(Reading time: 18 - 36 minutes)

றுநாள் பொழுதும் ரம்மியமாய் விடிய கார்த்திக் சிவா மணி மூவரும் தங்களுக்கான வேலைகளை குறித்துக் கொண்டு அனைவரோடும் உணவருந்த தயாராக கௌரி அனைவருக்கும் உணவை பரிமாறினாள்..அக்கா எப்படியிருக்கீங்க??

ஹே கௌரி நா சூப்பரா இருக்கேன் நீ எப்படியிருக்க நைட் சீக்கிரமே தூங்கிட்டேன் அதான் உன்னை பாக்க முடில இரு நா உனக்காக வாங்கிட்டு வந்த ட்ரெஸ்லா ரூம்ல இருக்கு எடுத்துட்டு வாரேன் என்றவாறு உள்ளே சென்று எடுத்து வந்து அவளிடம் கொடுக்க சிறு புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டவள் அங்கிருந்து நகர்ந்தாள்..அவளையே பார்த்திருந்த ஷரவனை நோட்டமிட்டவாறே சிவா கார்த்திக்கிடம் என்ன கார்த்திக் அதுக்குள்ள அடுத்த கல்யாணத்துக்கு ஆள் ரெடி ஆகுது போலயே என்று முடித்த அடுத்த நொடி ஷரவனுக்கு புரையேற கார்த்திக் சிறு சிரிப்போடு உணவருந்த ஆரம்பித்தான்..

ஐயோ மாமா நா தற்செயலா பாத்தத வச்சு எதுக்கு இப்படி கோர்த்து விடுறீங்க..

மச்சான் வீட்டுக்கு ஒரு நல்லவங்க போதும் அது உங்க அண்ணணா மட்டும் இருக்கட்டும்..நேத்து அந்த பொண்ண பிடிச்சு வச்சு மொக்க போட்டுட்டு இருந்தததான் பாத்தேனே..

அதெல்லாம் ஒண்ணுமில்ல அவங்க சைக்காலஜி படிக்கிறேன்னு சொன்னாங்க அதான் டீடெய்ல் கேட்டுட்டு இருந்தேன் மத்தபடிலா ஒண்ணுமில்ல..

ம்ம் ஏதோ சொல்ற என அடுத்து அவன் ஏதோ கூற வாயெடுக்க கௌரி உள்ளே வர பேச்சை நிறுத்தியவாறு ஷரவனை பார்த்து சிரித்தான்..இப்படியாய் உணவருந்தி முடிக்க இன்னைக்கு எங்க போலாம் மாமா??என அன்றைய ப்ளானைப் பற்றி கேட்க,

சர்ப்ரைஸ் நா உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் எல்லாரும் ரெடினா போலாம்..

மமாமா உனக்கு இந்த ஊரே தெரியாது நீ எனக்கு சர்ப்ரைஸ் தர போறியா எங்கனு சொல்லு??

அதெல்லாம் சொல்ல முடியாது வா போலாம் என்றவாறு காரில் அமர கார்த்திக் சஹானா அருகில் அமர்ந்து கொள்வதாய் ஏற்கனவே கூறியிருக்க ஷரவ் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்..கௌரியும் ஷரவனும் பின்னிருக்கைகளில் எதிரெதிராய் அமர்ந்தீருக்க சிவா கண்ணாடி வழியே அவனை பார்த்து சிரிக்க ஷாரவன்கண்களால் வேண்டாம் என்பதுபோல் ஜாடை செய்ய,

ஏன் என்ன பாத்தாலே ரெண்டு பேரும் சிரிக்குறீங்க??-கௌரி..

சட்டென அவள் இவ்வாறு கேட்பாள் என்பதை எதிர்பாராதவன் ஐயோ அப்படிலா ஒண்ணுமில்லங்க நாங்க எதார்த்தமா தான் சிரிச்சோம் அது கரெக்டா நீங்க இருக்குறமாறி ஆய்டுது..மத்தபடி ஒண்ணுமேயில்லங்க நம்புங்க..

ம்ம் என்றவாறு அவள் திரும்பிக் கொள்ள,இதுக்கு என்ன அர்த்தம் நம்புறேன்ங்குறீங்களா இல்ல..-ஷரவன்..

லேசான சிரீப்போடு அதுக்கு பதில் உங்களுக்கே தெரியும் என்றவாறு மறுபுறம் திரும்பிக் கொண்டவளை அவனது கண்கள் தானாய் அளந்தது..ஒல்லியான உடல்வாகு மாநிறம் சாதாரணமான சுடிதார் கழுத்தில் மெல்லியதாய் ஒரு செயின்..சின்ன கம்மல் இவ்ளவுதான் அவளை பார்த்தவுடன் கண்களில்படும் விஷயங்கள்..ஆனால் ஷரவனுக்கு பிடித்திருந்தது அந்த எளிமையிலும் தெரீந்த கம்பீரம்..அது அவளை இன்னுமாய் அழகாய் காட்டியது..ஒருவாரு அவர்களின் ப்ரம்மதேச பயணம் ஆரம்பமாக சலசலத்துக் கொண்டே வந்த சஹானாவின் கண்கள் போகும் இடத்தை உணர ஆரம்பித்த நொடி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றேவிட்டிருந்தது..கண்கள் நீரால் நிரம்ப இதழோரம் புன்னகை அனைத்தும்பார்த்துக் கொண்டு வந்தவன் ஆதரவாய் தோள்பற்ற மார்பில் முகம் புதைத்து அழத் தொடங்கியவள் இங்கதான் வரோம்நு சொல்லிருந்தா நா வரமாட்டேன்னா சொல்லப் போறேன் ரொம்ப தேங்க்ஸ் மாமா..என்றவாறு கீழேயிறங்கி நிற்க கார்த்திக் அவள் கைப்பிடித்தவாறே கோவிலினுள் நுழைந்தான்..

வணக்கம் மக்களே அம்பாசமுத்திரம் எப்படியிருக்கு..இதெல்லாமே ஒரு 13-14 வருடங்களுக்கு முன்னாடி நா பாத்து ரசிச்சு என் மனதில் பதிந்தை இடங்கள்..எதாவது தப்பாயிருந்தா மன்னித்து அருளவும்..இடத்தின் பெயர்களோ வேறு விஷயங்களோ திருத்த வேண்டியதிருந்தால் கமெண்ட்டில் மறக்காம பதிவு பண்ணுங்க..அடுத்தவாரம் ப்ரம்மதேசம் கோவிலுக்கு போக தயாராயிருங்க..

தொடரும்

Ninnai saranadainthen - 11

Ninnai saranadainthen - 13

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.