(Reading time: 20 - 40 minutes)

19. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

pemp

ழையாவிற்கு எதோ மியூசியத்திற்கு வந்தது போல் இருந்தது அந்த அரண்மனையை அவளால் ஒரு தனி நபரின் வீடாக எண்ண முடியவில்லை அவளின் தந்தை வீட்டில் வறுமையில்லாமல் வளர்ந்தவள் தான்.தங்க நகைகளை அணிந்து மகிழ்ந்தவள் தான், அவளின் தோழிகளில் கார், பங்களாக்களில் வாழ்ந்தவர்களுடன் பழகி இருக்கிறாள் தான். எனினும் இது போன்ற பிரம்மாண்டமான அரண்மனைகளை படங்களில் தான் அவள் பார்த்திருந்தால்

மேலும் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களின் பவ்யமும் மஹாராணியை போல் சுபத்ராவின் கண்ணசைவில் வேலைகளை செய்யும் பணியாளர்களின் பாங்கும் அவளுக்கு அந்தக்கால ராஜாக்களின் படங்களை பார்க்கும் சுவாரஸ்யம் ஏற்ப்பட்டது.

மேலும் அந்த வீட்டில் செழுமை அவளை மிரட்டி மற்றவர்களிடம் இருந்து ஒதுங்க வைத்தது .ஆனால் மஹிந்தன் அவளில் ஒதுக்கத்தை உடனே உணர்ந்து கொண்டு அவளின் தோளில் கை போட்டு தன்னுடன் சேர்ந்து நடத்தி வந்து அவளின் பயத்தை விரட்டியடித்தான்.

மதுரா பாசத்துடன் மறுபுறம் வந்து அன்பாகப் பேசி அவளின் பயத்தைப் போக்கினாள். விஸ்வநாதன் அவர் பங்கிற்கு அங்கிருக்கும் வேலையாட்களை வரிசையில் நிற்க வைத்து, அவளின் கையால் புதுத்துணிகள் கொடுக்கவைத்து அவளை அந்த வீட்டின் எஜமானியாக நிற்கவைத்து மனம் குளிரவைத்தார் .

சுபத்ரா மற்றவர்களை அதிகாரத்தில் மிரட்டி அவளை மிரட்சி கொள்ளவைத்தாள். பார்த்தீபன் ஒட்டாத பார்வையோடு ஓர் தலையசைவை கொடுத்து தன்னை தனித்து நிற்க வைத்தான் .

அவள் அங்கு வந்து ஒருமணி நேரத்திற்குள் ழையாவிற்கு ஓர் அளவு அங்குள்ள சூழ்நிலையைப் புரிந்து இயல்பாக இருக்க தன்னை தயார் படுத்திக்கொண்டாள்.

மதிய சாப்பாட்டிற்கு அங்கிருந்த பெரிய டைனிங் ரூமிற்கு வந்ததும் அங்கிருந்த மேஜையில் இருந்த உணவு வகைகளை பார்த்ததும் இப்போ இவர்கள் வீட்டு ஆட்களுக்கு மட்டும் சமைத்தார்களா? அல்லது உணவுகளை அலங்கரித்து போட்டி நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருகிரார்களா? என்று மனதிற்குள் எண்ணியபடி வந்தாள்

உணவு மேஜையின் அருகில் வந்ததும் மஹிந், ழையா உட்கார்வதற்கு சேரை இழுத்து அதில் அவளை உட்காரச்சொன்னவன் அவள் அருகில் அமர்ந்தான் .

ஏனோ.. ழையாவாள் அங்கு கூச்சமில்லாமல் சாப்பாட்டை சாப்பிட முடியவில்லை. பார்த்தீபன் ழையாவிடம் இயல்பாக பேசினாலும் ஏனோ ஓர் விலகல் அவளிடம் காண்பிப்பது போல் அவளுக்குத் தோன்றியது. .

ழையா இயல்பாக இருப்பது போல் இருந்தாலும் அவளுக்கு மூச்சு முட்டும் அழுத்தம் இருந்தது எப்போதடா தனிமை கிடைக்கும், தன்னை இலகுவாக்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தாள்.

சாப்பிட்டதும் மஹிந்தனுடன் பார்த்தீபன் தொழில் ரீதியான் பேச்சை பேசியபடி அலுவலக அறைக்கு கூட்டிப் போக பார்த்தான். ஆனால், மஹிந்தன் ழையாவை பார்த்தபடி அவனுடன் செல்ல தயக்கம் காண்பித்தான்.

அவனின் தயக்கம் பார்த்து கேலியாக, உங்கள் மனைவி ழையாவுடன் என் ஸ்வீட் ஹார்ட் நிறைய பேசவேண்டும் என்று என்னை கூட கண்டு கொள்ளாமல் அண்ணியுடனே பேசிக்கொண்டு இருக்கிறாள்

“சோ! மதுராவிற்கு கொஞ்ச நேரம் ழையாவை விட்டுக்கொடுங்கள் என்று கூறினான் “. அவன் கூறுவதை கேட்டு சிரிப்புடன், கல்யாணமாகி ஒருவருடம் முடிந்தபின்னாலும் இன்னும் நீங்கள் வீட்டில் இருக்கும் போது, என் தங்கயை உங்களிடமே பிடித்து வைத்துக்கொள்ளத்தானே நினைகிறீர்கள்.

புதுமாப்பிள்ளை நான் எப்படி என் மனைவியை அருகில் வைத்துக்கொண்டு கண்டும்காணாமல் இருப்பேன் என்று கூறினான்.

அவர்கள் இருவரின் பேச்சை கேட்டு ழையவிற்குத்தான் சங்கடமாக இருந்தது. .மதுராதான் “நாங்கள் எங்கோயோ உங்களை விட்டுப் போவதுபோல ஓவரா ஆக்ட் கொடுக்காதீர்கள்”. மாமனும் மச்சானும் போய் தொழிலை கொஞ்சநேரம் கட்டிக்கொள்ளுங்கள். நான் என் அண்ணிக்கு வீட்டை சுற்றிக் காண்பிக்கப்போகிறேன் என்றவள், நீங்கள் வாங்க அண்ணி! நான் உங்களுக்கு வீட்டின் எல்லா இடங்களையும் காண்பிக்கிறேன் என்று கூட்டிச்சென்றாள்.

போகும் அவர்களை திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டே மஹிந்தன் அலுவலக அறைக்கு பார்த்தீபனுடன் சென்றான்.

தன்னுடைய மாமியாரின் கண்ணை விட்டு தள்ளி வந்ததும் இலகுவாக ழையாவிற்கு மதுராவிடம் பேச்சு வந்தது. மதுராவும் ழையாவிடம் குடும்பத்தை தவிர்த்து அவர்களின் கல்லூரியை பற்றியும் தோழிகளை பற்றியும் மற்ற விருப்பு வெறுப்புகளை பற்றியும் பேசவும் அதில் ஆழ்ந்து போனாள்.

பக்கவாட்டில் தெரிந்த தோட்டத்தை பார்த்து அதன் அழகில் தன்னை மறந்து லயிப்புடன் பார்த்தவளைப் பார்த்த மதுரா, உங்களுக்கு தோட்டம் பிடுச்சிருக்கா நான் தான் இதனை பார்த்துப் பார்த்து அண்ணனின் உதவியுடன் உண்டாக்கினேன். வாங்களேன் வெளியில் போய் அதனை பார்ப்போம்! என்று கூறினாள்.

அப்பொழுது திரும்பும் போது பின்னால் பக்கவாட்டில் இருக்கும் சமையல் அறையில் இருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழித்து எல்லோருக்கும் டெசர்ட் டிஸ்சை கொடுபதற்காக கையில் கண்ணாடி தட்டில் அடுக்கியிருந்த கண்ணாடி டிரேயுடன் வந்த வேலைகாரி ராசாத்தி மேல் மோதிவிட்டாள் ழையா. அவளின் கையில் இருந்த தட்டு கீழே சிலீர்.... என்ற சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.