(Reading time: 17 - 34 minutes)

அடுத்ததடவை ழையாவுடன் வரும் போது தங்கிவிட்டு போவதுபோல் வருகிறோம். நீங்கள் நான் இப்பொழுது உடனே கிளம்புவதை பெரிதுபடுத்தக்கூடாது என்று விளக்கமாக பார்வதிக்கு பதில் கொடுத்ததுடன் ழையாவை சமாதானப்படுத்துமாறு கூறினான் .

அப்போ சரி ,கவி! நீ மாப்பிள்ளையுடன் கிளம்பு. உன் ரூமில் உனக்கு இன்னும் சில புது உடைகளுடன் கூடிய பேக் வைத்துள்ளேன். இரு, அதையும் எடுத்துக்கோ என்றாள்

ழையா மனதில் மருண்டபடி அதை தன் கையில் நடுக்கமாக பிரதிபலித்தபடி பார்வதியின் கையை பிடித்தவள், அம்மா! எனக்கு அங்கு போவதை நினைத்தால் இவங்க அம்மாவை நினைத்து பயமாக இருக்கிறது.  அவர்கள் எதுவும் உங்களை தவறுதலாக பேசினால் கட்டுப்படுத்தமுடியாமல் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிடுவேனோ..? என்று அச்சமாக இருக்கிறது என்றாள் .

அவள் பயத்தினை தன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் தன் அம்மாவைப்பற்றி  பார்வதியிடம் கூறியது மஹிந்தனுக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது. இருந்தாலும் அவள் பயப்படும்மாறு தன் அம்மா தான் நடந்து கொள்கிறார்களே! என்று விசனம் உண்டானது. இருந்தும் அதை வெளிப்படையாக அவனால் ஒத்துக்கொள்ள முடியாமல் அவனின் ஈகோ தடுத்தது .

எனவே, நோ ழையா! அம்மா, என்மனைவிக்கு உரிய மதிப்பை கண்டிப்பாகத் தருவார்கள் நீ அனாவசியமாக பயப்படுகிறாய் ம்……ம் வா போகலாம் என்று கடினமான குரலுடன்  கூறியவன் முன்னால் நடந்தான்.

வாசல் வரை போனவன் ஈஸ்வரனிடம் வருனிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பவில்லை என்பதை ஞாபகம் வந்தவனாய் ழையா பின்னால் வருகிறாள் என்ற நினைவில் ழையா  உன் அப்பாவிடமும் தம்பியிடமும் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று சொன்னபடி திரும்பினான்

ஆனால் ழையா அவன் பின்னால் வராமல் தன் அம்மாவிடமும் அப்பாவிடமும் பொங்கும் கண்ணீருடன் பேசிகொண்டு இருந்ததை பார்த்தவனுக்கு  மனம் துடித்தது. பார்த்தவன் கண்களை அவளை விட்டு விளக்காமல்  இருந்தவனுக்கு  அவளுடைய கண்ணீர்  அவனை பாதிப்பதை உணர்ந்தான்.  மனதிற்குள் நோ பேபி நீ ஆறுதல் தேட என்னைத்தான் தேடவேண்டும். நீ வருத்தப்பட்டால் என் மனம் வலிக்கிறது. அப்படியிருக்க நான் உன் மீது பித்தாக இருக்க நீ என் அன்பை புரிந்து கொள்ளாமல் என்னுடன் வர பயந்து கண்ணீருடன் நிற்கிறாயே... உன் மனம் என்னை தேடும் நாள் என்றோ? என்ற ஏக்க பார்வை பார்த்துக்கொண்டே இருந்தான்.

அவளை அனைத்து பார்வதி தங்களை விட்டு தன் மகள் பிரிந்து போவதையும் பிடிக்காத மாமியாரின் வீட்டில் தன் மகள் ஏதேனும் கஸ்ட்டப்படுவளோ? என்று கலக்கத்தில் தொண்டை அடைத்தது.  தான் கண் கலங்கினால் ழையா மேலும் பயந்து விடுவாள் என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அழக்கூடாது கவி இனி அதுதான் உன் வீடு உன் அம்மா நான் கோபத்தில் உன்னை திட்டினால் பொருத்துப்போகமாட்டாயா? அதுபோல் உன் அத்தை ஏதேனும் கூறினாலும் பெரிதுபடுத்தாமல் போய்விடவேண்டும். காலபோக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவர், பார்! மாப்பிள்ளை உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார், போய்வா! என்று கூறியதும் தன் அம்மா அப்பாவின் பாதம் பணிந்து தன் தம்பியிடமும் விடைபெற்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மஹிந்தனுடன் வந்து காரில் ஏறினாள்.

காரில் ஏறியவளின் முகத்தில் இருந்த கலக்கத்தை போக்க வேண்டும் என்று மஹிந்தனுக்கு ஏக்கம் பிறந்தது. ஆனால் அவள் தன்னிடம் அடைக்கலமாகாமல் அவள் அம்மாவிடம் ஒன்றியத்தை நினைத்தவனுக்கு நேரிடயாக அவளை சமாதானப் படுத்துவதற்கு ஈகோ தடுத்தது

எனவே அவளை வம்பிலுப்பதன் மூலம் அவளின் கவனத்தை திசை திருப்ப நினைத்தான்.

பேபி  வீட்டிற்கு போவதற்கு முன் உனக்கு செப்பல் அடியில் ஸ்டூல் அட்டாச் ஆனது போல்  ஒரு சில சோடி செருப்புகளை கடையில் வாங்கிவிட்டு போகலாமா...? என்று கேட்டான்

அவன் திடீர் என்று அவ்வாறு கேட்டதும் புரியாமல் என்ன சொன்னீங்க என்று கேட்டவளிடம் இல்ல நீ குட்ட கத்திரிக்காய் என்று வருண் சொன்ன பிறகுதான் ,என் அருகில் நீ நிற்கும் போது என் சோல்டருக்கு கூட இருக்க மாட்ட என்பதை கவனித்தேன்  அதனால் எனக்கும் உன் தம்பி போல் உன்னை குட்ட கத்திரிக்காய் என் கூப்பிட தோன்றும்....  அப்படி கூப்பிட்டால் என் பேபிக்கு  கோபம் வரும் எனவும் தோன்றியதா.... என்று சொல்லிக்கொண்டே போனான்

அவன் தன்னை குள்ள கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு போவதை கண்டு கோபம் பொங்க அவனை பார்த்துக்கொண்டு இருந்த ழையாவின்  கண்கள்  அவனை முறைத்தது .

அதனால் உனக்கு ஹைய் ஹீல்ஸ் செப்பல் வாங்குவோமா? என கேட்டால்  என்னை முறைக்கிறாய் என் கேட்டான்

ஹலோ.... நீங்கலெல்லாம் நெடு மரமா வளர்ந்துவிட்டீர்கள் என்பதற்கு மத்தவங்களை குள்ள கத்தரிக்காய்னு கிண்டல் பண்ணுவீர்களோ... என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போனாள்

உடனே மஹிந்தன்,  அப்படினா நீ குள்ள கத்தரிக்காய் இல்லை  இந்த மஹிந்தனுக்கு பொருத்தமான ஜோடிபுறா என்று உன்னை சொல்கிறாய்  என்று தூண்டில் போடுமாறு பேச்சை கொண்டு போனான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.