(Reading time: 8 - 16 minutes)

20. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

ர்ப்பணாவின் வீடு!

திடீரென்று வந்து நின்ற சத்யேந்திரனையும் கண்மணியையும் நன்றாக உபசரித்து கொண்டிருந்தாள் அர்ப்பணா. உதவி இயக்குனரான வெற்றி்யின் தோழி என்ற முறையில் கண்மணியுடன் பழகியிருக்கிறாள் அவள். எப்போதும் நிமிர்வாய் இருக்கும் கண்மணிக்கு காதல் நளினத்தையும் அள்ளி தந்துள்ளது போலும்! அதை கண்கூடாக ரசித்தாள் அர்ப்பணா.

" ஹலோ மேடம், என்ன லுக்கு ஜாஸ்தியா இருக்கு.. சைட் அடிக்கிற உரிமை எல்லாம் எனக்கே எனக்கு!" என்று சத்யன் மிரட்டிட

" வாய் தான் உங்களை வாழ வைக்கிறது" என்று அலட்சியமாக சொன்னாள் கண்மணி.

"அடியே, என்ன நான் உன்னை சைட் அடிக்கலன்னு சொல்லுறியா?"

"ம்ம்ஹ்ம்ம்... அடிச்சா நல்லா இருக்கும் னு சொல்லுறேன்" என கண்மணி சொல்லவும் இருவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

"சரி, அதென்ன அண்ணாச்சி தங்கச்சி னு ரெண்டு பேரும் சீன் போடுறிங்க.. என்னதான் நடக்குது இங்க? உங்களை கலாய்க்க ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர் கூட்டம் எங்களை இப்படி ஏமாத்தலாமா? " . கண்மணியின் குரலில் கிண்டல் தொனி அப்பட்டமாக தெரிந்தாலும் அர்ப்பணா கொஞ்சம் மிரட்சியாய் சத்யேந்திரனை பார்த்தாள். என்னதான் கண்மணி எதையும் இயல்பாக எடுத்து கொள்ளும் பெண் என்றாலும் காதலில் தோன்றும் அடிப்படை பொறாமை அவளுக்குள் எழவில்லையா ? என ஆச்சரியமாக பாரத்தாள்.

அர்ப்பணாவின் பார்வையை புரிந்து கொண்டான் சத்யேந்திரன்.

"கண்மணி அப்படி தான் அர்ப்பணா.. எதையும் டேக் இட் ஈசி தான்.. அதனாலத்தானே தவமாய் தவமிருந்து மனசுல இடம் பிடிச்சிருக்கேன்" என்றான். கண்மணி அவனை பார்த்து செல்லமாய் முறைக்கவும் அவள் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் உரைத்தான்.

" நானும் அர்ப்பணாவும் சேர்ந்து நடிச்ச முதல் படம் ஞாபகம் இருக்கா கண்ணம்மா?"

"யெஸ்..அந்த பேய் படம் தானே?"

"ஆமா.. எனக்கு அது முதல் படம்.. அந்த டைரக்டர் ஒரு எதார்த்த வாதி ஜாக்கிரதையாக இருங்க னு எல்லாம் சொன்னாங்க.."

"ஆஹான்...அப்பறம்?" கன்னத்தில் கை வைத்து கொண்டு அவள் கேட்க அர்ப்பணாவும் பேச்சிஇணைந்தாள்.

"அப்பறம் என்ன  ? பயம் என்பதும் எதார்த்தமாத்தான் இருக்கனும்னு அங்கங்க கேமராவை மறைச்சு வெச்சுட்டு இருட்டுல நடக்க விட்டுட்டாரு.. "

"வாவ்...சூப்பர்.. இது சூப்பரா கண்மணி உனக்கு?"

"ஹம்கும்..இருட்டு,பேய் இதுக்கெல்லாம் ஏன் பயப்படனும்.. பேயை விட மனுஷங்களை பார்த்து தான் ரொம்ப பயப்படனும்..!"

"ஹேய் அப்பப்போ தத்துவம் பேசி வாயடைக்க வைக்கிற" என்றபடி குலாப் ஜாமுனை வாயில் போட்டு கொண்டான் சத்யன்.

" நான் எங்க அடைச்சேன், ஸ்வீட் தான் அடைக்கிது..சரி அப்புறம் என்னாச்சு?"

" இருட்டுல எதையோ பார்த்து அலறிட்டே கீழ விழப்போனவளை நான் தாங்கி பிடிக்கவும், ஷாட் ஓகே னு சத்தம் கேட்டது..பாவம் அர்ப்பணா...அண்ணா..அண்ணா பயந்துட்டேன்னு நடுங்கியபடி சொன்னா.."

".."

"அந்த செகண்ட் எனக்கொரு தங்கச்சி இருந்தாலும் இப்படி தான் இருப்பாளோனு நினைச்சேன்..என்னை அவ அண்ணானு கூப்பிட்டதை ரசிச்சேன்.. அப்படி தான் எங்கள் பாசம் தொடங்கியது!" . புன்னகையுடன் சத்யேந்திரன் சொல்லவும் அர்ப்பணாவும் அன்றைய நாளை எண்ணி புன்னகைத்தாள்.

" ஆனாலும் மனசுல சகோர பாசத்தை வெச்சுக்கிட்டு கேமரா முன்னாடி காதல் ஜோடியாக நடிக்கிறது கஷ்டம் ல?" தீவிரமான குரலில் கேட்டாள் கண்மணி.

" ஒரு நடிகருக்கு எதுதான் கஷ்டம் இல்லை?

மனசுல சந்தோசம் மட்டுமே இருக்கும் போது சோகமா நடிக்க சொல்லுவாங்க..

ஜீவனே இல்லாத நாளில் குத்தாட்டம் ஆட சொல்வாங்க..

பிடிச்ச பெர்சனாலிட்டி பெண்ணாக இருந்தால் அவங்க கிட்ட நட்பு பாராட்ட முடியாது..

சில நேரங்களில் பிடிக்காத பிரபலங்கள் முன்னாடி பல்லை காட்டனும்..

அத்தனை கேமராக்கள் முன்னாடி காதலை உணர்ந்து பேசனும்.."

"..."

இதில் இரசிகர்கள் இன்னொரு பக்கம்.

" சிம்பல் ஸ்கிரிப்ட் எடுத்து நடிச்சா, வாய்ப்புகளை அலட்சியப்படுத்தி பார்க்கிறோம் னு சொல்லுவாங்க..

ஹீரோயிசமா நடிச்சா, எல்லாம் கப்சா னு சொல்லுவாங்க..

புது முயற்சி எடுத்தா மொக்கை னு சொல்லுவாங்க..இல்லன்னா இங்கிலீஷ் படத்துல இருந்து சுட்டோம்னு சொல்லுவாங்க.. "

"..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.