(Reading time: 18 - 36 minutes)

ம்ம் சாப்டோம் அண்ணி எனும்போதே ஷரவனும் சிவாவும் வர அவர்களும் பொதுவான நலவிசாரிப்போடு நிறுத்திக் கொண்டனர்..சஹானாம்மா இந்தா உனக்கு பிடிச்சச இஞ்சி காபி எல்லாரும் சாப்பிடுங்க காலைல ஆத்துல போட்ட ஆட்டத்துக்கு உடம்பு அலுப்பு இல்லாம இருக்கும்..சரி வாரீகளா இங்க பக்கத்துல சுத்தி பாத்துட்டு வருவோம்..ஹே நா ரெடி போலாம் போலாம் என ஷரவ் ஷரவன் ஆர்பரிக்க. அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் தயாராகி வெளியே வந்தனர்..

நகரங்களில் பக்கத்துவீட்டிலிருப்பவர்களையே மாதம் ஒருமுறை பார்க்கும் நிலைமையில் இருக்க இங்கு தெருவில் அனைவரும் மணியிடம் விசாரித்தனர்..நம்ம சிவகாமி பேரன் பேத்தியா எம்புட்டு வளந்துட்டாக..அப்பா அம்மா லா நல்லாயிருக்காகளா??ரொம்ப வருசம் ஆச்சு பாத்து என உரிமையோடு அக்கறையாய் விசாரிப்பது ஆச்சரியமாய் இருந்தது..வீட்டின் பின்தெருவிலேயே இருந்தது அந்த அழகிய அம்மன் கோவில்..கோவிலின் உள்நுழையும் போதே அப்படி ஒரு குளிர்ச்சி அந்த கால சிமெண்ட் தரை..அம்மனை மனமாற வேண்டிக் கொண்டு கிளம்பியவர்கள் காரில் சற்று தூரத்தில் இருந்த சிவன் கோவிலை அடைந்தனர்..

அந்த வட்டாரத்தில் பெரிய கோவில் என்றழைக்கப்படும் அங்கு காசிநாதரும் மரகாதாம்பிகை தாயாரும் அருள்பாலிக்கின்றனர்..அந்த இடத்தை பார்த்தவர்களுக்கு இயற்கை அன்னை மொத்த அழகையும் அங்கு பொழிந்திருப்பதாய் தோன்றியது..

ns

அனைவரும் உள்ளே சென்று வேண்டுதலை முடித்து வெளியே வர,என்ன கண்ணுகளா கோவிலுக்கா கூட்டிட்டு போறனேனு நினைக்குறீகளா இங்க இதவிட்டா பாக்குறதுக்கு ஒண்ணுமில்லப்பா..

அண்ணா இந்த ஊர்ல நீங்க எங்க கூப்டாலும் நாங்க வரலநு சொல்லவே மாட்டோம்..என்ன அழகு..சூரியன் மறையுர நேரம் பச்சைபசெல்னு வயல்வெளி அதுக்கு நடுல இவ்ளோ அழகா ஒரு கோயில் வேறென்ன வேணும் நா போட்டோ எடுத்துட்டு வந்துரேன் என்று செல்ல அனைவரும் வெளியிலிருந்த திண்ணையில் அமர்ந்தனர்..

மணி அண்ணா பாட்டி இந்த கோவிலுக்கு ஏதோ கதை சொல்லுவாங்களே உங்களுக்குத் தெரியுமா??

நம்ம ஊர்ல கதைக்கா பஞ்சம் சொல்றேன் கண்ணு..ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இந்த கோவிலோட பூசாரி வழக்கம்போல கோவிலுக்கு கிளம்பும் போது அவரோட சின்ன பெண் குழந்தையும் வரேன் சொன்னாளாம் சரினு கூட்டிட்டு போனவரு குழந்தையை பிரகாரத்துல விளையாட விட்டுட்டு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாரு..விளையாடிட்டு இருந்த குழந்தை கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்து அங்கேயே தூங்கிட்டாளாம்..அவர் எப்பவும் போல கோவில் நடை சாத்திட்டு வீட்டுக்கு போக அவர் மனைவி குழந்தை எங்கநு கேக்க அப்போதான் அவருக்கு நியாபகமே வந்துருக்கு..வாங்க போய் கூட்டிட்டு வந்துரலாம்நு அவர் மனைவி அழ ஆரம்பிக்க கோவில் நடை சாத்தினப்பறம் அப்படி திறக்குறது நல்லது இல்லனு அவரு சொன்னாராம்..என்ன சொல்லியும் அவங்க சமாதானம் ஆக மறுத்து கோவிலுக்கு போக அங்க கதவுல கைவச்ச நேரம் உள்ளிருந்து அசரீரீ சத்தம் கேட்டுதாம்..குழந்தை தன்கிட்ட பத்திரமா இருக்குறதாகவும் காலைல வந்து கூட்டீட்டு போனும் அந்த அம்மன் சொன்னாளாம்..இப்போவே உள்ள வர நினைச்சா குழந்தையோட கை கால்களை தனி தனியா தான் தருவேன்னும் சொன்னாளாம் தாய் மனசு கேக்காம கதவ திறக்க அம்மன் சொன்னமாதிரியே குழந்தையை தண்டிச்சுட்டாளாம்..அதிலிருந்து அதோ அங்க தெரியுர மரத்து பக்கத்துல இருந்து அந்த குழந்தை மரகதம்நு கூப்பிடுறமாறியும் அதுக்கு உள்ளயிருந்து என்னனு பதில் சத்தம் வரும்னும் சொல்லுவாங்க..யாராயிருந்தாலும் கடவுளை மனசார நம்பி வேண்டினா இந்த தாய் கைவிடமாட்டாங்கிறதுக்கு இந்த கதை சொல்லுவாங்க..

மாமா இந்தமாறி நிறைய கதைகள் என் பாட்டி சொல்லுவாங்க..பாதிக்கு மேல இப்படி வழிவழியா சொல்லி வைக்குறதுதான் உண்மையா இல்லையாநு கூட தெரியாது ஆனா எனக்கு கேக்குறதுக்கு ரொம்ப பிடிக்கும்.. என்றுகூற கார்த்திக் மனதில் எதையோ குறித்து வைத்துக் கொண்டான்..

சற்று இருள் பரவத் தொடங்கிய நேரம் அனைவரும் அங்கிருந்து கிளம்பஅவர்கள்  வீட்டின் அருகிலேயே இருந்த சின்னகோவிலுக்கு அழைத்துச் சென்றார்..உள்ளே நுழைந்ததுமே நாகலிங்க பூவின் வாசனை மனதை எங்கோ கூட்டிச் செல்வதாய் இருந்தது..அனைவரும் முன்னே செல்ல சஹானா வாசலிலேயே நின்றாள் வா சஹி என்னாச்சு??என்று அவள் கையை பிடித்தவன் அதன் குளிர்ச்சியை கண்டு ஒரு நொடி தடுமாறியவன் மனதை திடப்படுத்தியவாறு சஹி என்றழைக்க பதிலில்லை..தேவிகா..

ம்ம் என்றவள் அவனை ஏறிடாது உள்ளே நுழைந்தாள்..மொத்தமாய் பயம் சூழ்ந்து கொள்ள அவளை பின்தொடர்ந்தவன்..எவ்ளோ வருஷம் ஆச்சு மாமா நாம சேர்ந்து இந்த சிவனை பார்க்க வந்து மனசு நிறைஞ்சுருக்கு.என்றவாறு கண்களை மூடி வேண்டினாள்நடப்பது அனைத்தும் கனவுபோல் இருக்க செய்வதறியாவது தவித்தான் கார்த்திக்..சில நிமிடங்களில் சாதரணமாய் பேச ஆரம்பீத்திருந்தவளை கண்டு சற்று நிம்மதியுற்றான்..இவ்வாறாய் அன்றைய நாள் முடிந்து வீட்டிற்குவர,எல்லாரும் ரெஸ்ட் எடுங்க கண்ணுகளா நா கௌரிட்ட சாப்பாடு குடுத்துவிட்றேன்..எதுவும்னா குரல் குடுங்க ஓடி வந்துருவேன் என்றவாறு நகர்ந்தார்...எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மாமா நா போய் படுத்துக்குறேன் என்று சஹானா சென்றுவிட மற்றவர்கள் இரவு உணவை முடித்து மறுநாளுக்கான ஆச்சரியங்களை அறிந்துகொள்ள தயாராகினர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.