(Reading time: 18 - 36 minutes)

அந்தகால கட்டிட்ட அமைப்பின்படி மூன்று படிகள் அதை சுற்றியும் வீட்டின் அளவிற்கு மொசைக் கற்களால் சின்ன சிட் அவுட் போன்ற அமைப்பு..படிகளேறி உள்ளே சென்றால் பெரிய வராண்டா அதனை தொடர்ந்து பட்டாளை எனப்படும் ஹால்..அதன் வலது ஓரத்தில் ஒரு அறை அதையடுத்து சின்னதாய் டைனிங் ஹால் அதன் ஓரத்தில் சிறியதாய் அறைவீடு(ஸ்டோர் ரூம்) அதன் மறுபுறம் மற்றொரு படுக்கையறை அதன்பின் அடுக்களை(கிச்சன்) தரை முழுவதும் சிறு சிறு சதுர செங்கல் போன்ற அந்தகால தரை..காலை வைக்கும்போதே குளிர் தலைக்கு ஏறுவதாய் இருந்தது..

ரொம்ப அழகாயிருக்கு சிவா மாமா..என்னதான் இப்போ விதவிதமா டைல்ஸ் போட்டாலும் இந்த சுகமே தனிதான்..

ம்ம் உண்மைதான் ஷரவன்..சின்ன வயசுல அதோட அருமை தெரில இப்போ நினைச்சாகூட அடிக்கடி வர முடில..சரி நீ இந்த ரூம் எடுத்துக்கோ..ஷரவ் நீயும் சஹானாவும் ப்ரெண்ட் ரூம்ல தங்கிக்கோங்க நாங்க மாடில தங்கிக்கிறோம்..

.கே சிவா நாங்க சீக்கிரமா குளிச்சு ரெடி ஆய்ட்டு வந்துடுறோம்..இப்போவே வெளில போலாம்..

ஹலோ மேடம் பாத்ரூம்ல பாதி பக்கெட் தண்ணிய வச்சு பாத்து பாத்து குளிக்க இது ஒண்ணும் உங்க சிட்டி இல்ல குளிக்கவே வெளிலதான் போறோம்..இந்தா மொதல்ல காபிய பிடி சாப்ட்டு ரெப்ரெஷ் ஆய்ட்டு வா போலாம் என்றவாறு சஹானா அனைவருக்கும் மணி கொடுத்த காபியை கொடுத்தாள்..

அடடா என் அருமை தங்கச்சிக்கு இவ்ளோ பொறுப்பா ஓ காட் என்னால நம்பவே முடில..

டேய் எரும போதும் மாமாக்கு போய் ரூம காட்டு போ என்றவாறு கிச்சனுக்குள் நுழைந்தாள்..கார்த்திக் சிவா இருவரும் மாடிக்கு செல்ல தயாராக வராண்டாவில் இருந்தது அதற்கான படிகள்..மாடியிலும் முன்னதாய் பெரிய வராண்டாவும் அதனையடுத்திருந்த ஹாலில் இரண்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன..ஆளுக்கொரு அறையை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாராக அடுத்த பத்தாவது நிமிடம் அனைவரும் தயாராகி வெளியே வந்தனர்..

சிவா காரை எடுக்க போக சஹானா அவனை தடுத்து நடந்தே போலாம் சிவா என்றாள்..மற்றவர்களும் சம்மதிக்க நடக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் சிறியதாய் ஒரு நீர்நிலை வர ஷரவ்,ஹே இவ்ளோ பக்கத்துலயா சூப்பரா தண்ணி போகுதே..

ஏ டீச்சரம்மா இது வாய்க்கால் ஆறு இல்ல இன்னும் நடக்கனும் என்றவாறு சிவா முன் செல்ல சஹானா மெதுவாய் கார்த்திக் அருகில் வந்து என்னாச்சு மாமா வந்ததிலேயிருந்து கவனிக்குறேன் பேசவே மாட்ற என்னாச்சு???

அதெல்லாம் ஒண்ணுமில்ல சஹி ட்ரவல் கொஞ்சம் டயர்டா இருக்கு வேற ஒண்ணுமில்ல..

..சரி சரி தாமிபரணில குளிச்சுட்டு போய் படுத்தா ஒரு தூக்கம் வரும் பாரு உன் அலுப்பெல்லாம் இருந்த இடம் தெரியாம போய்டும் சரியா என்றவாறு மற்றவர்களோடு இணைந்து கொண்டாள்..

ஆனால் உண்மையில் கார்த்திக்கின் அமைதிக்கு காரணமே சஹானாவின் இந்த உற்சாகம்தான்..இங்கு வந்தது முதலே கூடுதல் பிரகாசம் தெரிவதாய் இருந்தது அவள் முகத்தில்..எந்த ப்ரச்சனையும் வராமல் பாத்துக்கோ கடவுளே என ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் ஜெபித்துக் கொண்டிருந்தான்..

சற்றுதூரம் சென்றதுமே நீரின் பேரிரைச்சல் கேட்க ஷரவன்,வாவ் தண்ணியோட சத்தமா இது இதெல்லாம் சினிமால தான் பாத்துருக்கோம்..எக்ஸ்ட்ராடினரி ப்லேஸ் என்றுகூற அனைவருக்குமே அதே எண்ணம்தான்..

ஆற்றின் அருகில் வந்த கார்த்திக்கிற்கு அடுத்த ஆச்சரியம் அவன் கண்ட அதே அமைப்பிலிருந்த ஆற்றங்கரை..பெரிய பெரிய படிகள் அமைந்திருக்க வலது ஓரத்தில் சின்னதாய் ஒரு விநாயகர் கோவில் ஆற்றின் நடுவில் சற்றுதூரம் வரை பாதை அமைத்து அதன் நடுவில் நாக கன்னிகைகள் அமைக்கப்பட்டிருந்தன..

ns

ஷரவ் ஒவ்வொரு காலாய் மாற்றி மாற்றி விட்டவாறு நீரின் குளுமையை சோதித்து கொண்டிருக்க அவள்பின் வந்த சஹானாவோ அதுசரி இப்படி பண்ணி எப்போ குளிக்குறதா உத்தேசம் என்றவாறு தலையிலிருந்த ஹேர்பேண்டை கழள்றியவாறு நீரில் குதித்து வீட்டிருந்தாள்..ஹே சஹி..

கார்த்திக் பயப்படாதீங்க அவளுக்கு நல்லாவே நீச்சல் தெரியும்..-சிவா..

நிம்மதி பெருமூச்சுடன் அவனும் குளிப்பதற்காக இறங்க நேரம் போவதே தெரியாமல் ஆட்டம் போட்டவர்களுக்கு மணி உணவு எடுத்து வந்தபின்தான் நேரத்தை பற்றியே யோசித்தனர்..

என்ன அண்ணா நாங்களே வந்துருப்போமே நீங்க ஏன் வீணா அலையுரீங்க-சஹானா..

தாயீ மணி பத்தாகுது மூணு மணிநேரமா ஆளையே காணும்னுதான் நானே கொண்டு வந்துட்டேன் வாங்க சாப்பிடலாம் எல்லாரும்..

ஹா அதனாலதான் வயிறு லைட்டா சவுண்ட் குடுத்தது போல என்றவாறு ஷரவன் கரைக்கு வர ஒவ்வொருவராய்மேலே வர இறுதியாய் வந்த கார்த்திக்கின் கைப்பற்றி நிறுத்தினாள் சஹானா..மாமா இங்க உக்காரலாம்என்றவாறு நீருக்கடியில் ஒரு பாறையை தேடிபிடித்து அதில் அமர்ந்தாள்..அவனும் அருகில் அமர்ந்து ஆளுக்கொரு தட்டை கையில் வைத்து உண்ண ஆரம்பித்தனர்..

மாமா பிஷ் மசாஜ் கேள்விப்பட்டுருக்கியா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.