(Reading time: 20 - 40 minutes)

அதில் பதறியது ராசாத்தி மட்டும் அல்ல... ழையாவும் தான். ஸாரி..ஸாரி...நான் தெரியாமல் மோதிவிட்டேன் என்றாள்

பயத்துடன் தனக்கு செம வசவு கிடைக்கப் போகுது என்று பயத்துடன் இருந்த ராசாத்திக்கு ஸாரி..என்ற ழையாவின் வார்த்தையைக் கேட்டதும் பயம் நீங்கியது. ஆனாலும் என்னிடம் ஸாரி.... எல்லாம் நீங்கள் கேட்க கூடாது சின்னம்மா என்ற படி கீழே கிடந்த கண்ணாடி துண்டுகளை பொருக்க அவள் குனிந்ததும், ழையாவும் தன் காலின் கீழ் விழுந்த துகள்களை குனிந்து எடுத்தாள்.

அந்த நேரம் அங்கு சுபத்ரா சத்தம் கேட்டு வந்தாள், வந்தவள் ழையா கீழே குனிந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுப்பதை பார்த்ததும், குறைந்த சத்தத்துடன் கோபத்துடன் என்ன செய்துகிட்டு இருக்கிற நீ? என்று கேட்டாள்

நிமிர்ந்து ழையா பார்த்தவுடன் மேலும் சீற்றமாக பெரிய இடத்தின் மருமகளாக ஆசைப்பட்டு வந்தால் மட்டும் போதாது. பெரிய வீட்டு பெண்களை போல நடந்து கொள்ள வேண்டும். கீழே கிடக்கும் உடைந்த துண்டுககளை பொறுக்கி கொண்டு இருக்கிறதை பார்... என்று கூறினாள்

அவளின் வார்த்தைகள் ழையாவை மிகவும் மனம் வலிக்க செய்தது .அவளிடம் கூறியவள் ராசாத்தியைப் பார்த்தது உனக்கு கவனமாக வேலை செய்ய முடியாதா? இப்படித்தான் பொருட்களை கீழே போட்டு உடைப்பாயா? என்று கர்ஜித்தாள்.

உடனே “இல்லை நான் தான் அவர்கள் வருவதை கவனிக்காமல் மோதிவிட்டேன்” என்று அவள் மேல் தவறு இல்லை என்று கூற வந்த ழையாவை

நீ கொஞ்சம் சும்மா இரு...என்று வார்த்தைகளை கடித்து துப்பியவள் , மதுரா! ரிசப்ஷனுக்கு புது புடவைகளை கடையில் இருந்து கொண்டுவரச்சொல்லியிருந்தேன் அவர்கள் வந்துவிட்டார்கள் “உன் அண்ணியை கூப்பிட்டுப்போய் எது எடுக்கலாம் என்று பார் என்றவள் ” ராசாத்தி பக்கம் திரும்பி அவள் இந்தப்பக்கம் வருவதை நீதான் கவனித்து இருக்க வேண்டும். ஐந்து நிமிடத்தில் இந்த இடத்தை சுத்தம் செய் என்றவள் ஹாலுக்கு வந்தாள் .

அங்கு விரிப்புகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அழகான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை ஆர்வமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த ழையாவின் அருகில் வந்து உட்கார்ந்த மஹிந்தன், தானே அழகான சேலைகளை எடுத்து அவளின் மேல் போட்டு அழகு பார்த்தவனை அவன் தங்கை மதுரா, கேலியாக அண்ணா! இது பப்ளிக் பிளேஸ் உங்கள் பெட் ரூம் கிடையாது என்று கூறினாள்.

ஸ்..மதுரா இப்ப நான் என்ன பண்ணினேன் எந்த புடவை அவளுக்கு பொருத்தமாக இருக்கும் என அவளின் மேல் போட்டுப்பார்த்தேன். உன் அண்ணிக்கு எல்லா புடவையுமே அழகாகத்தான் இருக்கு என்றான் .

ழையாவிற்கு அவர்களின் கேலிப் பேச்சும் ,மஹிந்தனின் அருகாமையும் பெறும் அவஸ்த்தையாக இருந்தது. அப்பொழுது அவனும் ழையாவும் அவர்களின் முன் வைக்கப்பட்ட புடவையின் மேல் எடுத்துப்பார்க்க ஆர்வமுடன் ஒன்று போல் கைகளை கொண்டு செல்ல அந்த புடவையை பார்த்த மதுராவும் இது ரொம்ப நல்ல இருக்குதுல்ல அண்ணி என்று கூறினாள்

மதுராவிடம், “உன் அண்ணியை நிற்க வைத்து இந்த புடவையை அவளின் மேல் வைத்து காமி மதுரா” என்றான் மஹிந்தன் .

அந்த புடவை அவளுக்கு மிகவும் அழகாக இருந்ததும் அதையே எடுக்க சொன்னான் மஹிந்தன். ஆனால் சுபத்ரா அந்த புடவையின் விலையை பார்த்துவிட்டு ஏய் இது என்ன இவவளவு விலை கம்மியாக இருக்கிறது. இன்னும் வொர்க் அதிகம் உள்ளதாக பார்த்து எடு மதுரா என்று கூறினாள்.

அவள் கூறியதை கேட்டு மதுரா “அம்மா...அண்ணிக்கும் இந்த புடவை பிடிச்சிருக்குப் போல அதனால் இதையே எடுக்கலாம்” என்றாள் .

அவள் அவ்வாறு கூறியதும், “ம்..கூம்....அவளுக்குத்தான் நம் ஸ்டேடஸ் தெரியாமல் இந்த புடவையை சபையில் உடுத்தலாம் என்று சொன்னால் உனக்கு எங்கே போச்சு புத்தி மதுரா.” என் மகனுக்கு கல்யாணம் தான் சிறப்பாக செய்ய முடியாமல் போனது. ரிசப்சனாவது நல்லா கிராண்டா செய்யணும் என்றபடி நிறைய வொர்க் உள்ள லட்ச்சத்துக்குமேல் உள்ள புடவையை தேர்ந்தெடுத்தாள்.

அந்த புடவையும் அழகாக இருந்ததுதான், எனினும் ழையாவிற்கு முதலில் எடுத்த சேலையில் மறுப்பு தெரிவித்த சுபத்ராவின் வார்த்தைகள் மதுராவை தாக்கியது. அவளுக்கு எப்போதடா இந்த இடத்தை விட்டு தனிமையில் போய் தன்னை ரிலாக்ஸ் செய்வோம் என்று ஆனது.

அதற்குப் பின் எடுத்த புடவைகளுக்கும் நகைகளுக்கும் எந்த ஒரு அபிப்ராயத்தையும் தன் முகப் பாவத்தில் கூட காண்பிக்காமல் கடினப்பட்டுப் போனது ழையாவின் முகம் .

எல்லாவற்றையும் எடுத்து முடித்ததும் மஹிந்தன் ஓகே மாம்... ழையா முகம் ரொம்ப டையர்ட் ஆக தெரிகிறது அவள் எங்கள் ரூமில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றவன்.

வா பேபி! நீ இன்னும் வீட்டை சுற்றிப் பார்க்கவில்லை என்று மதுரா சொன்னாள். உனக்கு நம் ரூமை காண்பிக்கிறேன் இப்பொ ரெஸ்ட் எடு பிறகு பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தவளை எழுப்பி கூட்டிச்சென்றான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.