hod “என்பா செந்தில் .. என்னப்பா ஒன்லி கூல் ட்ரின்க் தானா... ஹாட் ட்ரிங்க்ஸ் எல்லாம் இல்லியா?” என
செழியனோ அவரின் பின்புறமிருந்து “ஹலோ.. லலிதா ஆன்டி வாங்க... என்ன hod சார் பார்க்க வந்தீங்களா?”
வேகமாக திரும்பியபடி “லலிதா.. ஹாட் ட்ரிங்க்ஸ் னா.. டீ காபி தான் கேட்டேன்.. வேற எதுவும் இல்லை” என்றபடி பார்க்க, அங்கே யாரும் இல்லை..
“செழியா.. உனக்கு ஏன் இந்த வேலை.. நான் நிம்மதியா ஒருநாள் இருக்கிறது பிடிக்கலையா?”
“அவ்ளோ பயம் இருக்கு இல்ல.. அப்புறம் என்ன ஹாட் ட்ரிங்க்ஸ்.. கூல் ட்ரின்க் நு கேட்டுட்டு .. நியாயத்துக்கு உங்களுக்கு கேப்பை கூழ் கொடுக்கணும்.. போனா போகுதே என்று விருந்து கொடுத்தா...”
“ஏனப்பா.. அந்த கூழ் கிட்டேர்ந்து தப்பிக்க தானே விருந்துக்கே வந்தேன்..” என்று அலற,
சற்று நேரம் எல்லோரும் சிரித்தனர்..
மலர் veg பக்கம் போக, செந்தில்
“ஏன் மலர்.. ? நீங்க pure veg ஆ ?” என்று வினவ,
“ஆமாம்..” என்றாள்..
“அப்படி என்றால் செழியா நீ அவங்களுக்கு கொஞ்சம் கம்பெனி கொடு.. மற்ற எல்லோரும் non-veg பக்கம் நிற்பதால் நான் அங்கே பார்க்கிறேன்..”
செழியன் மலரின் அருகில் வந்து அவளுக்கு உதவியதோடு , தனக்கும் எடுத்துக் கொள்ள,
“சார்.. நீங்க non-veg சாப்பிடறது என்றால் சாப்பிடுங்க.. நான் எனக்கு தேவை ஆனது நான் பார்த்துக்கறேன்..”
“இல்லை மலர்.. நானும் veg தான்.. சோ ரெண்டு பேரும் சாப்பிடலாம்..” என்றபடி ஆரம்பித்தார்கள்.
எல்லோருமே அந்த ரவுண்டு டேபிளில் அமர்ந்துதான் சாப்பிட்டனர்.. வேண்டும் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு சாப்பிட்டனர்..
‘”செந்தில்.. சாப்பாடு எந்த ஹோட்டல் பா? ரொம்ப நல்லா இருக்கு “
செழியன் தான் “நம்ம ஸ்டுடென்ட் ஒருத்தர் வீட்லே கேட்டரிங் பண்றாங்க.. அவங்க கிட்டே தான் ஆர்டர் கொடுத்தோம்”
“சூப்பர் பா..” என்று எல்லோரும் பாராட்டினார்கள்.
சாப்பிடும்போதே செந்திலை அவன் வருங்கால மனைவியை வைத்து கேலி செய்து சிரித்துக் கொண்டனர்..
மலர் ஐஸ்கிரீம் மட்டும் மூன்று தரம் எடுத்து இருக்க, செழியன் சிரித்தான்.. அதிலும் மூன்றாவது முறை எடுக்கும் போது யாரும் பார்கிரரகளா என்று தன் கண்களை சுழற்றி ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் சென்றதை பார்த்த செழியன், அந்த விழி வீச்சில் தன் மனம் தொலைத்தான்..
மலர் திரும்பும்போது “என்ன மலர் மேடம்.. ஐஸ்கிரீம் எத்தனாவது ரவுண்டு “ என்று கேலி செய்ய,
“அட போங்க சார்.. நானே அந்த பாஸ்கட் புல் காலி பண்ணிருப்பேன்.. எனக்கு பிடிச்ச பட்டர் ஸ்க்டோச் flavor வேற,,, மற்றவங்களுக்கு இருக்கட்டுமேன்னு விட்டு வைச்சேன்”
அவளின் பாவனையில் தன்னை தொலைத்தவன், இதே போல் பெரிய பாமிலி பாக் ஐஸ்கிரீம் நான் வாங்கி தருகிறேன் புஜ்ஜு .. என்று கூற வந்தவன் கடைசி வினாடியில் தன்னை கட்டுபடுத்தி சிரித்து மட்டும் போனான்..
பின் செந்தில் செழியனை அழைத்து ,
“செழியா... ஒரு பாட்டு பாடேன்..”
“ஹே.. நானா.. இப்போ என்ன ?”
hod “ என்பா.. வயிறு புல் ஆயிடுச்சு.. நீ பாடினால் எங்க காதும் குளிரும்.. பாடு யா “ என,
முதலில் சற்று தயங்கிய செழியன், பின் தன் கண்களை மூடிக் கொண்டு பாட ஆரம்பித்தான்.
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்
அவன் பாடி முடிக்கவும் எல்லோரும் கை தட்டினர்.. அவன் மனகண்ணில் முழுதும் மலர் அந்த ஊஞ்சலில் ஆடுவது போலவும், தான் அதை ஊஞ்சலை ஆட்டுவதாகவும் கற்பனை செய்து கொண்டான்.
கைதட்டல் சத்தத்தில் விழி திறந்த செழியன் மலரை பார்க்க, அவளின் பார்வையோ அவன் முகம் பார்த்தாலும், சொல்ல தெரியாத உணர்வில் சிக்கி இருந்தது.
தொடரும்!
{kunena_discuss:1126}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.