(Reading time: 13 - 26 minutes)

ஸாரி அண்ணி நா அப்பறமா வரேன்..என வந்தவள் தலைகுனிந்தவாறே திரும்ப

ஹே ஷரவ் நீ வா நானே வெளியே தான் கிளம்பிட்டு இருந்தேன்..என்றவன் விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்..தனதறைக்கு வந்து அமர்ந்தவனுக்கு மனம் மொத்தமும் அவனின் சஹானா தேவிகாவாய் நிறைந்திருந்தாள்..என்ன மாதிரியான காதல் இது ஒரு பெண்ணால் இந்தளவு பைத்தியமாய் காதலிக்க முடியுமா??இதற்கெல்லாம் என்னால் என்ன திருப்பித் தர முடியும்..இது அனைத்தையும் தாண்டி அவள் எப்படி இறந்துபோனாள்..அவளை காப்பாற்றாமல் இவன் எங்கு சென்றிருப்பான்..தன்னை காப்பாற்றாதவனுக்காக ஜென்மமாய் காத்திருந்தாளா??இந்த கேள்விகள் தான் அவனுள் உலன்று கொண்டேயிருந்தன அந்த ஆற்றாமையை தான் தன்னவளின்மேல் முத்தங்களாய் இறக்கினான்..ஏதேதோ எண்ணியவனுக்கு கண்கள் குளமாக அதை துடைக்கக் கூட தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..எவ்வளாவு நேரம் சென்றதோ தெரியாது சஹானா அழைக்கும் ஓசையில் நினைவிற்கு வந்தவன் கண்ணைத் துடைத்தவாறு எழுந்து வாசல் நோக்கி வர வேகமாய் வந்தவள் மாமா எனக்கு ஒண்ணு வேணும்..

மறுபடியுமா குடுத்துட்டா போச்சு என அருகில் செல்ல..அய்யே அதில்ல கீழே போ நா வரேன் எல்லாரும் மொட்ட மாடில இருக்காங்கநு நினைக்குறேன்..என்றவாறு அவள் செல்ல கார்த்திக் கீழே வந்து பார்த்தால் கையில் பெரிய கம்போடு அதன் நுனியில் கலர்கலராய் ஏதோ சுற்றியிருக்க அதை தாங்கியவாறு வயதானவர் ஒருவர் நின்றார்..சொல்லுங்க யார் வேணும் உங்களுக்கு??

இப்போ போனாங்களே அந்த பொண்ணுதான்ப்பா கூப்டுது??

சஹானா யாரு இவரரு??

வரேன் வரேன் கார்த்திக் என குரல் மட்டும் வந்ததே தவிர அவளை காணவில்லை..சஹி என்ன பண்ற வா சீக்கிரம் யாரு இவரூ??

ஆஆ வரேன் மாமா ஏன் காத்துற யாரு யாருனா இவரு என்ன என் சொந்தகாரரா??கையில மிட்டாய் வச்சுருக்காரே பாக்கல??

என்னது மிட்டாயா??என கார்த்திக் குழம்ப அவள்பின் வந்த ஷரவன் ஷரவந்தியும் அதே முகபாவத்தோடு எட்டிப்பார்க்க அந்த கம்பின் மேல் இருந்தது மிட்டாய் என அப்போதுதான் புரிந்தது..அண்ணா எனக்கு இரண்டு கைலயும் வாட்ச் கட்டி விடுங்க ப்ளீஸ்..என கையை நீட்ட அவர் அந்த சவ்வுமிட்டாயை அழகான வாட்ச் போன்ற அமைப்பில் அவள் கைகளில் கட்டிவிட்டார்..அனைவருக்கும் வேண்டியைதை வாங்கி கொடுத்து அவரை அனுப்பி விட்டு திரும்பியவள் கார்த்திக்கிடம் வந்து தன் இரு கைகளையும் நீட்டியவாறு எப்படி என கண்ணால் கேட்க,ஒரு நொடி மௌனத்திற்குப்பின் அவனோ,ஐய்யய்யே சிவா கடைசில எல்லாருமா சேந்து குச்சி மிட்டாய் குருவி ரொட்டிட்ட மாட்டி விட்டீங்களே நியாயமா என முடித்ததுதான் தாமதம் என்ன மாமா சொன்ன என சஹானா அவனை துரத்த மாடியை நோக்கி ஓடினான்..அவர்களையே சிவா பார்த்திருக்க,என்ன சிவா அப்படி பாக்குறீங்க??-ஷரவ்..

இல்ல ஷரவ் உங்க அண்ணண பாத்தா ஆச்சரியமா இருக்கு இவ்ளோ பெரிய விஷயத்தை எவ்ளோ அழகா ஹேண்டில் பண்றாரு..நம்ம விஷயத்தையே எடுத்துக்கோயேன்..கார்த்திக்கிட்ட இதபத்தி பேச ரொம்ப தயங்கினேன்..இதனால எங்க ப்ரெண்ட்ஷிப் பாதிச்சுருமோநு கவலப்பட்டேன்..ஆனா அவருக்கு ஏற்கனவே ஒரு கெஸ் இருந்திருக்கு இருந்தாலும் அவரா என்கிட்ட எதையுமே கேக்கல நானா சொன்னப்பவும் இதுல ஷரவ் தான் முடிவு பண்ணணும் அவளுக்கு விருப்பம்னா எனக்கு சந்தோஷம்தான்னு கூல்லா சொல்லிட்டாரு..எந்த அண்ணண்தான் இப்படி சொல்ற ஒருத்தன சும்மா விடுவான்..ஏன் நானே சஹானாக்காக யாராவது என்கிட்ட பேசியிருந்தா சும்மா இருந்திருப்பேனானு தெரில..ஹி இஸ் ரியலி க்ரேட்..

உண்மைதான் மாமா..அண்ணா எப்பவுமே டென்ஷன் ஆகி நாங்க பாத்ததுஇல்ல..ரொம்ப பொறுமையா அதே நேரம் ரொம்ப பொறுப்பா இருப்பாரு..இப்போ நா எனக்கு பிடிச்ச வேலையை செய்றேன்னா அது அண்ணாவால மட்டும்தான்..உண்மையிலேயே நாங்க ரொம்ப லக்கி என ஷரவன் கூற ஷரவந்தியும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்..

ங்கு சஹானாவோ ஹாலைச் சுற்றி கார்த்திக்கை துரத்த கார்த்திக் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான்..மாமா ஒழுங்கா வந்துரு நீ கிண்டல் பண்ணதுக்கு பணிஷ்மெண்ட் கிடைச்சே ஆகனும்..என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜன்னலோரமாய் இரூந்த அதை கையில் எடுத்துக் கொண்டு ஓ.கே சஹிகுட்டி கூப்ட்டு வராம இருப்பேனா ஆனா என் கெஸ்ட்டும் உன்ன பாக்க வரேன்னு சொல்றாங்க என தன் கையிலிருந்த கரப்பான் பூச்சியை அவள்முன் நீட்ட அலறி அடித்து ஓடியவள் சேரின்மேல் ஏறிக் கொண்டாள்..

மாமா ப்ளீஸ் ப்ளீஸ் அத கீழ விட்டுரு நா ஒண்ணும் பண்ணமாட்டேன் எனக்கு கரப்பான்பூச்சினாலே பிடிக்காது ப்ளீஸ்..

ம்ம் அந்தபயம் இருக்கனும் என்றவாறு அதை தூக்கிப் போட்டுவிட்டு அவளருகில் வந்தவன் இடையோடு பற்றி அவளை கீழேயிறக்க குறுகுறுப்பு தாங்காமல் நெளிந்தாள்..அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள் ஐயோ விடு மாமா கீழே எல்லாரும் என்ன நினைப்பாங்க என சிணுங்க..ம்ம் நீதான என்ன துரத்திட்டு வந்த சோ என்ன யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.