(Reading time: 7 - 14 minutes)

21. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

தொழில் பக்தி எனில் என்ன ? அதன் முழு அர்த்தத்தை அறிந்துள்ளோமா நாம்? பக்தி எனப்படுவது அர்ப்பணிப்பு. எதிர்ப்பார்ப்பு இல்லாத செயல். வரம் கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் குறையாமலே இருக்கும் உந்து சக்தி தான் பக்தி. இன்று நம்மில் எத்தனை பேர் தொழில் பக்தி கொண்டுள்ளோம்? அல்லது மாறாக நிர்பந்தத்தினால் வேலையை பிடித்தமாக்கி கொள்கிறோமா?

என்னை கேட்டால் நிர்பந்தத்தினால் தான் என்பேன். பிடித்த துறையில் லாபமின்றி குடும்ப சுமையை மனதில் கொண்டு கனவினை விட்டவர் பலர். மிக சிலருக்கே எது நடப்பினும் தனது இலக்கை அடைந்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கும். அவர்களில் ஒருவனாக இருக்கும் வெற்றிக்கு சுதர்சனாவின் பேச்சு கோபத்தை மூட்டியது.

"அப்படி என்ன சினிமாவில் பொய்யை கண்டுட்ட நீ?" கிட்டத்தட்ட உருமினான் என்றே சொல்லலாம். சுதர்சனாவோ கொஞ்சமும் அசராமல் பதில் கொடுக்க தொடங்கினாள்.

"எல்லாமே பொய்தான்!ரசிகனின் ஆர்வத்தை தூண்டி பார்த்து மிளிருவதுதான் சினிமா. ரொம்ப இயல்பாக நடக்குற விஷயத்தை கூட பாட்டு வசனம் பின்னணி இசைனு எல்லாத்தையும் சேர்த்து கலப்படமாக்கி கலர் படம் ஆக்குறீங்க!".

" உலக ஜீவராசிகளிலேயே பெண் தான் மிக அழகு!

அவளின் சிந்தனை அழகு!

சிக்கனம் அழகு!

நளினம் அழகு நடை அழகு!

விழி நீர் அழகு வீரமழகு!

மென்மை அழகு தன்மை அழகு!

சீற்றம் அழகு சலனமும் அழகு!

திறமை அழகு திமிரும் அழகு!

அடக்கம் அழகு அடையாளம் அழகு!

பிதற்றல் அழகு பிணைப்பும் அழகு !

பவ்யம் அழகு பொறாமையும் அழகு!

மௌனம் அழகு வாதமும் அழகு!

அவளின் தோல்வியும் அழகு வெற்றியோ பேரழகு!

பெண்ணிடம் ரசிக்க கோடி அழகு கொட்டி கிடந்தும் மனசுக்கு பிடித்தவனை அல்லது பெண் பார்க்க வந்தவனை வரவேற்க ஒப்பனையும் அலங்காரமும் அணிகிறீங்களே இது கலப்படமா இல்ல பொய்யா?" .

அவனது கேள்விக்கு கைத்தட்ட எழுந்த ஆவலை அடக்கி கொண்டு பதில் சொன்னாள் சுதர்சனா.

" இது கலப்படம் இல்ல வெற்றி. காதல் ! எனக்கு மிகவும் நெருக்கமானவரின் கண்ணுக்கு என்னை இன்னும் அழகா காட்டிக்கனும்னு ஓர் ஆசை!"

"அட என்னம்மா நீ, அந்த காதல் எங்களுக்குள் இருக்க கூடாதா? கலைஞனுக்கு அங்கீகாரம் மீது தான் காதல்! கைத்தட்டல் காகவே உயிர் நீத்த கலைஞர்கள் எங்ககிட்ட இருக்காங்க. . உங்களை நீங்க மெருகேற்றி காட்டுறது மாதிரி தான், எங்க கதையை நாங்க மெருகேற்றி காட்டுறோம் தப்பா?"

"தப்பில்லை தான் ! ஆனால் அதை நேர்மையாக காட்டுங்களேன். உதாரணத்திற்கு கேட்குறேன். ட்ரேலர்ன்னா (trailer) என்ன? மூன்று மணி நேர படத்தின் கதை சுருக்கத்தை மூன்று நிமிஷத்தில் காட்டி இது தான் எங்க படம்னு சொல்லுறது.."

".."

"ஆனா இப்போ அப்படியா இருக்கு? பேய் கதையா, சைக்கோ கில்லரா, ஜஸ்ட் லவ்வா? இப்படி என்னனு சொல்லாமலே மக்களை குழப்பி படம் பார்க்க  வைக்குறீங்க!" என்று சுதர்சனா சொல்லவும் அலட்சியமாக சிரித்தான் வெற்றி.

" நீ சொன்ன இந்த அப்பாவி ரசிகர்களில் எத்தனை பேர் எல்லா படத்தையும் திரையரங்கில் மட்டும் பார்க்கிறாங்கன்னு சொல்லு!"

"கம் ஆன் வெற்றி, ஒரு சராசரி மனிதனுக்கு சினிமா பொழுதுபோக்கு அம்சம். அவ்வளவு தான்! எல்லா படத்தையும் திரையரங்கில் பாரக்கனும்னு அவனுக்கு கடமை கிடையாது !" .

"ஆனா,  நடிகர்களை விமிர்சிக்கிறது மட்டும் மாபெரும் கடமை அப்படி தானே ? ஆறு மாசமோ மூனு வருஷமோ நாங்க கஷ்டப்பட்டு உருவாக்குற படத்தை ,

இது மொக்கை டா!

அதே கதை டா!

இது இங்கிலீஷ் படத்துல இருந்து சுட்டது!

இது ஹிந்தி ரீமேக் !

இது இன்னொரு ப்ளாப்!

இந்த படம் பார்க்குற காசை யாருக்காவது சும்மா கொடுக்கலாம்னு

நொடி பொழுதில் உடைச்சு போட்டுருவிங்க. !".

" .."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.