(Reading time: 8 - 16 minutes)

“ஆஹான்.. ஏன் அப்படியாம்?” தெரிந்தும் தெரியாதவன் போல வெற்றி கேட்கவும், அவனது இயல்பான குரலை மனதில் குறித்துக் கொண்டாள் சுதர்சனா.

“ஆமா பின்ன? எப்பவுமே மனுஷங்களுக்கு நல்லது மறந்துடும்.. கெட்ட்து தானே மனசுலேயே நிக்கும்? எப்பவுமே நல்லதே பண்ணிட்டு, ஒரு தடவை தப்பு பண்ணி பாரேன்! அதையே பிடிச்சுப்பாங்க!”

“..”

“அதேதான் படத்தோட க்ளைமாக்ஸ் உம். கதை சந்தோஷமா முடிஞ்சா அந்த சந்தோஷம் நம்மளயும் தொத்திக்கும்.. ஆனா அடுத்த நல்ல படத்தை பார்த்ததும் இந்த படத்தை மறந்திடுவோம். ஆனா சோகமான படம் அப்படி இல்லையே! ஏன் இப்படி ஆனிச்சு? ஏன் அவங்க சேரல? இவன் ஏன் செத்தான்? இப்படி என்னமோ சொந்த வாழ்க்கையில ஏதோ தப்பா நடந்த மாதிரி ரியக்ட் பண்ண வைப்பாங்க.. அஞ்சு வருஷம் கழிச்சு  அந்த பட்த்தை பத்தி பேசினாலும்,ச்ச அந்த க்ளைமாக்ஸை மறக்கவே முடியலன்னு சொல்லுற அளவுக்கு சோகத்தை பிழிவாங்க!” என்று புன்னகைக்க ஆரம்பித்துவிட்டான் வெற்றி.

இதுதான் ரசிகனின் பார்வையின் பலம்!ஒரு ரசிகனால் எப்போது சரி தவறு என இரு பக்கத்தையும் பார்க்க முடியும்!மாறாக கலைஞனோ தன்னை யாரும் கைகாட்டிவிட கூடாதே என்பதற்காகவே எல்லா தவறுகளையும் என்னுடையதில்லை! என்று ஒதுக்கிவிடுவார்கள். அல்லது பாரபட்சமான பார்வையில் விமர்சிப்பார்கள்.

“ இதில் நீ எந்த ரகம் ?"

"என் படம் நிதர்சனமான உண்மையை சொல்லனும்.. சராசரி வாழ்க்கையை பிரதிபலிக்கனும்.. உண்மையாக இருக்கனும்.."என்றான் கனவுகள் நிறைந்த குரலில். அதை கேட்டு கேலியாக சிரித்தாள் சுதர்சனா.

" உண்மைக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?" நக்கலாக அவள் கேட்கவும் வெற்றி்யின் முகம் இறுக தொடங்கியது. அடுத்த வாரம் வெடிக்கட்டும் பட்டாசு ;)

-வீணை இசைந்திடும்-

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.