(Reading time: 17 - 34 minutes)

பின் அவர்கள் கொண்டுவந்த பழம், பூ அடங்கிய கூடையை ட்ரைவர் கொண்டுவந்து வைத்ததும் விஸ்வநாதன் கண் அசைவில் தன் மனைவியை எழுப்பி பார்வதி ஈஸவரன் இருவரிடமும் அதை கொடுத்தனர் .

அப்பொழுது விஸ்வநாதன் உங்கள் பெண் கவிழையா இப்பொழுது  எங்க வீட்டு மருமகள் ,இந்த கல்யாணம் நம்முன் நடக்காவிட்டாலும், நடந்ததை மறந்து இருவரின் எதிர்காலத்தை முன்னிட்டு ஏற்றுக்கொல்வதுதான், நாம் நம் பிள்ளைகளுக்கு செய்யும் நன்மை. மேலும், இனி தப்பு யார் பக்கம் என்று பேசி மனங்களை காயப்படுத்துவதற்கு பதில் நிகழ்ந்ததை சரிப்படுத்த முயற்சிக்கவேண்டும் என்றார் .

அவர் பேசியதும் ஈஸவரன், “உட்கார்ந்து மீதத்தை பேசலாம் சம்மந்தி” என்று தன்னுடைய ஒத்துழைப்பை சம்மந்தி என்ற வார்த்தையின் மூலம் சொன்னவர், பெண்பிள்ளையை பெற்றவன் நான். என் மகள் நல்லபடி வாழவேண்டும் அதைத்தவிர எனக்கு வேறென்னவேண்டும் என்றார்.

ஆனால் இனியும் உங்கள் மகன் என்மகளை காயப்படுத்தாமல்  இருந்தாலே  போதும் என்று வந்ததும் தன் மகள் தன்னிடம் வரவிடாமல் தடுத்ததை மனதில் வைத்து பேசினார் ஈஸவரன் .

அவர் பேசியதும் சுபத்ரா அதுதான் பெரிய இடமாகபார்த்து வளைத்து கல்யாணத்தை முடிசாச்சே! “பிறகு என்ன  பிலிம் காட்டிட்டு இருக்கிறீர்கள்” என்று கூறிக்கொண்டு போனவள் “பக்கத்தில் சுபத்ரா  என்று கோபத்துடன் தன் கையை பிடித்து அழுத்தும் விஸ்வநாதனின் செயலிலும்” “எதிரில் கண்களில் கோபத்துடன் பார்க்கும் மஹிந்தனின் முறைப்பிலும்” பிலிம் காட்டினால் உங்கள் மகள் பயந்துவிடுவாள் என்று சொல்லவந்தேன் என்று பேச்சை மாற்றி முடித்தாள் .

பார்வதிக்கு சுபத்ராவின் போக்கு வந்ததில் இருந்தே கவலை அளிப்பதாக இருந்தது மேலும் வருண் ஏற்கனவே இதற்க்கு முன் சுபத்ராவை மஹிந்தன் வீட்டில் பார்க்கும் போது நடந்த கலோபரங்களை கூறியிருந்தான் எனவேதான் அவள் மஹிந்தனை அவளின் அம்மா, அப்பாவரும் முன் தன் வீட்டிற்கு வரும்படி கூறியிருந்தாள் .

மேலும் ஏற்கனவே தன் மகளுக்கு சப்போர்ட் ஆக மஹிந்தன் பேசியிருக்கிறான் என்று கேள்விப்பட்டது அவளுக்கு ஆறுதலாக இருந்த போதிலும் அவன் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவனின்  அன்னை பிரச்சனை செய்வாளோ?, என்று எண்ணினாள்.

இதுவரை எப்படியோ, இனி இரு குடும்பங்களுக்கு இடையில் சுமூகமான உறவை மேற்கொண்டால்தான் தன் மகளின் பக்கம் தாம் ஆதரவாக் இருக்கமுடியும் என்று அடக்கி வாசிக்க நினைத்திருந்தாள்.

எனினும் மஹிந்தனின் அம்மாவின் பேச்சு அவளுக்கு சுர்.... என்று கோபத்தை கிளறியது.  “வலைவிரித்து என்மகளை பிடித்தது உங்கள் மகன்” என்று சிரித்தபடி சொன்னவள் பேச்சை திசைதிருப்பும் படி, எல்லோரும் சாப்பிடலாமா? என்று கேட்டாள் .

அதற்கு விஸ்வநாதன் இன்னொரு நாள் வந்து சாப்பிடுகிறோம். நீங்கள் என் மகன் செய்த கலோபரங்களை மனதில் வைத்து பிரச்சனை செய்யாமல் உங்கள் மகளை என் வீட்டிற்கு மருமகளாக அனுப்ப ஒத்துக்கொண்டதே எங்களுக்கு பெரிய சந்தோசம் என்று கூறினார்.

உடனே பார்வதி முதல்முதலாக வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், பழச்சாறாவது குடியுங்கள் என்று அதை எடுக்கச்சென்றார்.

அப்போது, “இன்னும் இரண்டு நாள் கழித்து வரும் வெள்ளிகிழமை    நம் பிள்ளைகளின் கல்யாண ரிசப்சனுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்”.   உங்களிடம்  தேதி முடிவு செய்வதற்கு முன் கலந்து ஆலோசிக்கும் படியான சூழல் இல்லாததாலும்   உடனே ரிசப்சன் வைக்கவில்லையெனில் வீண் வதந்திகள் எழும்பும். எனவே, அவசரமாக ஏற்பாடு செய்யும்  படி ஆகிவிட்டது. உங்கள் சார்பிலும் ஆட்களுக்கு அழைப்பு விட்டு  விடுங்கள். ரிசப்சனை எங்களின் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது பார்வதி பழச்சாறு கொண்டுவந்து அனைவருக்கும் கொடுத்தார்.

பின் அவர்கள் இருவரும் விடைபெறும் போது மதியம் நம் வீட்டிற்கு வந்துவிடுங்கள் மஹி. உன் தங்கை உங்களுக்குகாக வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து காத்திருக்கிறாள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றுச் சென்றனர் .

அவர்கள் சென்றதும் பார்வதி டைனிங் மேஜையில் சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டே, வருண், “மாமாவையும் அக்காவையும் மாமாவையும்   சாப்பிட வரச் சொல்”  என்று கூறிவிட்டு சாப்பாட்டு மேஜையில் பரிமாரறுவதற்கு ஆயத்தமானாள்

ழையாவின் கையை வந்ததில் இருந்து பிடித்தபடியே இருந்த மஹிந்தனின் அருகில் உட்கார்ந்தவளிடம் மாப்பிளைக்கு வேண்டியதை பார்த்து வைத்துக் கொண்டே சாப்பிடு கவி என்று கூறினாள் பார்வதி .

கவிழையா, பார்வதி சொல்வதற்கு  முன் சுவாதீனமாக் அவனுக்கு வேண்டியதை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவள், அதன் பின்  வேண்டுமென்றே அவனுடைய தட்டில் காளியானவற்றை கவனித்தும் கவனியாதது போல் இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.