(Reading time: 7 - 14 minutes)

"படம்னா அதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருப்பாங்க னு நினைக்கிறீங்க ? ஹீரோ, ஹீரோயின், இன்னும் கொஞ்சம் ஆர்ட்டிஸ்ட், டைரக்டர், மியூசிக் டைரக்டர், கேமரா மேன்... அவ்வளவு தான் ல??"

".."

"ஆனா அதில்லை.  உங்க கண்ணுக்கு தெரியுறது சமுத்திரம் மட்டும் தான். ஆறு, நதி , குட்டை, ஓடைனு அதோடு சங்கமிக்கிறதை பிரிச்சு பார்க்குறதில்லை நீங்க. ப்ரொடூசர் போட்ட பணத்தை பார்க்கலன்னாலும் ஹீரோவுக்கு சம்பளம் உண்டு! ஆனா டெக்னிஷனுக்கு கிடைக்குமா? அது கேள்விக்குறி தான்! நானே எத்தனை படத்துக்கு சம்பளம் வாங்காம அசிஸ்டன்ட் டைரக்டர் வேலை பார்த்திருக்கேன் தெரியமா?"

".."

"ஒரு பக்கம் அதிரடி விமர்சனங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரி ட்ரேலர் பார்த்தே படம் மொக்கனு சொல்லிடுறாங்க. அதை சமாளிக்க முடியாமல் தான், ரசிகர்கள் கதையை உடனே யூகிக்க முடியாத மாதிரி கட்ஸ் வைச்சு எடிட் பண்ணுறோம்.

இன்னொரு பக்கம் திருட்டு தனமா படத்தை வெளியிடுறது. திருட்டு சீடி கூட ரெண்டாம் பட்சம். இணையம் அதையே தூக்கி சாப்டுருச்சு. படம் வெளிவந்து ஒரு மணி நேரம் ஆகுறதுக்குள்ள வலைத்தளத்துல போட்டு விடுறாங்க...

நான் கஷ்டப்பட்டு எடுத்த படம் இலவசமா மக்களுக்கு போச்சு.. இருந்தாலும் பரவாயில்லை..சம்பளத்தை பிடிங்கன்னு ஒரு லைட் மேன் கிட்ட, டான்ஸ் மாஸ்டர் அசிஸ்டன்ட் கிட்ட சொல்லி பணம் கொடுக்குற நல்ல மனசுக்காரவங்களை விரல் விட்டு எண்ணிடலாம் மா" வலி நிறைந்த குரலில் சொன்னான் வெற்றி.

" ம்ம் புரியுது வெற்றி. ஆனா இன்னொரு உண்மையையும் நீங்க மறுக்க முடியாது. என்னதான் இணையத்தில் படத்தை பார்த்தாலும் அது தரமான படம் னு தெரிஞ்சதுமே அதை திரையரங்குக்கு போயி சப்போர்ட் பண்ணுறவங்க இருக்காங்க. .. இப்போ இருக்குற விலைவாசி உங்களுக்கும் தெரியும். "

".."

"படம் பார்க்க போறோம்னா அதுல டிக்கெட் செலவு மட்டும் தான் இருக்கா? பெட்ரோல்? சாப்பாடு? கார் பார்க்கிங்? இன்னும் எவ்வளவோ இருக்கு.. அப்படி இருந்தும் அட நமக்கு புடிச்ச ஹீரோ நடிக்கிறாரே னு ஆர்வமா போனால், அவர் அரைச்ச மாவையே அரைத்து வச்சிருப்பார்.. கோபம் வராதா? ஜயோ பணம் போச்சேன்னு தோணாதா?

நமக்கு புடிச்ச ஹீரோ னு ஏமாறுவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ப்ரமோஷனுக்காக நீங்க பண்ணுற விளம்பரம். புதுமையான திரைக்கதை, தமிழ் சினிமாவின் அடுத்த க்ரீம்

கட்டம் இது, இதுவரை நீங்க பார்க்காத விதத்தில் நம்ம ஹீரோ இருப்பார் இப்படி சின்னஞ்சிறு மாற்றத்துக்கே பெரிய பில்ட் அப் தருவீங்க. நாங்களும் ஆஹா அடடானு காத்திருந்து, ஏமாந்து போறோம். அந்த கோபம் தான் எங்களுக்குள் அலட்சியத்தை உருவாக்குது" என்றாள் சுதர்சனா. இருவருமே ஒருவரின் கருத்தினை இன்னொருவர் ஏற்கும் தொனியில் தத்தம் கருத்தினை முன்வைத்தனர். நேரம் போவதே உணராமல் சுதர்சனாவுடன் உரையாடிவிட்டு நிறைந்த மனதுடன் நிறைய சிந்தனைகளுடனும் கிளம்பினான் வெற்றி. அந்த நாள் அவனுக்கு  ஒரு திருப்புமுனை! அவனுக்கு மட்டுமல்ல!

நம்ம நிரூபணாவிற்கும் தான்.

க்களின் கவனத்தை ஈர்க்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பிரதிநிதிகள், சஞ்சிகை தொகுப்பாளர்கள் என பலரும் நிறைந்திருந்த அரங்கில் மிதமான தொனியில்,அழுத்தமான கருத்தினை கூர்மையான வசனங்களில் சொல்லி கொண்டிருந்தாள் அவள்.

" அண்மையில் மாணவர்களுக்கு பிறகு அதிகம் தற்கொலை முயற்சிகள் நடந்திருப்பது கலைத்துறையில் தான்! போதிய சம்பளம் இல்லை, அடையாளம் இல்லை, நிலையான இடமில்லை இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்!

முதன்மை காரணம் விமர்சனங்கள் தான் ! ஆண்களின் கண்ணியத்தையும் பெண்ணின் கற்பையும் பற்ற வைத்து குளிர் காய்வதுதான் ஊடக அரசியலா?"

"ஒரு காலத்தில் சுதந்திர எண்ணங்களை விதைக்கவும் நாட்டு பற்றினை மக்களிடம் சேர்க்கத்தான் பாரதியார் போன்ற சான்றோர்கள் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தார்கள்.. எழுச்சியுடன் எழுந்த பத்திரிகைகள் தமிழ், நாட்டு நடப்பு, உலக செய்திகள் னு பன்முகம் பெற்றன..

மக்களுக்கு இது பயனளிப்பதோடு பொழுதுபோக்காகவும் இருக்கனும்னு தான் கதைகள், கவிதைகள், துணுக்குகள்னு ஆரம்பித்தார்கள். அன்று பயனும் பொழுதுபோக்கும்! இன்றைக்கு பொய்யும் போலியும்.

சுவாரஸ்யத்திற்காக எத்தனை பேரின் சொந்த வாழ்க்கை விமர்சனமானது?" என்று அவள் பேசும் போதே அங்கே அதிருப்தியில் சில குரல்கள் எழுந்தன.

" இது மன தைரியம் சம்பந்தப்பட்ட விஷயம். விமர்சி்க்க படுற எல்லாருமே தற்கொலை பண்ணிக்கிறது இல்லையே! எதிர்மறையான கருத்துக்களை சந்திக்க திறன் குறைந்ததால் தான் அப்படி முடிவு எடுக்குறாங்க!" என்று கூட்டத்தில் ஒருவர் சொல்லவும் ராகவேந்திரனின் பார்வை கூர்மையானது.

என்ன பதில் உரைக்க போகிறாள் நிரூபணா?

-வீணை இசைந்திடும்-

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.