அவன் தன்னுடன் வராததை உணராத கவி தனது தாத்தா கால்களில் விழ போக அவளை தடுத்த அவளது அத்தை மஞ்சு "கல்யாணம் பண்ணிட்டு முதன் முதலா ஆசீர்வாதம் வாங்க போற உன்னோட வாழ்க்கை துணையுடன் தான் வாங்கணும்..."என்று அவர் சொல்ல அவனை பார்த்தாள் கவி.
அவனோ தனக்கும் அங்கு நடக்கும் நிகழ்வுக்கும் சம்மந்தம்
இல்லாததுப் போல் நின்றுக் கொண்டிருக்க..., அவளுக்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை....
தனது அத்தையை கட்டிக்கொண்டு அழ தான் அவளால் இப்பொழுது முடியும் ஆனால் அதை அவள் இப்பொழுது செய்தாள் ஏற்கனவே கலங்கி நிற்கும் அவர்கள் இன்னும் கலங்குவர்கள் என்று நினைத்த அவள் தனது சோகத்தை தனக்குள்ளேயே மறைத்துக் கொள்ள நினைத்தாள்.
அனைத்து சடங்குகளும் முடிந்து விட அவள் கிளம்பும் நேரமும் வந்தது ...கவியால் தனது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை... ஆனால் அவள் அழுகையை மறக்க வைக்கும் அளவு அவளது கணவன் செய்த செயல் இருந்தது.
அவளது அருகில் வந்தவன் ஒரு புதிய பையை தந்தான்.
"இதுல இருக்குற புடவைய கட்டிட்டு...,நகையை போட்டுக்கோ..,உன்னோட கழுத்துல இருக்குற எல்லாத்தையும் அவங்க கிட்டையே கொடுத்துட்டு வந்துடு...,அப்பறம் உனக்கு முக்கியமானது எதாவது இருந்தா அதையும் எடுத்துக்கிட்டு வந்துடு...,அப்பறம் அதை மறந்துவிட்டேன் இதை மறந்துட்டேன்னு சொன்னேன்னு சொன்ன ...?அவன் எதுவும் அதற்கு மேல் சொல்லவில்லை ஆனால் அதில் மறைமுகமாக அவன் கவிக்கும் அவளதுக் குடும்பத்திற்கும் செய்திக் கூறியிருந்தான்.இனி அவளுக்கு அவர்களுடன் எந்த உறவும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறான் என்று அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்தது.
அவள் அருகில் வந்த அவளது மஞ்சு அத்தை அவளது கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு சென்றவர் அவன் தந்த புடவை,நகையை அவளுக்கு அணிவித்து அவளை அழைத்து வந்தார்.
அவள் வெளியில் வந்ததும் அவளது அருகில் வந்த காவ்யா தன்னால் தான் இன்று கவிக்கு இந்த நிலைமை என்று அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.
அவளது அருகில் வந்த விஷ்வா அவர்கள் இருவரையும் தன்னோடு அனைத்துக் கொண்டான்.
அவனது கண்களிலும் கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.தனது தங்கையின் பேச்சை கேட்டிருக்கக் கூடாது என்று காலம் கடந்து யோசித்தான் விஷ்வா.
அவர்களது அருகில் ஒரு பெண் வந்தாள்.கவியை பார்த்த அவள்,” வீட்டுக்கு கிளம்ப நேரம் ஆகிடுச்சாம் அதனால உங்களை பாட்டி கூட்டிகிட்டு வரசொன்னாங்க...” என்று அந்த பெண் கூற,கவி தனது குடும்பத்தினரிடம் விடை பெற தயாரானாள்.
தான் தாத்தா,மாமா,அத்தை என தனது குடும்பத்தினர் அனைவரிடமும் விடைபெற்று தனது கணவனது குடும்பத்தினர் இருந்த திசை நோக்கி சென்றாள்.
அஸ்வின் குடும்பத்தினர் அனைவரும் தயாரக காரில் அமர்ந்திருந்தனர்.காரின் அருகில் சென்றவள் ஒரு முறை தனது குடும்பத்தை திரும்பி பார்த்தவள் காரில் ஏறி அமர்ந்தாள்.
அவள் ஏறி அமர்ந்ததும் கார் சீறி பாய்ந்தது.தனது கண்ணில் இருந்து அவர்கள் மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டு வந்தாள் கவி.அதுவரை அவள் மறைத்து வைத்திருந்த கண்ணீர் இப்பொழுது அவளது உறுதியை எல்லாம் உடைத்துக் கொண்டு வெளியில் எட்டிப் பார்த்தது.
“இப்ப எதுக்கு அழுது வேஷம் போடுற..,உங்க குடும்பத்துக்கு இதுயெல்லாம் புதுசா.., ஏற்கனவே நடந்தது தானா..”என்று அஸ்வின் அவளிடம் கடுமையாக பேச,அவன் சொல்வது புரியாமல் அவனையே மிரள பார்த்தாள் கவி.
“டேய் மாப்பிள்ளை எதுக்குடா இப்படி தங்கச்சிட்ட கத்தி பேசுற என்று டிரைவர் சீட்டில் இருந்தவன் குரல்க் கொடுக்க..,
குரல் வந்த திசையை நோக்கி பார்த்தாள்.அவள் தன்னை பார்ப்பதை கண்ணாடி வழியே பார்த்தவன்,வண்டியை ஓரமாக நிறுத்தியவன்,அவள் புறம் திரும்பி,”ஹாய்மா..,என்னோட பேரு சதீஷ்.உன் புருஷனோட அத்தை பையன்,உனக்கு அண்ணன் ஓகே வா..”என்று கூறிவிட்டு தனது வேலையை அவன் தொடர்ந்தான்.
அவன் பேசிய விதம் கவிக்கு பிடித்திருந்தது.அவனை பார்த்ததும் தன்னை மதிக்கும் அளவுக்கு ஒரு சொந்தம் அங்கு உள்ளது என்று அவள் நினைத்தாள்.
ஆனால் அவளுக்கு அந்த குடும்பத்தை நினைத்தாலே பயமாக தான் இருந்தது.அதுவும் அவளது குடும்பத்திருக்கும் அவனது குடும்பத்திருக்கும் பிரச்சனை எதுவோ உள்ளது என்பதே அவளது மனதை பிசைந்தது.ஆனால் வரும் பிரச்சனையை அவள் எதிர்க் கொண்டுதான் ஆக வேண்டும் என்று நினைத்தவளால் ஒரு பெருமூச்சு தான் விட முடிந்தது.
அதைப் பார்த்தவன்,”என்ன இவன எதுக்கு கல்யாணம் பண்ணணு நினைக்கிறியா..,எல்லாம் என்ன பண்றது எல்லாம் என் தலையெழுத்து..”என்றுக் கூறியவன் மேலே எதுவும் பேசு முன்பு அவனை இடையிட்ட சதீஷ் “பேசாம வாடா..,பாவம்டா என்னோட தங்கச்சி..”என்றுக் கூற அதற்கு மேல் எதுவும் அவளை கூறாமல் வந்தான் அஸ்வின்.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Kavi eppadi intha kudumbathai samalikka pora
Ashwin avalai tidduvatu romba over
Very nice epi
Marubadi elaa epis poi padichu mudichen Anitha....now I can relate many things....nice flow..........Kavi appa fb eppo varum?
waiting to rd more