(Reading time: 18 - 36 minutes)

ம்ம் அது ஒரு சைனீஸ் மெத்தேட்..இப்போ நம்ம ஊர்ல மால்ல கூட வச்சுருக்காங்களே..அதுக்கென்னடா??

ம்ம் கரெக்ட் அதேதான் பட் இப்போ நா அதை உனக்கு ஃப்ரீயா பண்ணிக்காட்ட போறேன்..என்றவாறு கையிலிருந்த இட்லியை இருவரின் கால்களின் அருகிலும் நீருக்குள் போட அவர்கள் காலையே மறைத்த வண்ணம் மீன்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க ஆரம்பிக்க கூச்சம் தாங்காமல் கார்த்திக் விரல்களை அசைத்தான்..

எப்படி சூப்பரா இருக்குல..இதுக்காகவே பாட்டியோட ஆத்துக்கு வருவேன் சின்ன வயசுல..என்றவளை தலைகோதி டேக் கேர் டீ என்றான்..அஅதான் நீ இருக்கல மாமா..என்றவள் உணவை உண்ண ஆரம்பிக்க அடுத்த ஒரு மணி நேரம் சிட்டாய் பறந்தது..ஒரு வழியாய் மணி அனைவரையும் கிளப்பிக் கொண்டு நடக்க ஆரம்பிக்க சற்று தூரத்தில் இருந்த தண்டவாளத்தை நெருங்கும் போது புயலாய் கடந்த ரயிலின் சத்தத்தில் சஹானா அலறிஅடித்து கார்த்திக்கை தஞ்சம் அடைந்தாள்..மாமா வேணாம் இந்த சத்தம் வேணாம் மாமா..போ சொல்லு மாமா..என்ன இங்கிருந்து கூட்டிட்டு போய்டு ப்ளீஸ் மாமா..சஹி என்னாச்சு இங்க பாரு என்னடீ என்ன பாரு கண்ணத் தொற என்ற எதையுமே காதில் வாங்காமல் மயங்கிச் சரிந்தாள்..

சில நிமிட போராட்டத்திற்கு பின் சஹானா கண்விழிக்க அங்கிருந்த அனைவருக்குமே ஒன்றும் புரியவில்லை கார்த்திக்கோ மொத்தமாய் உடைந்திருந்தான்..சஹி..

போலாம் மாமா வீட்டுக்கு போலாம் என அவள் கைப்பிடித்து இழுக்க ஒன்றும் கூறாமல் சிவாவிடம் கண்ஜாடை காட்டி நகர்ந்தான்

வீட்டிற்கு வந்தவவர்கள் அனைவரும் ஹாலில் நிற்க சஹானா சோர்வாய் அவளறைக்குச் சென்றாள்..கார்த்திக் அவளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவள் தலைகோத ஒன்றும் கூறாமல் கண்ணயர்ந்தாள்..அவள் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் வெளியே வர அங்கு அனைவரின் முகமும் ஒளியிழந்திருந்தது..ஷரவந்தி ஓடிவந்து அவன் கையை பிடித்தவாறு,என்ன அண்ணா இவ்ளோ நடந்துருக்கு எங்ககிட்ட சொல்ல மாட்டியா..நாங்கலா உனக்கு உதவி பண்ணமாட்டோமா..அண்ணிக்கு ஒண்ணுமில்ல நீ தைரியமாயிரு..என அடுக்கிகக் கொண்டே போக கார்த்திக்கோ இயலாமையாய் சிவாவை பார்த்தான்..

மன்னிச்சுருங்க கார்த்திக் நானே ரொம்ப பயந்துட்டேன்..அதுக்குமேல என்னால மறைக்க முடில..கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும்..

ஆமா தம்பி என் தாயீ துடிச்சத பாத்து உசுரே போய்டுச்சு..-மணி..

அண்ணா தயவுசெஞ்சு இந்த விஷயத்தை பத்தி..

தம்பி செத்தாலும் இதபத்தி வாயே தொறக்கமாட்டேன்..என்னை தாராளமா நம்பலாம்..என்ன செய்யனும்னு சொல்லுங்க..

இங்க பெரிய கோவில் எதாவது இருக்கா??என் கணிப்பு சரினா எனக்குத் தேவையானது இங்க பக்கத்துலதான் இருக்கு..

சில நொடிகள் யோசித்தவர்,ஒருவேளை நீங்க நம்ம ப்ரம்மதேசம் கோவில சொல்றீகளோ..இங்க பெரிய கோவில்னா அதுதான்..ஒரு 31/2 கி.மீ தான் நாளைக்கு கூட்டிட்டு போறேன்..எல்லாரும் களைப்பா இருப்பீக சாப்ட்டு ஓய்வு எடுத்துக்கோங்க..சாயங்காலமா பக்கத்துல இருக்குற இரண்டு மூணு கோவில்க்கு போலாம் என்றபடி அவர் நகர..ஷரவ் ஒரு நிமிஷம் சஹானாவ பாத்துட்டு வந்துறேன்..நீ போ அண்ணா நா இங்க சோபால படுத்துக்குறேன்..

சலனமில்லாமல் தூங்குபவளை கண்டவனின் மனமோ பாரமாய் இருந்தது..எதை நினைத்து பயந்தானோ அது நடந்துவிட்டதே என எண்ணித் தவித்தான்..நாற்காலியில் பின் தலை சாய்த்து அமர்ந்தவன் தன்னை அறியாமல் கண்ணயர சற்று நேரத்தில் தன் நெற்றியில் பட்ட ஸ்பரிசத்தில் கண்விழிக்க சஹானா..

இடவலமாய் தலையசைத்தவள் சஹானா இல்ல மாமா தேவிகா என்னைக்குமே உன்னோட தேவிகா தான்..கவலபடாத மாமா எனக்கு ஒண்ணும் ஆகாது..கூடிய சீக்கிரம் உனக்கே எல்லாம் புரியும்..உன்னால நடக்க வேண்டிய ஒரு வேலை முடிஞ்சவுடனே சஹானாவா முழுசா உன்கிட்டயே வந்துருவேன் என்றவாறு நெற்றியில் இதழ்பதிக்க ஏதோ ஒரு சத்தத்தில் பதறி எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்க்கசஹானா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்..ஒரு நொடி இதயத்துடிப்பு அதிகமாய் இருப்பதாய் உணர்ந்தான்.ஏதேதோ யோசித்தவனுக்கு சட்டென தோன்றியது முன்ஜென்மம்..பல நிகழ்வுகளும் அவனுக்கு அதையே தெளிவு படுத்துவதாய் இருந்தது..அதற்குள் சஹானா எழுந்துவிட அவளருகில் சென்று அமர்ந்தான்..சட்டெனஅவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்..என்னனு தெரில மாமா திடீர்நு ட்ரெயின் சத்தம் கேட்டவுடனே பயந்துட்டேன் போல..என்னாச்சுனே தெரில..என்றவள் சாய்ந்தவாறே அவனை ஏறிட்டுப் பார்க்க..

பரரவால்ல சஹி இப்போ பெட்டரா இல்ல டாக்டர் வேணா பாத்துட்டு வந்துரலாமா??

அதெல்லாம் வேண்டாம் மாமா..பசிக்குது சாப்ட போலாமா??

ஹய்யோ மறந்தே போய்ட்டேன் பாரு வா சசாப்டலாம்..என்றவன் அவளோடு டைனிங் டேபிளில் அமர ஷரவந்தி பரிமாறினாள்..இப்போ பெட்டரா அண்ணி??கசாயம் எதாவது போட்டு தரவா??

அதெல்லாம் வேண்டாம் ஷரவ்..நீங்க எல்லாரும் சாப்டாச்சா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.