(Reading time: 6 - 12 minutes)

19. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

ன்று ஷூட்டிங் எதுவும் இல்லாத மகிழ்ச்சியில் பொறுமையாய் காஃபியைப் பருகிக் கொண்டிருந்தாள் அர்ப்பணா. நிரூபணாவை சந்திக்கலாம் என்று இவள் திட்டமிட, அவளோ,

“இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு டீ” என கூறி மறுத்துவிட்டாள்.

என்ன செய்வது? என்று அவள் உதட்டை பிதுக்கிய நேரம் அழைப்பு மணி சத்தம் கேட்டது. யாராக இருக்கும்? என்று சீ சீ டியில்  பார்த்தவள் அங்கிருந்தவர்களைக் கண்ட்தும் ஓடி வந்தாள்.

கண்மணியுடன் அர்ப்பாணாவின் வீட்டிற்கு வந்திருந்தான் சத்யேந்திரன்.

“வாவ்… அண்ணாச்சி!!”  என்று அவள் துள்ளிட,

“ஹாய் தங்க்ச்சி!” என்று அவனும் துள்ளிட, ஆச்சர்யமாய் அவர்களைப் பார்த்த்தாள் கண்மணி.

“ அன்னாசி.. தற்பூசணியா? என்ன நடக்குதூ இங்க ?”என்று தனக்கே உரிய குறும்பான பானியில் கேட்டாள் அவள்.

“ ஹா ஹா.. உள்ள வாங்க கண்மணி.. தெளிவாகவே பேசலாம்” என்று அவளை வரவேற்றாள் அர்ப்பணா.

“ஆமா,கண்மணி எப்பவும் வெற்றியின் நிழல் ஆச்சே! வெற்றி எங்க?”என்று அவள் கேட்க, கண்மணி புன்னகையுடன்

“ஊருக்கு போயிருக்கான்!” என்றாள்!

தேநேரம்!

“சுதர்சனா!” வெற்றி உச்சரித்துவிட்ட அப்பெயர் அந்த பெண்ணை நடுங்கத்தான் செய்தது.சட்டென வேறு புறம் திரும்பிக் கொண்டாள் அவள். இன்னும் அவளுக்கு வெற்றியை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. எனினும் தன் அடையாளத்தினை மறைத்தே ஆகவேண்டிய நிர்பந்தித்தில் அல்லவா வாழ்க்கை அவளைத் தள்ளி விட்டிருந்தது.

உடம்பில் ஒவ்வொரு செல்லிலும் சுரீரென்ற வலி. பஸ்ஸில் அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் தன் மீது மேய்வது போல ஓர் உணர்வு. நிமிர்ந்து வெற்றியை பார்க்கவும் எண்ணமின்றி பஸ்ஸின் அடுத்த நிறுத்ததில் இறங்கி கொண்டாள் அந்த பெண்,.

ஒரே தாவலில் பஸ்ஸில் இருந்து இறங்கி விட்டிருந்தான் வெற்றி, அவன் மனம் ஆயிரம் குதிரைகளின் வேகத்தை இரவல் வாங்கியது போலவே ஓடியது. “காப்பாத்த முடியல..அந்த பொண்ணோட சவத்தை கூட பார்க்க முடியாத அளவு சிதைச்சுடாங்கப்பா!” இதுதான் சுதர்சனாவைப் பற்றி வெற்றி அறிந்த கடைசி செய்தி.

சில நாட்களுக்கு தொலைக்காட்சி நாளிதழென அனைத்திலும் சுதர்சனாவின் மரண அஞ்சலியை பற்றிய செய்திகள். ஒரே காலேஜில் படித்தும் அவள் வெற்றிக்கு அத்தனை பரிட்சயமில்லை.

தனக்கென சில நண்பர்கள், விஹாஷினியுடன் காதல், இயக்குனராகும் கனவு என சிறு உலகத்தில் பயணித்த அவனுக்கு அதே காலேஜில் வேறோரு பிரிவில் படித்து வந்த சுதர்சனாவைப் பற்றி அதிகம் தெரிந்ததில்லை.

படிப்பில் சுட்டி,திறமையில் கெட்டி என்பதையும் தாண்டி மிகவும் துணிச்சலான பெண்ணாக இருந்தாள் அவள். யாருக்கும் அடங்கி போய்விடும் எண்ணம் இருந்த்தில்லைஅவளுக்கு!

அதுவும் படிப்பின் மீது கொஞ்சமும் நாட்டமின்றி இலக்கின்றி கல்லூரிக்கு வந்துவிட்டு சக மாணவிகளை துன்புறுத்தும் மாணவர்களின் மீது புகார் தருவதும் அவர்களை எதிர்ப்பதும் அவளுக்கு என்றுமே பயத்தை தந்த்தில்லை. இதே தைரியம் தானே அவளின் வாழ்வையே திருப்பி போட்ட்து?

அவளுக்கு நிகழ்ந்த வற்றை கடந்த காலமான பின்புதான் அறிந்திருந்தான் வெற்றி. பத்தோடு பதினொன்றாய் அவளின் ஆத்ம சாந்திக்காக அவனும் வேண்டிக் கொண்டான். கல்லூரி மட்டுமின்றி அவளுக்கு நடந்த அக்கொடுமை மற்ற மாநில மாணவர்களையும் உலுக்கி போட்ட்து என்பதினால் மீடியாக்களில் அவள் புகைப்படம் எந்நேரமும் காட்டபட்டு இருந்தது. அப்படி அவளை தங்கள் ஆழ்மனதில் பதித்து வைத்தவர்களில் வெற்றியும் ஒருவன். கிட்ட்த்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பின் காண்கிறான் அவளை.

“சுதர்சனா.. சுதர்சனா ..”என்று அவன் ஓயாமல் உரக்க அழைக்க அவளின் நடையின் வேகம் கூடியது. அவளை தடுக்க நினைத்து பின் தொடர்ந்தவன், தான் நிற்கும் இட்த்தை கொஞ்ச நேரம் கழித்து தான் கவனித்தான். விலைமாதர்களுக்கென ஒதுக்க பட்ட குடியிருப்பு பகுதிபோல இருந்த்து அவ்விடம்.

“இங்கு இவளுக்கு என்ன வேலை? கடவுளே !” என்று ஏதோ ஒன்று வெற்றியின் மனதை பிசைய, சுதர்சனாவோ தன் வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டாள்.

“சுதர்சனா.. ப்ளீஸ் கதவை திற ..உன்கிட்ட பேசனும்  சுதர்சனா” என்று அவன் சத்தமிடவும் ஒரு அளவிற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனை தன் வீட்டிற்குள் இழுத்து கதவை பூட்டிக் கொண்டாள் அவள்.

“யாரு நீ?” உமிழும் கோபத்துடன் அவனைப் பார்த்து கேட்டாள் அவள்.

“சுதர்சனா… நீ ? நீ இன்னும் உயிரோட இருக்கீயா? “ என்று வெற்றி தயக்கமாய் ஆச்சர்யமாய் கேட்க, மீண்டும் அவள் கண்களின் கோபத்தில் பிரதிபலிப்பு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.