"இந்தாங்க ச்சீப்!"-ஒரு கடிதத்தை நீட்டினான் அவன்.
"என்ன இது?"
"பார்வதி மேடமோட ரெசங்நேஷன் லெட்டர்!"
"வாட்?"-திடுக்கிட்டு அதை வாங்கி படித்தான்.அதில் நிரந்தர விடுப்பின் காரணமாய்,எனது பணியை மட்டும் நான் சரியாக செய்யவில்லை என்று எழுதி இருந்தது.
"என்ன மனோ இது?"
"விஷ்வாவோட கனவுகளுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி!"
".............."
"இதுவும் சரிதான் ச்சீப்!ஒருவேளை நீங்க அவங்களை கல்யாணம் பண்ணிருந்தாலும் என்ன பண்ணிருப்பீங்க?அவங்க விஷ்வாவுக்கு மட்டும் அம்மாவா இருந்திருப்பாங்க!மனைவிங்கிற ஸ்தானத்தை நீங்க தந்திருக்க மாட்டீங்க!யாரோ ஒருத்தரா தான் பார்த்து இருந்திருப்பீங்க,உங்களோட பாதியா பார்க்க மாட்டீங்க!அவங்க அப்பாவுக்கும்,பையனுக்கும் நடுவுல வர விரும்பலை!போயிட்டாங்க!"
"எங்கே போறா?"-அவனது கண்கள் மெல்லியதாய்,மிக மெல்லியதாய் கலங்கி இருந்தன.
"அவங்க சொந்த ஊருக்கு போறதா சொன்னாங்க!இந்நேரம் கிளம்பி இருக்கலாம்!"-சாதாரணமாய் அவன் கூற,சற்றும் தாமதிக்காமல் அவளது இல்லம் நோக்கி விரைந்தான் ருத்ரா.
உண்மையில் அவனது மனதினை முழுதாக அவள் ஆக்கிரமித்தாளா??அவளது காதல் வென்றதா?அதுதான் அவனை இவ்வளவு விரைவாக இழுத்து வருகிறதா?மனம் ஏங்கிய ஆறுதலை இனி அவள் தருவாள் என்ற நம்பிக்கை கொண்டானா ருத்ரா??விரைந்து ஓடிய அவனது வாகனம் நிச்சயம் பதில் கூறியது.
தனது இல்லத்தில் தனது உடைமைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் பார்வதி.மனதில் உதித்த முதல் காதல் மரணித்திருக்க,மகனாய் வந்தவனை இனி என்றும் காண இயலாது என்ற எண்ணம் அவள் வேதனையை பல் மடங்கு பெருக்கியது.
கண்கள் சிந்தும் கண்ணீரோடு தான் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் அவள்.
நிலைக்கண்ணாடி வழி தெரிந்த அவள் பிம்பத்தில் அவளது மெல்லிய புஜங்கள் பார்வைக்கு புலப்பட்டன.என்றோ அவன் பற்றிய கரம்!முதல் தீண்டலில் உணர்வுகளை எழுப்பியவன்,இன்று யாவற்றையும் சிதைத்து போனான்.
அவன் பற்றிய புஜத்தினை தீண்டிப் பார்த்தாள் பார்வதி.மனம் வலித்தது!!சிந்திய கண்ணீரை துடித்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானாள்.
அவளது அவசரத்தை தடை செய்தது அழைப்பு மணியின் ஓசை!!
"வாங்க மாமி!கதவு திறந்து தான் இருக்கு!"-உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
"நான் கிளம்புறேன் மாமி!திரும்பி எப்போ வருவேன்னு தெரியலை!காஞ்சிபுரம் பக்கம் வந்தா,வீட்டுக்கு வாங்க!"-பதில் இல்லை.
"உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ண போறேன்!என்னை மறந்துடாதீங்க!"-என்றப்படி திரும்பியவள் சிலையாய் போனாள்.அவ்வளவு நேரம் அங்கு நின்றிருந்தது ருத்ரா!!!
"சா...சார்?நீ..நீங்களா?எ..என்ன விஷயம் சார்?"-குழறின அவளது வார்த்தைகள்!ஆனால்,அவன் தெளிவாக இருந்தான்.அவளை வேகமாக நெருங்கியவன்,அவளை வலுக்கட்டாயமாக பிடித்து தன் அணைப்பினில் சேர்த்தான்.நிகழ்வது யாதென்பது தெளியவே சில நொடிகள் பிடித்தன அவளுக்கு!!
"ஐ லவ் யூ பாரு!"-சட்டென அவன் உரைத்துவிட்ட அந்த வார்த்தைகள்,காண்பது கனவா என்று எண்ணத்தை உதிக்க வைத்தன.அவை நீங்கியவன்,அவளது இரு கன்னங்களையும் தாங்கிப் பிடித்தான்.
"நான் செய்தது எல்லாம் தப்பு தான்!ப்ளீஸ் பாரு...!என்னைவிட்டு போகாதே பாரு!ஐ ஆம் ஸாரி!"-என்று மன்னிப்பை வேண்டினான்.
"ச..சார்??"-கண்ணீர் திரண்டிருந்தது அவள் விழிகளில்!!
"ப்ளீஸ்...!"-மனமுருகி அவன் வேண்டவும்,மனமிறங்கி வந்தவள்,சற்றே எக்கி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
மனம்,மெய்,வாக்குகள் யாவும் பொய்த்துப் போயின அங்கு!!அவளது இடையை இரு கைகளாலும் சுற்றி வளைத்தவனின் கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது.
அவள் உடைத்துவிட்டாள்...அவனது வைராக்கியத்தை சுக்கலாக உடைத்துவிட்டாள் அவள்!!கடந்த காலத்தின் காயங்கள் அனைத்திற்கும் மருந்தாய் நானிருக்கிறேன் என்று அவன் வாழ்வினில் நுழைந்தாள் பார்வதி.
ஏழு மாதங்கள் கழித்து....
"விஷ்வா எழுந்திரு!ஸ்கூலுக்கு டைம் ஆகுது பார்!"-பள்ளிக்கூடம் என்ற வார்த்தையை கேட்டதும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான் அப்பாலகன்.
"என்னங்க!எழுந்திரிங்க!ஆபிஸூக்கு டைம் ஆகுது!"-அடுத்த குழந்தையை எழுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டாள்.அலுவலகம் என்ற வார்த்தையை கேட்டதும் அவனும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டான்.