(Reading time: 13 - 26 minutes)

13. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

ப்ரம்மதேசம்-பெயரிலேயே கம்பீரத்தோடு விளங்கும் இந்த கோயில் 500-1000 வருடங்கள் பழமையானது..இங்கு மூலவர் கைலாசநாதர் ஆகிய சிவன்.. இது ப்ரம்மனின் பேரனாகிய ரோமாச மகரிஷியால் வழிபடபட்டதால் ப்ரம்மதேசம் என்று பெயர் பெற்றது..இங்கு மொத்தமாய் ஐந்து  சிவ அவதாரங்கள் கைலாசநாதர்,பத்ரி வானேஸ்வரர்,விஷ்வநாதர் விசாலாட்சி தாயார்,அருணாச்சலேஸ்வர் உண்ணாமலை தாயார்,சுந்தரேஸ்வரர் மீனாட்சி தாயார் ஆகிய உருவில் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்..இது முதன்முதலாய் ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகவும் அதன் பின்பு பாண்டியர்கள் காலத்தில் மேம்படுத்தப் பட்டதாகவும் வரலாறு..தாமிரபரணியும் கடனாநதீயும் இணைவது இந்த இடத்தின் தனிச்சிறப்பு..அதுமட்டுமல்லாமல் நவகைலாயங்களில் முதல் கோவிலாய் இது இடம்பெற்றுள்ளது..

அந்த ஊரில் இத்தனை பெரிய கோவிலை நிச்சயமாய் கார்த்திக் எதிர்பார்த்திருக்கவில்லை..சஹானாவின் கைகோர்த்து உள்ளே நுழைந்தவன் கோவிலை சுற்றிப்பார்க்க அவளோ வேறு சிந்தனையின்றி நேரே கற்பகிரகத்தின் முன் சென்று கைகூப்பி தன்னை அந்த சிவனின் பாதங்களில் தொலைத்தாள்..என் சிவன் எப்பவுமே அழகு இல்ல மாமா..என்றவாறு பிரகாரத்தைச் சுற்றி வர கார்த்திக் தங்கள் திட்டப்படி மணிக்கு கண்ஜாடை காட்ட அவர் வேலையை முடிக்கச் சென்றார்..சற்று தூரம் சென்றவள் மாமா இங்க வா என அவன் கைப்பிடித்து ஓரிடத்தில் அமர்த்த நாம இப்படி சந்தோஷமா இருந்து எத்தனை வருஷமாச்சு மாமா என்று எங்கோ பார்த்து கூற அவள் பார்த்த இடத்தை பார்த்தவனின் கண்கள் விரிந்தன..கோவிலின் ஏழு கோபுரங்களூம் அங்கிருந்து தெளிவாய் தெரிந்தது..அந்த கட்டிட கலையும் மண்டப அமைப்புகளும் அவனுக்கு மேலும் மேலும் ஆச்சரியத்தை அளித்தது..

கோவிலிலிருந்து வெளியே வரவும் சற்று தொலைவிலிருந்து மணி அவர்களை அழைக்க,கார்த்திக்,ஷரவன் நீ ஷரவ்வையும் சஹானாவையும் கௌரியும் கூட்டிட்டு கிளம்பு நாங்க ஒரு அரைமணி நேரத்துல வந்துரோம்..

மாமா நாங்க வீட்டுக்கு போய் என்ன பண்ணபோறோம் நாங்களும் வரோமே ப்ளீஸ் ப்ளீஸ்..

சஹி என அவன் பேச ஆரம்பித்த நேரம் சிவா யாரையோ பார்த்து கை காட்டவும் சஹானாவை தாண்டி கார்த்திக் பார்க்க பின் திரும்பிய சஹானாவோ முகம் சிவக்க நாங்க கிளம்புறோம் மாமா சீக்கிரம் வந்துரு என்று கூறிவிட்டு விறுவிறுவென காரில் சென்று அமர்ந்துவிட்டாள். கார்த்திக்கோ சிந்தனையில் ஆழ்ந்தான்.. .வந்தவன் அன்று ஹோட்டலில் இடித்தவன்..இவன் இங்க என்ன பண்றான் ஒரு வேளை சஹிய ஃபாலோ பண்றானா இல்லேயே பாத்தா பெரிய மனுஷன் மாதிரி இருக்கானே என்று பலவாறு சிந்திக்க அதற்குள் சிவா கார்த்திக்கிடம் அவனை அறிமுகப்படுத்தினான்..கார்த்திக் திஸ் ஸ் மிஸ்டர் அருண் என் ப்ரெண்ட்டோட க்ளைண்ட்..அருண் இது கார்த்திக் எங்க வீட்டு மாப்பிள்ளை..

இருவரும் சிநேகமாய் கைக்குலுக்கிக் கொள்ள சில நிமிட உரையாடலுக்குப் பின் அவன் கிளம்ப,யாரு சிவா இது???

பெரிய ப்ஸினஸ் மேன் கார்த்திக் ஆனா நிறைய இல்லீகல் இன்கம்..ப்ளாக் மணி லேண்ட் ராபரிநு அத்தனை கேஸ் இருக்கு..சொந்த ஊர் இதுதான் ஆனா மாசத்துல பாதி நாள் சென்னைல தான் இருப்பான்..என் ப்ரெண்ட் இவன் கேஸ் வந்தாலே பொலம்புவாரு..தெரியாம ஒத்துகிட்டு இவனுக்குலா வாதாட வேண்டியிருக்குதேநுவாரு..சரி வாங்க நாம வேலையை கவனிப்போம் என்றவாறு மணியை நோக்கிச் செல்ல கார்த்திக்கும் அப்போதைக்கு அந்த பேச்சை விட்டு சென்றான்..இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி சிறு வீட்டின் முன் சென்று மணி ராணி என்றழைக்க,பின் முப்பதுகளில் ஒரு பெண்மணி வெளியே வந்தார்..

வா மணி அண்ணே இவக தான் நீ சொன்னவுகளா வாங்க உள்ளே வாங்க..அங்கு எண்பது எண்பத்தைந்து வயது மதிக்கத்தக்க முதியவர் அமர்ந்திருக்க ராணி அவரிடம் தாத்தா இவுக உங்ககிட்ட ஏதோ விவரம் கேக்கணுமாம்..

ஏன்பா சிங்ககுட்டிமாறி இருக்குற உங்களுக்கு இந்த கிழவன் என்ன பண்ணணும்???

தாத்தா இந்த ஊர்ல நெத்தில திருநாமமும்  கழுத்துல ருத்ராட்சமும் போட்டு சாமியார் யாராவது இருக்காங்களா???

அப்படி யாரும் இல்லயே தம்பி இத கேக்கவா இம்பூட்டு தூரம் வந்தீக இத இந்த ஊர்ல யாரு கேட்டாலும் சொல்லிருப்பாகளே.

ஏதோ கூற வாயெடுத்த சிவாவை கைப்பிடித்து அமர்த்தியவன்..ஐயா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இங்க தேவிகாநு யாரும் இருந்தாங்களா தயவுசெஞ்சு கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்..சில நொடிகள் யோசித்தவர் இல்லையே தம்பி சட்டுநு பிடிபடல வயசாகுதுல..என்று கூறும்போதே உள்ளிருந்து அவர்களுக்கு மோர் எடுத்து வந்த அந்த பெண்மணி அவரிடம் தாத்தா ஒருவேளை இவுக அந்த சாமிகொண்டாடி சித்தரப்பத்தி கேக்காகளோ???என் று வினவ மறுபடியும் யோசனையில் மூழ்கியவர் ஏலே தம்பிகளா ஒருவேள நீங்க அந்த தேவி பொண்ணப்பத்தி தான் கேக்குறீகளோ???

தாத்தா..என அப்பட்ட அதிர்ச்சியோடு கார்த்திக் அவர் கைப்பற்ற நீங்க சொல்ற சாமியார் பேரு சாமி..இந்த ஊர்லதான் இருந்தாராம்..நம்ம கோவில் தீருவிழா வந்தா அவருமேல தான் சாமி இறங்குமாம் அப்படி அவரு சாமியாடி சொல்ற வாக்கு அப்படியே பலிக்குமாம்..இங்க மட்டுமில்லாம பக்கத்து கிராமங்கள்லையும் அவரதான் முதல்மரியாத பண்ணி கூப்பிடுவாகளாம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.