(Reading time: 20 - 40 minutes)

மஹிந்துக்கு இன்னும் இரு தினங்களில் ரிசப்சன் என்றதும் அதற்கு வேண்டிய வேலைகளை ஆர்கனைஸ் பண்ணுவதற்குரிய வேலைகளில் மூழ்கிவிட்டதால் ழையாவின் முகச் சினுக்கத்தை கவனிக்க மறந்தான்.

முகம் நிறைந்த புன்னகையுடன் வெல்கம் அவர் ஹெவன் பேபி! என்று அவனின் அறைக்குள் அவளை இழுத்துச்சென்றவன் ப்ளீஸ் ஒன் ஹக் ழையா என்றவன் அவலை கையிரண்டிலும் தூக்கியவன் படுக்கையில் ஆவலுடன் விழுந்து தன்னுடன் இறுக்கிக்கொண்டான் .

ஏற்கனவே அவனின் அம்மாவின் வார்த்தைகளில் காயம் பட்டிருந்த அவள் மனது அவனின் அணைப்பை துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவனின் பிடியில் இருந்து விலக முயன்றவளை ப்ளீஸ் ழையா எனக்கு இப்பொழுது உள்ள சந்தோசத்தில் உன்னை அப்படியே ஸ்.....என்றவன் பேபி நான் உன்னிடம் சொன்ன பிராமிஸ்சை வாபஸ் வாங்கிக் கொள்ளலாமா? என்று தாபத்துடன் கேட்டான் .

அவன் அவ்வாறு கேட்டதும் அதுதானே அன்னைக்கு என்னவோ..... ரொம்ப திருந்தி என் மனசை புரிந்து கொண்டவர் மாதிரி ஸீன் போட்டாரே! என்று பார்த்தேன். இப்போதானே தெரியுது நகை, புடவையைக் காட்டி என்னை அடைய என்று கூறிக்கொண்டு போனவளின் வாய், தன் கன்னத்தில் விழுந்த அடியில் அதற்கு மேல் வார்த்தை வராமல் அப்படியே உறைந்து தன் கண்களை விரித்து அவனை பார்த்தாள் . அடித்தவன் அவளை உதறி எழுந்து அமர்ந்து அவளின் கண்களின் பாவத்தில் ஏன்டீ... என்னை மிருகமாக்குர .இந்த வார்த்தையை சொல்லாதே என்று ஏற்க்கனவே உனக்கு பொறுமையா அன்னைகே எடுத்துச் சொல்லி இருகிறேன்ல...

என்று கூறிக்கொண்டு போனவன், தன் போன் ஒலியில் அதனை எடுத்துப்பார்த்து இதோ வந்துட்டேன் டாட் என்றவன் அவளை திரும்பியும் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான் .

அவனின் மனம் அவளின் வார்த்தைகளால் துடித்துக்கொண்டு இருந்தது. நான் அப்படி சொன்னது தப்பு என்று எத்தனை தடவை இவளிடம் சொல்லிவிட்டேன் ஆனாலும் நான் சொன்ன வார்த்தையை அவளால் இன்னும் மன்னிக்கவோ மறக்கவோ முடியவிலையே..... .

அவன் ழையவிற்கென்று வேறு வீடு வாங்கிக்கொடுத்து அதில் அவளுடன் சேர்ந்து இருந்திருந்தாலும் இன்று தான் பிறந்து வளர்ந்த இடத்தில் மனைவியாக தன் உணர்வில் நிறைந்தவளை தனது அறைக்குள் கூட்டி வரும்போதே அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் கை வளைவில் அவளை தன் அறைக்குள் கொண்டுவந்தவனுக்கு ஒருநிமிடம் தன்னை கட்டு படுத்த முடியாமல் போய் விட்டது.. ஆனால் அவளின் வார்த்தைகளில் தானும் காயம்பட்டு அவளையும் வலிக்க செய்தவுடன், அவள் கண்களில் கண்ட அதிர்ந்த பாவத்தில் அவனுக்கு செத்து விடலாப் போல் ஆகிவிட்டது. எப்போ பேபி இந்த கண் என்னை காதலாய் பார்க்கும் என்று அவனுக்குள் சொல்லிக்கொண்டு வந்தவன், அண்ணா! என்ற அழைப்பில் தன் உணர்வு வந்தவன் தம் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு என்ன மதுரா! என்று கேட்டான்.

அண்ணா எங்க வீட்டில் இருந்து உடனே வரச்சொல்லி போன் செய்துவிட்டார்கள். ஐஸ்வர்யாவின் கல்யாணத்திற்கு இன்விடேசன் மாடல் கொண்டுவந்திருகிறார்களாம். என்னவோ சாக்குச்சொல்லி எங்களை உடனே வரச்சொல்கிறார்கள். அண்ணி என்ன செய்றாங்க சொல்லிவிட்டு கிளம்புகிறேன் என்றாள்

அதற்கு மஹிந்தன் அவள் இப்போ தூங்குகிறாள் அவள் எழுந்ததும் நான் சொல்லிக் கொள்கிறேன். நீ உன் வீட்டிற்கு போய்வா! என்று விடை கொடுத்தவன் தன் தந்தையை காணச் சென்றான்.

ழையாவிற்கு அவன் அறைந்ததும் முதலில் அதிர்ந்தாலும் பின் அவனின் கோபம் அவளின் புண்பட்ட மனதிற்கு மருந்தாகவே ஆனது .

அவளின் மனம் முரண்டிய நேரத்தில் அவனின் சரசத்தை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவனை விலக்கத் தான் அவன் முன்பு கூறிய அந்த வார்த்தைகளை அவள் கூறினாள். ஆனால் அவளை தாழ்த்தும் அந்த வார்த்தையை இப்பொழுது அவனால் ஜீரணிக்க முடியாமல் கடுமை காட்டியது ஏதோ ஒருவகையில் அவளுக்கு ஆறுதலாக இருந்தது

அவனின் மேல் கோபம் சற்று மட்டுப்பட்டாலும் சுபத்ராவின் வார்த்தைகள் மஹிந்தனின் மேல் தான் திரும்பியது. இவனும் இவன் அம்மாவும் அந்தஸ்த்தில் பெரியவர்கள் என்றாள் அது அவர்களுடன் என்னை வலிய கல்யாணம் செய்து இப்போ அந்தஸ்த்தை காட்டி அவமானப் படுத்தி பின் கொஞ்சுவருவானாம், நான் ஈஈஈ...... என்று பல்லை காட்டி இருக்கனுமாம் என்று மனதிற்குள் பொரிந்து தள்ளினாள்.

ரவு வரை அந்த அறையை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தவளுக்கு மீண்டும் மீண்டும் மஹிந்தனை பற்றிய எண்ணமே மனதினில் வளம் வந்தது. அந்த அறையின் பிரமாண்டமும் அதில் வீற்றிருந்த பொருள்களின் அழகும் நேர்த்தியும் கண்டு இவன் எதையுமே உபயோகப் படுத்தாமல் புதுசாக துடைத்து துடைத்து வைத்துக்கொள்ளும் ராகமோ என்று எண்ணினாள். .அங்கிருந்த தொலைக்காட்சியை இயக்கி பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு எந்த நிகழ்ச்சியிலும் மனம் ஒன்ற முடியவில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.