(Reading time: 6 - 12 minutes)

“அதான் கொன்னாச்சே என்னை எப்பவோ! நான் செத்து ஏழு வருஷம் ஆகுது.. என் பெண்மை,என்  தோற்றம்,என்னை பெத்தவங்க, எல்லாமே போச்சு! எல்லாம் முடிஞ்சதுனு ஓடி வந்துட்டேன்.. இன்னமும் உங்க பசி அடங்கலையா? செத்தே ஆகனுமா நானு?” என்றாள் அவள் கோபமாய்.

அவள் சொன்னது அனைத்தும் அவளுக்கே வலித்திருக்குமோ இல்லையோ, ஆனால் வெற்றியை நிச்சயம் கொன்றே போனது அது! எவ்வளவோ தடுத்தும் இயலாமல் இருவரின் நினைவலைகளும் பின்னோக்கி பாய்ந்தன.

ழு வருடங்களுக்குமுன்!

கல்லூரியின் கடைசியாண்டு மாணவன் வெற்றி! சுதர்சனா என்றொரு பெண் இருப்பதையே அறியாதவன் அவன். இன்னொரு பக்கம் சுதர்சனா தன் டிபார்ட்மண்ட் பெண்களுக்கு “ஹீரோவா”க தெரிந்தாள். அதற்கு காரணம் அவளுடன் படித்து வந்த அரசியல்வாதியின் மகன் ஒருவன்!

மது, மாது, புகைபிடித்தல் என அவனுக்கு இல்லாத பழக்கங்களே இல்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதை மனதில் நிறுத்தி முடிந்த அளவு அவனது நேர்பாவையில் பட்டுவிடாமல் இருக்கத்தான் விரும்புவர் அனைவரும்.

அப்படிபட்டவனின் முன் சுதர்சனாவை சண்டைகோழியாக மாற்றி நிற்க வைத்து சிரித்த்துவிதி. தன்னோடு இருக்கும் தோழிகளுக்கு அவனால் தொல்லைகள் அதிகரிக்க அவனை முகத்திற்கு நேராகவே எச்சரித்து விட்டு போனாள் சுதர்சனா.

அவளின் தைரியமும் கோபமும் அவனை கொடூரமாய் சிந்திக்க வைத்த்து! விளைவு அவளின் வாழ்வையே புரட்டி போட்டது. கோழைகளின் தாக்குதல்கள் எப்போதும் நேரடியாய் இருப்பதில்லை!

அவனும் அப்படித்தான். யாரென்றே அறியாத கூலிப்படைகளின் உதவியினால், அவளை தாக்கினான். ஒருத்தியின் பெண்மையை பறிக்கவும் குழைக்கவும் ஆறு கோழைகள் ஆண் என்ற திமிரில்!

ஒரே வார்த்தையில் “கற்பழிக்கப்பட்டுவிட்டாள்” என்று சொல்லி முடிக்க முடியாத அளவிற்கு அவளின் தேகத்தினை துன்புறுத்தி பூவானவளை தீயில் கருகவிட்டனர். அவளுக்கு நடந்த கொடுமை மீடியாக்கள் மூலமாக அனைவரையும் அடைந்தது. ஆனால் அம்பை எய்தவனை யாரும் வினவவில்லை!

இரவில் வெளியில் சென்றளாம்!அதனால் கற்பழிக்கப்பட்டாளாம்!

அவள் நிலை என்ன என்னவென்று பரபரப்பாய் செய்திகள் வெளியிட்டவர், இறுதியில் அவள் மாண்டே விட்ட்தாகத்தான் சொல்லினர்!

ஆனால் இன்றோ அவள் அவனின் கண் முன்னே! (அடுத்து என்ன்னு அடுத்தவாரம் சொல்றேன்!)

தே நாள்!

பிரபல பத்திரிக்கைகளின், தொலைக்காட்சிகளின் பிரதிநிதிகள் குழுமியிருந்தனர் ஓர் அறையில். எதற்கு இந்த திடீர் சந்திப்பின் அழைப்பு? என்று ஒவ்வொருவராய் சலசலக்க, இருள் சூழ்ந்த அவ்வறையில் ஒரு காணொலி ஒளிபரப்பானது!

“உலக தற்கொலை ஒழிப்பு மையம்!” என்ற தலைப்பு அக்காணொலியில் தெரிந்திட, அதனைத் தொடர்ந்து தன் கணீர் குரலில் அனைவரின் முன்னிலையிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் நிரூபணா.

தன்னவளின் உயிர்த்தோழியின் உண்மை முகம் பல பொய் முகங்களின் திரையை கிழித்து எறிவதை தூரத்தில் நின்றபடி கைகட்டி நின்று ரசித்தான் ராகவேந்திரன்!

-வீணை இசைந்திடும்-

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.