(Reading time: 10 - 19 minutes)

இல்லப்பா உங்கள எனக்கு காட்டினதுக்கு நா தான் கடவுளுக்கு நன்றி சொல்லனும்..என்னதான் தன் வாழ்க்கை நானாலும் அதை மட்டுமே நினைக்காம பெத்தவங்களோட மனசையும் காயப்படுத்தாம இருக்க நினைச்சு அதை மறைக்காம என்கிட்டயும் சொல்றீங்க பாருங்க இந்த மனசு எல்லாருக்கும் வந்துராது..என அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

ங்கு கார்த்திக்கோ சஹி போதும் இதோட ஆறாவது ஐஸ்கீரிம்..கோல்ட் வர போது வா போலாம்..நீயெல்லாம் எப்படி லவ் பண்ண..நா பாவம்தான்..

சும்மா சொல்லாத..நா அப்போ பிக் கேள் ஆய்டுவேன்..தெரியுமா இனி நா உன்ன பேர் சொல்லி கூப்பிட போறதில்ல..

அய்யய்யோ இப்படீ அதிரடி முடிவெல்லாம் எடுக்காதம்மா..எல்லாரையும் சமாளிக்கனுமா இல்லயா..சரி சொல்லு எப்படி கூப்பிட போற..

கிண்டல் பண்ணாம கேளு மாமா..

என்னது மாமாவா..என விழுந்து விழுந்து சிரிக்க எதிரிலிருந்தவளோ கையில் தண்ணீர் டம்ளரை எடுத்து வேண்டாம் மாமா கிண்டல் பண்ண மேல கொட்டிருவேன்..

ஐயோ அம்மா தாயே எதுவும் பண்ணிடாத சரி சிரிக்கல..ஆமா இந்த டீ போட்டு கூப்பிட்டதுக்கு ஒரு கதை இருந்த மாறி இதுக்கும் எதாவது வச்சுருப்பியே என்னனு சொல்லு..

ஐயோ எப்படி மாமா..சரி சொல்றேன் கேளு இரண்டு நாள் முன்னாடி ஒரு கனவு அதுல நீயும் நானும் பச்சைபசல்நு வயல்வெளில ஒரு 80'ஸ் ஹீரோ ஹீரோயின் கெட்டப்ல நடந்து போறோம்..அதுல ஹைலைட் என்னனா நீதான் பேசிட்டேயிருக்க நா சமத்தா அமைதியா உன்னோட வரேன்..கார்த்திக்கிற்கு ஏனோ இது அவளின் மாற்றத்திற்கு தொடர்புடையதாய் தோன்றியது..அப்போ தீடீர்நு கால்ல ஏதோ ஊர்ற மாறியிருக்க பயந்துபோய் மாமாநு உன் கையஇருக்கமா பிடிச்சுகிட்டேன்..என்றவைள் அமைதியாக.

என்ன சஹி அப்பறம் என்னாச்சு..தெரிலயே நாதான் முழிச்சுட்டேனே என்றவளை ஆற்றாமையாய் பார்த்தான்..

என்ன மாமா ரியாக்ஷன் இது..நா எவ்ளோ அழகா ஒரு லவ் ஸ்டோரி சொல்றேன் நீ என்னவோ ஹாரர் ஸ்டோரி கேட்ட மாறி ரியாக்ஷன் குடுக்குற..

ஆங் அதெல்லாம் ஒண்ணுமில்ல சஹி எதோ கடிச்சுதுநு சொன்னியா அதான் என்னவோநு பயந்துட்டேன்..

மாமா நல்லவனா இருக்கலாம் ஆனா அந்த நல்லவனே நாதான்ங்கிற ரேஞ்ச்ல இருக்கக்கூடாது..

ம்ம் போதும் போதும் என்ன கிண்டல் பண்ணது..சீக்கிரம் கிளம்பு நாம ஊருக்கு போறதுக்கு டிக்கெட் வேற புக் பண்ணணும்..

மாமா அவங்க எல்லாரும் ப்ளான் பண்ணபடி டூ வீக் கழிச்சு வரட்டும் நாம இந்த வீக்கெண்ட் போலாமா ..

என்ன சஹிம்மா கல்யாணத்துக்கு முன்னாடி தனியா எப்படிடா வீட்ல கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க..

எனக்கு போணும் போல இருக்கே..

ம்ம் சரி வேணா ஒண்ணு பண்ணலாம் நீ நா சிவா ஷரரவ் ஷரவன் மொதல்ல போலாம் பெரியவங்கலா அப்பறம் வரட்டும் என்ன சொல்ற???

வாவ் சூப்பர் மாமா..டபுள் ஓ.கே..

ம்ம் கல்யாணமே ஆகல அதுகுள்ள பேமிலி டூர் போற நிலைமைலல இருக்கேன் என்ன பண்றது என கார்த்திக் போலியாய் அலுத்துக் கொள்ள,

நா உனக்கு பெட்டர் ஆப்ஷன் தான் குடுத்தேன் மாமா நீ தான் யூஸ் பண்ணிக்கல

ம்ம் எதுவும் பண்ண மாட்டேன்ங்குற தைரியம்..வா ஒரு வாரம் என்கூட தான் இருக்கனும் அப்போ பாத்துக்குறேன்..

போ மாமா காமெடி பண்ணிகிட்டு..

யாரு நா காமெடி பண்றேனா பாக்கதான போற..

பாக்கலாம் பாக்கலாம் இப்போ கிளம்பலமாஇல்ல இன்னோரு  ஐஸ்கீர்ம் சொல்லவா??

அய்யோ ஆளவிடு வா வா போலாம் என எழுந்து நடந்த நேரம் எதிரில் வந்தவன் யாருடனோ பேசியவாறே சஹானாவின் மேல் மோதிவிட சாரி சொல்ல திரும்பியவள் முகத்தில் கோபம் வெறுப்பு ஏதோ பார்க்க கூடாதவனை பார்த்த முகபாவத்தோடு விறுவிறுவென வெளியே சென்றுவிட்டாள்..

ஹே சஹி என்னாச்சுஅவர உனக்கு தெரியுமா ஏன் கோபமா வர??

என்ன அவரு சுவருநு இடிச்சுட்டு சாரி கேக்கனும்ங்கிற மேனர்ஸ் கூட இல்ல அவனுக்கென்ன மரியாதை..

ஹே அவன் வேணும்நு இடிச்சமாறிலா தெரில யார்ட்டயோ பேசினதுல. கவனிக்காம இடிச்சுட்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.