(Reading time: 9 - 17 minutes)

தனது வாழ்கையின் பயணமே மாற போகிறது என்று தெரியாமல் அந்த ஊரை நோக்கிய பயணத்தை ரசித்தாள் கவி.

ஒரு வழியாக அவர்களது ஊரை அடைந்தனர்.அந்த ஊரின் பசுமையும் இயற்கையும் இளையவர்கள் அனைவரையும் கட்டிபோட்டது.

அவர்களுக்கு என்று ஒரு வீடு ஒதுக்க பட்டிருந்தது.அதில் அவர்களை தங்க வைத்தார் பெரியசாமி தாத்தா.

முதல் நாள் பயண களைப்பில் ஓய்வெடுப்பதில் கழிய,மறுநாள் அனைவரும் ஊரை சுத்தி பார்க்க ஆரம்பித்தனர்..தங்களுடன் தாத்தாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அந்த ஊரை சுற்றி வந்தனர் சிறியவர்கள்.

நாராயணனும் பல வருடங்களுக்கு பின்பு தனது சொந்த ஊரை பார்த்த சந்தோஷத்தில் அவரும்  தனது இளமையை பற்றியும்,அவர் செய்த குறும்புகள் பற்றியும்..,தனது மகன்கள் செய்த குறும்புகள் பற்றியும் தனது சந்ததிகளிடம் பகிர்ந்துக் கொண்டார்.

அவர்கள் அந்த ஊருக்கு வந்து இரண்டு நாட்களை கடந்து இருந்தது.இன்னும் மூன்று நாட்களில் திருவிழா என்றபொழுது..,அந்த ஊரிலே மிக பெரிய வீட்டிருக்கு அழைத்து சென்றார் நாராயணன்.

அது பல  அறைகளையும்,நூலகத்தையும் கொண்டிருந்தது.அந்த வீட்டின் அழகில் சிறியவர்கள அனைவரும் மயங்கினர்.

அந்த வீட்டை சுற்றி பார்த்து வெளியில் வந்தகவி தனது தாத்தாவின் பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி இருப்பதை பார்த்தவள் ..,அந்த திசையை நோக்கி தனது பார்வையையும் செலுத்தினால்....அங்கு அவர் பார்த்த திசையில் ஒரு ஆலமரம் மட்டுமே இருந்தது.

அதை எதற்கு இவ்வாறு பார்க்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவருக்கோ தனது பால்ய கால நினைவுகள் மனதை சூழ்ந்துக் கொண்டிருந்தது.தனது தாத்தாவிடம் சென்று அவரது தோளைத் தொட்டாள்.தனது பேத்தியின் தொடுதலில் அவள்

நிகழக்காலத்திற்கு வந்தார்.

“என்ன தாத்தா அங்கேயே பார்த்துக்கிட்டு இருக்கீங்க..”என்றுக் கேட்டாள் கவி.

“ஒன்னும் இல்லடா..”என்று அவர் வாய் கூறினாலும் அவரது முகமே அவரைக் காட்டிக் கொடுத்தது அவளுக்கு, அவர் ஏதோ நினைவில் இருப்பதை.

அதற்குள் காவ்யா வந்துக் கூப்பிட அவள் அவர்களுடன் சென்று விட்டாள்.

அந்த ஆலமரத்தையே பார்த்திருந்தவரின் முகம் திடிரென பிரகாசித்தது. 1000 வாட்ஸ் பல்பு அவர் முகத்திலிருந்த வெளிச்சத்தில் தோத்துவிடும்..அவ்வளவு வெளிச்சம்....அவர் முகத்தில்...

கவி தனது பயந்த சுபாவத்தை வைத்து கிண்டல் பண்ணினாள்.அதனால் காவ்யாவும் விஷ்வாவும் அவளுக்கு பயம் என்றால் என்னவென்று காட்ட வேண்டும் என்று நினைத்தனர்.

அதனால் அவர்கள் செய்த சிறிய விளையாட்டுத்தனம் அவளது வாழ்வின் வழியையே மாற்றிவிட்டது.

கவிக்கு புத்தகம் படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.அதனால் மதிய நேரம் சாப்பிட்டு விட்டு தன் தாத்தாவுடன் சென்றவள் அந்த வீட்டில் இருந்த நூலகத்திலேயே அமர்ந்துவிட்டாள்.

நாராயணனும் மாலை வந்து பார்த்தார் அவள் புத்தகம் படிப்பதைப் பார்த்துவிட்டு அவளிடம் தான் பக்கத்து ஊருக்கு செல்வதாகவும்,அவளை பத்திரமாக வீட்டிற்கு செல்லுமாறும் கூறிவிட்டு சென்றுவிட்டார்

மாலை ஆறு மணி ஆகியும் கவி வராமல் இருக்க, மஞ்சு அவள் எங்கே என்று விஷ்வாவிடம் கேட்க அவள் அந்த  வீட்டில் இருப்பதாகா விஷ்வா கூறினான்.

மாலை 7 மணி அளவில் மஞ்சு “விஷ்வா..,கவியக் கூப்பிட்டு வாடா....”என்றுக் கூற,அதற்குள் அங்கு வந்த காவ்யா,”பெரியம்மா..,நீங்க எங்கக்கிட்ட குடுத்து விடுங்க..,நாங்க அங்கேயே சாப்பிட்டுட்டு...,கொஞ்ச நேரம் நாங்க  பேசிருந்துட்டு வரோம்..”என்றுக் கூறினாள்.

“இது புது ஊருடா..,நீங்க ரொம்ப நேரம் அங்கே இங்க போக வேணாம்.அவளையும் இங்கேயே கூப்பிட்டு வந்துடுங்க..”என்றுக் கூறினார் மஞ்சு.

“பெரியம்மா...நீங்க பயப்பட வேண்டாம். இது என்ன சிட்டியா எதாவது பிரச்சனை வந்தாலும் பக்கதுல போறவங்க கண்டுக்காமா போறதுக்கு...,நீங்க கவலைப்படாமா போய் தூங்குங்க..,நாங்க சாப்பிட்டுட்டு வந்து தூங்கறோம்..”என்று காவ்யா கூறினாள்.

அவள் சொல்வதைக் கேட்ட மஞ்சு காவ்யாவைப் பார்த்து சிரித்துவிட்டு “ சரிடி..,நீங்க போயிட்டு பத்திரமா அவளையும் கூப்பிட்டுகிட்டு வாங்க...,நான் சாப்பாட்ட எடுத்து வைக்கிறேன்..”என்று அவர் கூறிவிட்டு சென்றுவிட,

விஷ்வா “காவ்யா என்னடி பண்ற பத்து மணி ஆனாலே உன்க்கூட ஒருத்தங்க இருக்கணும்,நீ என்னனா பெரியம்மாகிட்ட நேரங்கழிச்சுதான் வருவோம்னு சொல்லுற..”என்று கேட்டான்.

“டேய் அண்ணா,நீயும் என்ன பயந்தாங்கொள்ளினு சொல்லுறியா..,என்னோட பயத்த  வச்சி கிண்டல் பண்ட்றால அவ, அவளுக்கு இன்னைக்கி பயமுனா என்னானு காமிக்கிறேன்...”என்றுக் கூற..,”ஏய் என்னடி பண்ண போற,கவிக்கு எதாவதுனா உன்ன கொன்னுடுவேன்..”என்று விஷ்வா கூற,

“என்னோட அருமை அண்ணா,எப்படி உனக்கு கவி அத்தை மக இரத்தினமோ அதுப்போல எனக்கும்..,அவ ரத்தினம் தான்..,அவளுக்கு ஒன்னும் ஆகாது புரிதா,சும்மா அவளுக்கு பயமுனா என்னானு தான் காமிக்க போறேன்..”என்று காவ்யாக் கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.