(Reading time: 9 - 17 minutes)

11. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

வாழ்க்கை அதன்  போக்கில் சென்று கொண்டிருக்க தனது விடுமுறை நாட்களை காவ்யா உடனும் விஷ்வா உடனும் அழகாக கொணடாடிக் கொண்டிருந்தாள் கவி.

புயலுக்கு முன் அமைதி என்பது தெரியாமல் தெளிந்த நீரோடையாக போகும் அவளது வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் கவி.

தனது சந்தோஷத்தின் ஆயுட்காலங் கள் எப்பொழுதும் குறைவு என்பது அவளுக்கு தெரியாமல் போய்விட்டது.

விதியின் விளையாட்டை அறிந்தவர்கள் யார்.........

ஒரு ஞாயிறு அன்று அவளது மாமா இருவரும் வீட்டில் இருக்க அவர்களது சொந்த ஊரை சேர்ந்த பெரியவர்கள்  நாராயணனை சந்திக்க வந்தனர்.

இப்பொழுது நாராயணன் பொள்ளாச்சியில் இருந்தாலும் அவர்களது சொந்த ஊர் வேறு .....

அந்த ஊரில் இருந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் என்பதால் தான நாராயணன் குடும்பம்  பத்தொன்பது வருடங்களுக்கு முன் அந்த ஊரை விட்டு வந்தது.

இப்பொழுது அந்த ஊரை சார்ந்தவர்கள் இவர்களை தேடி வந்துள்ளார்கள்.

வந்தவர்களை வரவேற்று உள்ளே அமரவைத்தார் நாகராஜன்.அவர்களை அமர வைத்துவிட்டு தனது அப்பாவை அழைத்துவந்தார்.

மஞ்சுளாவும்,நளினியும் வந்தவர்களுக்கு குடிப்பதற்கும்,கொரிப்பதற்கும் பதார்த்தங்களை கொண்டுவந்துக் கொடுத்தார்கள்.

நாராயணனும் வந்தவர்களை வரவேற்று பேச ஆரம்பித்தார்.நலவிசாரிப்புகளுக்கு பிறகு

அந்த ஊரின் பெரியவர் பெரியசாமி முதலில் பேச ஆரம்பித்தார்.

“அப்பறம் நாராயணா.., ஊர் பக்கமே வரது இல்ல..,இந்த தடவையாவது நான் சொல்லுவத கேட்டு நம்ப ஊருக்கு வாப்பா...”என்றார் அவர்.

“அண்ணா உங்களுக்கே தெரியும் என்ன  நடந்துதுன்னு இப்ப போய் என்ன வர சொன்னா..,நான் எப்படினா வரது..”என்றார் நாராயணன்.

“அவங்களும் தான் அங்க இல்லையே..,அப்பறம் எதுக்குப்பா தயங்குற...”என்றார் பெரியசாமி. அதன் பின்பும் நாராயணன் அமைதியாக இருக்க..,இந்தவருசம் நம்ப குலதெய்வக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்னோம் அப்பகூட வரல..,இந்த திருவிழாவுக்காவது வாப்பா..,இந்த வருஷம் ரொம்ப விஷசமானதாம் பல நூறாண்டுக்கு ஒரு முறை தான் இது மாதிரி நாள் அமைஞ்சு திருவிழா நம்ப ஊர்ல நடக்குமாம்..வாப்பா..,நமக்காக இல்லாட்டியும் நம்பளோட

வம்சத்துக்காவது வாப்பா..,நமக்கு அப்புறம் அவங்க நல்லா இருக்கனுமில்ல...,குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியமானது..”என்று அவர் முடிப்பதற்கும் கவி,காவ்யா,விஷ்வா,ஆகாஷ் வருவதற்கும் சரியாக இருந்தது.

உள்ளே  வந்தவர்களை பார்த்த பெரியசாமி..,”என்னடா..இவங்க எல்லாம் உன்னோட பேரபசங்களா...”என்றுக் கேட்டார்.

“ஆமா அண்ணா..,என்று அவர்களை அறிமுக படுத்திவைத்தார்.அனைவரும் அவரிடம் ஆசி வாங்கி கொண்டனர்.

கவியை அறிமுக படுத்தி வைக்கையில்..,”இது நம்ம கவியரசி பொண்ணாடா..”என்றுக் கூறி அவளை வாஞ்சையாக பார்த்து அவளது கன்னங்களை தடவிக் கொடுத்தார்.

“நாராயணா..,இந்த பிள்ளைங்க  வாழ்க்கைகாவது..,பாருடா..”என்று அவர் மேலும் மேலும் வற்புறுத்த..,அந்த பயணத்தை உறுதி படுத்தினார் நாராயணன்.

அவர்கள் அனைவரும் கிளம்பும்பொழுது பெரியசாமியிடம்..,”அண்ணா..,அவனும் வரனா..”என்று கேட்டார் நாராயணன்.

“வரான்டா..”என்றுக் கூறிவிட்டு அவரது முதுகை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார் அந்த பெரியவர்.

அவர்கள் ஊருக்கு போவது உறுதியானதும் சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.தங்களது பயணத்தை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

நாராயணன் தனது மகள் மாலதியையும் வர வைத்தார்.

மாலதி(இவங்களதான் அன்னைக்கி ஷாப்பிங் போனப்பா..கவி திட்டியது..,அதுக்குதான் விஷ்வா கவிய அடிச்சது..இது எல்லாம் உங்களுக்கு தெரியும்..) சித்தி வருவது தெரிந்து கவியும் மகிழ்ச்சி அடைந்தாள்.மாலதி சித்தி அவளை எப்பொழுதும் அன்புடன் கவனித்துக் கொள்வாள் அவர்களது மகன் ஆதியும் சரி..,மகள் ஹேமாவும் சரி இவளிடம் அன்பாக இருப்பார்கள்.அவளது கணவன் மாதவனை தவிர..அவர் மட்டும் தான் அவளிடம் ஒதுக்கம் காட்டுவார்.

மாதவனின் தங்கை தான் நளினி கவிகவிக்குயின் சின்ன அத்தை.மாலதி ஊரிலிருந்து வந்தவுடனே கவியை தான் தேடினார்..,அவளுக்கு என்று வித விதமாக துணிமணிகள் வாங்கி வந்தார்.

எப்பொழுதும் போல  நளினி எதாவது சொன்னாலும்..,அதைக் கண்டு கொள்ளாமல்..,மாலதி கவியை அழைத்து அன்போடு பேசினார்.

கவிக்கும் தனது அத்தையது பேச்சுக்கள் பழகியதால் அவள் எதுவும் கண்டுகொள்ளவில்லை...

அவர்களது ஊரை நோக்கிய பயணமும் தொடங்கியது...,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.