்கவில்லையே

பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்

பார்க்க ஒரு சோலையில்லையே

வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு

துப்ப ஒரு வழியில்லையே

ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு

ஆட ஒரு ஓடையில்லையே

இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு

அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு

ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

விடிந்தும் விடியாத அந்த காலைவேளையிலேயே வாசல் தெளித்து கோலம் போட்டு அதன் நடுவில் சாணியைபிடித்து செம்பருத்தி பூ வைக்கும் பெண்களை பார்த்தவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது..சிவா இன்னமும் கூட இந்த பழக்கமெல்லாம் ஃபாலோ பண்றாங்களே ஆச்சரியமா இருக்கு…

ம்ம் இதோ பின்னாடி பாருங்க நம்ம பத்தினி தெய்வங்கள் என்ன தூக்கம் தூங்குதுங்கநு அப்போ இதெல்லாம் பாத்தா ஆச்சரியமா தான் இருக்கும் இதுங்கள எழுப்பிவிடுறேன் பர்ஸ்ட்..

ஹா ஹா விடுங்க சிவா பக்கத்துல போய்ட்டு எழுப்பிக்கலாம்..அது சரி இப்படி பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்களே கார்த்திக்..சஹானா எழுந்துரு..

ஏ எருமை என்ன காலங்காத்தல வந்துருக்க பெரிம்மா சாப்பாடு போடமாட்டேன்னு சொல்லிட்டாங்களா??என அரைகுறையாய் அவள் உளர

அய்யோ கார்த்திக் முன்னாடி மானம் போகுது அடச்சீ எழுந்துரு..

மாமாவா நீ என்ன பண்ற இங்க??

 மாமா???இதுவேறயா கடவுளே பாரு எனக்குநு ஒண்ணு இருக்கே இப்படி எதாவது பாசமா பேரு வச்சு என்னைக்காவது கூப்ட்டுருக்கா ம்ம் அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்..

என்ன அங்க சத்தம்???-ஷரவந்தி..

எழுந்துட்டியா ஷரவ்ம்மா..சும்மா பேசிட்டு இருந்தேன்டா..கார்த்திக் அனைத்தையும் கண்டு சிரித்தவாறே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்..சிவா வழி சொல்ல அடுத்த 15 நிமிடங்களில் வீட்டை அடைந்தனர்..மேலப்பாளையம் தெரு விநாயகர் தெரு நடுவில் கோவிலில் கம்பீரமாய் வீற்றிருக்க நான்கு புறங்களீலும் தெரு முழுவதும் வீடுகள்..கார்த்திக் இறங்கி வீட்டை பார்க்க முதல் ஆச்சரியம் அவனுக்கு காத்திருந்தது..அவன் வீட்டு வாசலில் கண்ட அதே வீடு..நடுவில் கம்பீரமாய் மாடியோடு அந்த வீடு அமைந்திருக்க அதை சுற்றிலும் சிறு சிறு வீடுகள் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தது..அவர்கள் இறங்கிய அடுத்த நொடி உள்ளிருந்து பின் நாற்பதுகளில் ஒருவர் ஓடி வந்தார்..

வாங்க வாங்க கண்ணுகளா..சிவா தம்பி எப்படியிருக்கீக..என்னமா வளந்துட்டீக..அம்மா அப்பாலா சுகந்தானா???

மணி அண்ணா கொஞ்சம் மூசச்சு வாங்கிக்கோங்க எல்லாரும் நல்லாயிருக்காங்க..நீங்க எப்படியிருக்கீங்க??கௌரி எப்படியிருக்கா??

எனக்கென்ன தம்பி நல்லாயிருக்கேன்..தம்பிதான் நம்ம வீட்டு மாப்ளையா..ஆமா எங்க சஹானாம்மாவ காணும்???

அதற்குள் அவரின் முதுகுப்புறம் சென்றவள் அவரின்மேல் உப்புமூட்டை ஏறி,,மணி அண்ணா எப்படியிருக்கீங்க??என்றவாறு முன் வந்தாள்..

சஹானாம்மா இன்னும் நீ பழசையெல்லாம் மறக்கவேயில்ல..என்றவரின் கண்கள் ஆனந்தத்தில் நனைய ஆரம்பித்தது..

என்ன அண்ணா உங்கள எப்படி மறப்பேன்..உங்களுக்கும் கௌரிக்கும் என்னலா வாங்கிட்டு வந்துருக்கேன் பாருங்க..என்றவாறு துள்ளி குதித்து முன் சென்றவளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் கார்த்திக்..

அவ அப்படிதான் கார்த்திக்..இங்க வந்தாலே அவளுக்கு சகலமும் மணி அண்ணாதான்..பார்ட்னர் இன் க்ரைம்..அவ பண்ற தப்பெல்லாம் பாட்டிட்ட மறைச்சு தான் திட்டு வாங்கிப்பாரு..பாட்டி தாத்தா காலத்துக்கு அப்பறம் இந்த வீட்டையெல்லாமே வாடைக்கு விட்டுட்டோம் இவருதான் பொறுப்பா பாத்துக்குறாரு..அவரும் அவரு பொண்ணும் அந்த வீட்ல தங்கிருக்காங்க..என்றவாரு உள்ளே நுழைந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.