(Reading time: 17 - 34 minutes)

ஆனால் பார்வதி, தன் மகளை அவ்வாறு கண்டுகொள்ளாமல் இருக்க விடாமல் அவனுக்கு வேண்டியதை கவனித்து, கவியிடம் பாத்திரத்தை நகர்த்தி, எடுத்து வைக்குமாறு ஏவிக்கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமாட்டாமல், பொங்கிவிட்டாள். ழையா, அம்மா....! என்று கோபத்துடன் கூறியவள், முதலில் என்னை சாப்பிட விடுங்கள் என்று  கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும் பார்வதி, நீ இன்னும் ஒன்றும் சின்னப் பிள்ளை கிடையாது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் உன் கணவனுக்கு பார்த்துப் பரிமாறாமல் இது என்ன விளையாட்டுத்தனம் என்றாள்.

நான் எல்லாம் உன் அப்பாவிற்கு பரிமாறி விட்டுத்தான் சாப்பிடுவேன். இனி நீயும் உன் வீட்டில் ஆயிரம் வேலையாட்கள் இருந்தாலும் உன் கணவருக்கு வேண்டியதை பக்கத்தில் இருந்து உன் கையாலேயே பரிமாறிவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்று கூறிவிட்டு,

மஹிந்தனிடம், கவி பொறுப்பான பெண் தான் என்றும் மேலும் விளக்கம் சொல்ல முயன்ற பார்வதியை தடுத்து,  அத்தை இதெல்லாம் பிரச்சனையே இல்லை. என் ழையாவைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் சொல்ல வேண்டிய  அவசியமே இல்லை என்று சிரித்தபடி கூறினான்.

பின் வருனிடம், உன் வீட்டிற்கு வந்தால் என்னிடம் சில ரகசியம் சொல்வாய் என்று சொன்னாயே சாப்பிட்டதும் நாம் தனியே போய் பேசலாமா? என்று வேண்டுமென்றே வருனுடன் தன்னை கூட்டுச் சேர்த்து கவிழையாவை தனிமைப்படுத்தி காண்பிக்குமாறு சீண்டும் விதமாக கூறினான்.

வருணுக்கு அவன் தன் அக்காவிடம் வம்பிழுக்க முயல்வதை புரிந்த வருண், ஓகே! மாமா.... உங்கள் கிட்ட உட்கார்ந்திருக்கும் குட்டக்கத்திரிக்காவை கழட்டிவிட்டுட்டு வாங்க பேசலாம் என்று கூறினான்.

மஹிந்தனின் முன் எப்பொழுதும்  வருண் கூப்பிடும், ‘’குட்டக் கத்திரிக்கா’’ என்ற வார்த்தையை சொன்னவுடன் ழையா கடுப்பானாள்.

அவள் வருணை பார்த்து டேய் ஓட்டடக் குச்சி நீ என்னை விட வளர்ந்துட்டே என்பதற்காக் என்னை குட்டக்கத்தரிக்காய் என்று சொன்ன எனக்கு பொல்லாத கோபம் வந்துடும் சொல்லிட்டேன் அது என்ன இன்னைக்கு வந்த உன் மாமா கூட ரகசியம் பேசுறது! “ஓட்டட குச்சி” அப்படி எதுவும் பேசின “பிச்சு புடுவேன் பிச்சு” என்று கூறினாள்.

ஈஸ்வரனுக்கும் பார்வதிக்கும் மஹிந்தன் வருனிடம் நட்பாக பேசிய விதமும், கவியை என் ழையா என்று சப்போர்ட் செய்து தங்களிடம் கூட விட்டுக்கொடுக்காமல் பேசும் பாங்கும் கண்டபிறகு நிம்மதி பெறுமூச்சு கிளம்பியது .

சாப்பிட்டு முடித்தபிறகு மஹிந்தனிடம், மாமா.. என்று ஒட்டிக்கொண்ட வருனிடம் மஹிந்தன் ழையாவின் பழைய போட்டேக்களை காண்பிக்குமாறு கேட்டான். அதை காண்பிக்க ரூமிற்குள் கூட்டிச் சென்றதும், ழையா தன் அம்மாவிற்கு உதவியாக் சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுங்கவைக்க உதவிக்கொண்டிருந்தாள்.

பார்வதி அடுப்படிக்கு தன் மகள் நுழைந்ததும், கவி.... என்று பாசத்துடன் அவளின் கன்னம் வருடி கலங்கிய கண்களுடன் எப்படி இருக்க கவி! உன் வீட்டில் உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே?

உன்னை இப்படி டார்ச்சர் செய்து கல்யாணம் செய்துகொண்ட மாப்பிள்ளை... எப்படி  பட்டவரோ..? என்று பயந்து கொண்டுதான் இருந்தேன், ஆனால்! இப்பொழுது எனக்கு அந்தபயமெல்லாம் போய்விட்டது .உனக்கு பக்க பலமாய் அவர் இருப்பதை நான் கண்கூடாகப் பார்த்துவிட்டேன்

நீயும் நடந்ததை மனதில் வைத்துக்கொண்டு மாப்பிள்ளையுடன் விரைத்துக்கொண்டு இருக்காதே.... அவரின் மனம் நோகாமல் நடந்து கொள். ,மேலும் மாப்பிளையின் அம்மா, உன்னிடம் சரியாக் நடந்து கொள்ளாவிட்டாலும் அதை நீ பெரிது படுத்தாமல் போய்விடு என்றார்.

உடனே அம்மா நான் என்னம்மா தப்பு செய்தேன்! அவர் தானே என்னை ஏமாற்றி எனக்கே தெரியாமல் இத்தனையும் செய்து என்னை கல்யாணம் செய்தார். ஆனால் அவர்கள் நான் என்னமோ அவர்கள் மகனை மயக்கியது போல் பேசினால் எனக்கு கோபம் வராதா என்றாள்

உன் மேல் தவறு இல்லை என்றாலும், மாப்பிள்ளை உன்னை அவர்களின் பெற்றோரிடமும்... சம்மதம் இல்லாமல்தான்  மணந்திருக்கிறார் எனவே அவர்களின் கோபம் உன் மேல் வார்த்தைகளாக பாயும் அதை நீ பெரிது படுத்தாமல் இருந்தாலே சரியாகிவிடும் என்று கூறிகொண்டிருக்கும் போது ....

அங்கு வந்த மஹிந்தன்  தங்கை மதுராவிடம் இருந்து வரச் சொல்லி போன் வந்துவிட்டது என்று கிளம்பச் சொல்லி வந்து கூறினான்.

அதற்குள்ளேயே  கிளம்புறீங்களா தம்பி! “இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கிளம்பலாமே” என்று கூறினாள் பார்வதி .

மதுரா மதியம் சாப்பாடு ரெடியாகிவிட்டது என்று வரச்சொல்லி போன் பண்ணிவிட்டால் .ழையாவை இன்னும் என் வீட்டிற்கு கூப்பிட்டுப் போகாதது வேறு எனது பெற்றோருக்கு வருத்தத்தை தந்திருக்கும். சோ..! இப்பொழுது கூப்பிடும்போதே போய்விட்டால் கொஞ்சம் அவர்களின் கோபத்தை குறைக்க முடியும் அதனால் தான் உடனே கிளம்புகிறோம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.