(Reading time: 17 - 34 minutes)

18. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

pemp

ழையாவின் வீட்டில், பார்வதி மிகவும் பரபரப்புடன் சமையல் செய்ததை டைனிங் டேபிளில் அழகான டின்னெர் செட்டில் எடுத்துவைத்தவள், வருண்! உன் சர்ட்டை மாற்று. அவர்கள் வரும் நேரம் ஆகிவிட்டது என்று குரல் கொடுத்தபடி ஈஸ்வரருக்கு, காலையில் சாப்பிடவேண்டிய மாத்திரையை எடுத்துக்கொடுக்கப் போனார் .

ஈஸ்வரனும், மகள் மற்றும் மஹிந்தனின் பெற்றோரை இன்று ரிசீவ் செய்வதற்கு ஆயத்தமாக இருந்தாரானாலும் அவர்கள் எப்படிபட்டவர்களோ...? என்ற கவலையும், நம்மைவிட  பெரிய செல்வந்தர்கள் ஆதலால் நம்மை மதிப்பார்களோ...? என்ற ஐயமும் இருந்தது.

மேலும், பத்திரிக்கையில் தன் மகளின் திருமண விஷயம் வெளியானதில் இருந்து போனிலும் வெளியில் எங்கு சென்றாலும் உங்கள் மகள் பெரிய இடத்தைதான் பிடித்துவிட்டாள் என்று சிலர், என்னவோ தன் மகள் தான் மஹிந்தனை மயக்கி கல்யாணம் செய்தது போல் பேசியதும் அவருக்கு வருத்தமாக இருந்தது .

கணவரின் டென்சனான முகத்தை பார்த்த பார்வதி, டென்சனாகாதீர்கள்.., கவியப்பா. நம் மகளின் குணத்திற்கு அவள் நன்றாகத்தான் இருப்பாள். மேலும் மாப்பிள்ளை நம் மகளை விரும்பி மணந்துள்ளார்... அவர் தன் அம்மாவிடம் கூட நம் மகளை விட்டுக்கொடுக்காமல் தான் பேசியுள்ளார். எனவே மனதை போட்டு அலட்டிக்கொள்ளாமல், இந்த மாத்திரையை போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினாள். .

என்னவோ… பார்வதி எனக்கு கவியின் முகத்தை பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கும். என் மகளை  நல்லபடி வைத்து பார்த்துக்கொல்வானா அந்த மஹிந்தன்? “அவன் மட்டும் என் மகளை  கஷ்டப்படுத்தினால் என்னால் தாங்கமுடியாது”,  என்று கூறினார் .

என்னங்க மாப்பிள்ளையை அவன் இவன் என்று பேசாதீர்கள். இப்பொழுது அவர் நம் மகளின் கணவன். மேலும் பல கம்பெனிகளை நடத்திவரும் பெறும் தொழிலதிபர். நீங்கள் சிறியவர்களையும் மரியாதையாகத்தான் பேசுவீர்கள் இப்பொழுது  மட்டும் என்ன! புதிதாக இப்படி பேசுகிறீர்கள் என்று லேசாக கடிந்து கொண்டாள் .

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அம்மா அக்கா வந்துவிட்டாள்! என்று குரல் கொடுத்தான் வருண் .

உடனே பார்ப்வதி “டேய்! அவர்களை வாசலில் நிற்க வை நான் ஆரத்தி தட்டு எடுத்துவருகிறேன்”, என்று கூறினாள் பார்வதி

வாசலுக்கு வந்து கார் நின்றதும் வேகமாக முன்னால் இறங்கப் போன ழையாவின் கை பிடித்து “ ஏய் !  என்ன அவசரம் என் கூட சேர்ந்து வா...” என்று அவளை முன்னே போகவிடாமல் தடுத்தான் மஹிந்தன் .

இருவரும் காரில் இருந்து இறங்கியதும் மஹிந்தன் ழையாவின் கையுடன் தன் கை கோர்த்து நடக்க முயன்றதும், கையை உருவ முயன்றவளின் கையை இருக்க பிடித்தபடி வாசலில் நின்ற வருனிடம் புன்னகைத்தான்.  

வருண், அக்கா! மாமாவுடன் இங்கே நில். அம்மா ஆரத்தி தட்டை எடுத்துவர போயிருக்கிறார்கள் என்று சொல்லும்போதே கையில் ஆரத்தியுடன் வந்த பார்வதி, இருவருக்கும் சேர்த்து ஆரத்திசுற்றி வாசலில் தட்டிவிட்டுவருவதற்குள் வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்திருந்தவர்களிடம் வந்தாள் பார்வதி

தன் அப்பாவை பார்த்தவுடன் தன் கையை உருவியபடி அவரிடம் போகப்போனவளின் கையை போக விடாமல் பற்றியபடி சோபாவில் ழையாவுடன் அமர்ந்த மஹிந்தன், பார்வதி உள்ளே வந்ததும் அவள் கையை பற்றி எழுப்பி ஈஸ்வரனிடம் வந்தவன் அத்தை நீங்களும் மாமாவும் எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று கூறினான்.

தன் மகள் வந்தவுடனே அவளை ஆவலாக் பார்த்த ஈஸ்வரன் தன் மகளின் முகம் வாட்டமாக் இருக்கிறதா? என்றும் அவளின் அருகில் இருக்கும் மஹிந்தனை பார்த்தவுடன் வந்த கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடுவோமோ என்றும், இறுக்கத்துடனேயே மஹிந்தனை பார்த்து வாருங்கள் என கூறும் விதமாக் தலையை  அசைத்தவர்,  தன் மகள் தன்னை பார்த்து ஓர் எட்டு வைத்ததையும் அவள் கையை போகவிடாமல் அழுத்தி பிடித்தபடி இருந்த மஹிந்தனை பார்த்ததும் கோபத்துடன் இருந்தாவர்  தன்னிடம் ஆசிவாதம் வாங்கவென்று வந்து காலில் விழுந்ததும் அவருக்கு ஏற்பட்ட கோபம் சற்று தனிந்தது .

பின் மஹிந்தன் இன்னும் இரண்டு தினங்களில் எங்களின் கல்யாண ரிசப்சனுக்கு ஏற்பாடு செய்வதற்கு  முறைப்படி உங்களிடம் பேசத்தான் அப்பாவும் அம்மாவும் இங்கு கிளம்பி வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கூறியவன் தயக்கத்துடன் என் ழையாவை பற்றி இனி நீங்கள் எதற்கும் கவலை படவேண்டாம் “ஷி இஸ் மை லைப்” “ழையாவை கல்யாணம் செய்ய  நான் செய்த செயல் உங்களை காயப்படுத்தியதற்கு நான் சாரி கேட்டுகொல்றேன்”, என்று கூறினான்

அவன் இறங்கி பேசவும் ஈஸ்வரனும் தன் மகளின் வாழ்கைகாக இறங்கி பேச ஆரம்பித்தார்.  இனியாவது என் பெண்ணை சந்தோசமாக் நீங்கள் வைத்திருந்தாலே எங்களுக்குப் போதுமானது என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர்களின் வீட்டு வாசலுக்கு மஹிந்தனின் அம்மாவும் அப்பாவம் வந்துவிட்டார்கள் .

வந்தவர்களை வாங்க என்று ஈஸ்வரனும் பார்வதியும் வரவேற்றனர். ,விஷ்வநாதன் பதிலுக்கு இருகரம் கூப்பி அவர்களின் வரவேற்ப்பை சிரித்தமுகமாக ஏற்றபடி வந்தார். ஆனால்! சுபத்ரா கண்களால் வீட்டினை அலந்தபடி ஒட்டாத பார்வையோடு ஒப்புக்கு ஓர் தலையசைப்பை அலட்சியத்துடன் கொடுத்தபடி உள்ளே வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.