(Reading time: 17 - 34 minutes)

அவன் அவ்வாறு பேசியதும் பதில் பேசாமல் அமைதியானாள். உடனே மஹிந்தன் என்ன டீ பதிலுக்கு பதில் பேசுன. இப்பொழுது மட்டும் அமைதியாகிவிட்ட என்றவன்  அவளை திரும்பிப்பார்த்தான்.

அவன் கேட்பதற்கு அவள் வெளிப்படையாக் பதில் கூறாவிட்டாலும் மனதிற்குள் இவர்  அருகில் நின்றால் குட்டையாக இருப்போமா...? என்ற யோசனையுடன் அவளும் அவனை திரும்பிப்பார்த்தாள்

அவளின் கண்களை பார்த்ததும் எப்பொழுதும் போல் மஹிந்தனுக்கு அக்கண்கள் தன்னை காதலாக பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது

எனவே ஊடுருவி அவள் பார்வையோடு தன் பார்வையை கலக்கவிட்டு அவளின் மனதில் உள்ளதை படிக்க முயன்றவன், மென்சிரிப்புடன், ஒரு கையில் தனது ஐ போனை எடுத்து அதில் ஸ்கிரீன் பிச்சராக இருந்த இருவரின் புகை படத்தை காண்பித்தவன் இதை  பார்த்த பிறகும் எனக்கு பொருத்தமான் சோடி நீ மட்டும் தான் என்பது உனக்கு புரியவில்லையா? ழையா என்றவன் கனவுகள் சுமந்த மந்தகாச சிரிப்புடன் என் கைக்கு அடக்கமாக இருக்கும் உன்னைத்தான் எனக்கு புடிச்சிருக்கு ஆனால் மேடம் தான் கருணை காண்பிக்க யோசிக்கிறீங்க என்று தாபத்துடன் கூறினான் .

அவனின் பார்வை தாபமாக தன் மீது பதியவும் தன் உதடு கடித்து பார்வையை திருப்பி ஒதுங்கி அவள் உட்கார்ந்ததும், காரினுள் போச்சுடா திரும்பவும் சுருண்டுகிட்டா என்று சலிப்புடன் நினைத்தான்

அவளின் ஒதுக்கம் அவனுக்கு கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது என்றாலும் அதை வெளிப்படுத்தினால் திரும்பவும் அவள் மனம் தன்னால் காயப்படுமோ என்றும் அவன் பயந்தான்.

மேலும் தன் வீட்டிற்கு போகும் போது அவன் பெற்றவர்களின் முன்னிலையில் அவள் தன்னுடன் முகம் திருப்பிக்கொண்டு இருப்பதை அவன் விரும்பவில்லை எனவே பே....பி என்றான் .

அவளின் அழைபில் திரும்பி என்ன என்று பார்வையோடு அவனைத்திரும்பி பார்த்தவளிடம் எப்படி சொல்வது என்று தடுமாற்றத்துடன்  நா....ன் நா...ன் ஒன்று சொல்வேன் அதற்கு நீ.......என்று சொல்வற்கு யோசனையுடன் நிறுத்தினான்

அவன் தயங்கி தயங்கி தன்னிடம் பேச முயல்வதை பார்த்தவளுக்கு இவருக்கு கூட இப்படி ஒருவரிடம் பேச தயக்கம் ஏற்படுமா? என்ற பிரமிப்பு உண்டானது அவள் பார்த்தவரை அவன் யார் முன்பும் இதுவரை எதற்கும் தயக்கத்துடன் பேசியதையோ கலக்கத்துடன் இருந்ததையோ இதுவரை அவள் பார்த்ததில்லை n

அவளுக்கே அவனின் தயக்கம் என்னவோ போல் இருந்தது அது அவனது கம்பீரத்தை குறைப்பது போல் தோன்றியது அப்படி குறைவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது ஏன் என்று அவள் ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை எனவே

இது என்ன தெ கிரேட் எஸ் வி எம்  ஒற்றை வாரிசு மேலும் தெ கிரேட் பிசினஸ் மேன் மிஸ்டர் மஹிந்தன் இப்படி பேச தடுமாறுவது பொருத்தமாக இல்லை அது உங்களுக்கு அழகாகவும் இல்லை சோ ப்ளீஸ் இனி ஒருமுறை இதேபோல் யாரிடமும், ஏன் என்னிடம் கூட  உங்களின் கம்பீரத்தை  குறைக்குமாறு நடந்துகொள்ளாதீர்கள் என்று அவளை அறியாமலேயே அவனிடம் வாய் விட்டாள்.

அவள் அவ்வாறு பேசப் பேச அவனுக்கு மனதில் சந்தோசம் விரவியது எனவே அவன் குழைவுடன் ஓகே  பேபி உனக்கு பிடிக்காததை எதையும் இனி செய்யமாட்டேன் என்று புன்னகையுடன் பதில்  சொன்னான்.

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.