(Reading time: 22 - 43 minutes)

07. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

காவ்யாவின் முகத்தில் பளீரென தெறிக்கப்பட்ட குளுந்த நீரின் தாக்கம், அவளை விழிக்க செய்தது. மெதுவாக விழிகளை திறந்தாள். கை தானாக கண்ணத்தை தடவியது. விழியை விரித்து பார்க்கும்போது, அவள் முகத்தின் அருகே ஒரு அழகான முகம், காவ்யா புன்னகைத்தாள்.

“அது சரி, வீட்டில ஆயிரத்தெட்டு வேலை கிடக்கு, நீ இப்படி மடில சுகமா தூங்கினா யார் சாப்பாடு ஆக்கிறது?” – என்ற தர்ஷினியின் குரலும் மீண்டும் காவ்யா மீது தெறிக்கப்பட்ட நீரும் அவளைக் கலைத்தது. மெதுவாக எழுந்து அமர்ந்தவள். “மச்சீ, இங்க எப்படி நான் வந்தேன்?” – என்றாள்.

“ம்ம், ஏன் கேட்க மாட்ட, வெளில போனா பத்திரமா வரமாட்ட?  பாரு இப்படியா காருக்குள்ளேயே மயங்கி விழுவ, ரிஷி மட்டுமில்லாட்டி என்ன நடந்திருக்கும்?” – தர்ஷினி

“ஹப்பா!” என்றவாரு வாயைப் கைகளால் பொத்தி பின் பிரித்தாள் காவ்யா. “இப்படி அந்த தடிமாடு உங்கிட்ட சொன்னானா?”

“சீ காவ்யா என்ன இது ரிஷி உன்ன பத்திரமா வீட்டில விட்டுறுக்காரு…அவர போயி.. ச்ச..”

“ஆமாம்மா, ரிஷிதம்பி நீ காருக்குள்ளேயே மயங்கிட்டனு சொன்னாரு, நல்லவேளை அவர் அந்த பக்கமா வர்றப்போ உன்ன பர்த்திருக்காரு, இங்க பத்திரமா கொண்டு வந்து விட்டுட்டு போனாரு….!” – மாணிக்கம்

“ஹையோ, அங்கிள் நீங்க வேர”, தர்ஷினியின் பக்கம் திரும்பி, “அவன் வேரு என்ன சரடு விட்டான்…? தர்ஷூ…?” என்றாள்.

“ம்ம்.. நீ மாலுக்கு போற வழில கார் குள்ள மயங்கி கிடந்தயாம், அந்த வழியா அவர் வர்றப்ப பார்த்திட்டு இங்க விட்டுட்டு போனாரு.. வெறும் டிஹைட்ரேஷன் தான் தண்ணீர் நிறைய குடுங்கனு சொன்னாரு டீ!” – தர்ஷினி

காவ்யா விழித்தாள், மாணிக்கத்தின் முன் எதையும் சொல்லவேண்டாமென தர்ஷினி கண் சிமிட்டி காட்ட.. அவள் மெதுவாக எழுந்தாள். “சரி, அங்கிள் சமையல் ஆச்சா?” என்றாள் புன்னகையுடன். “இன்னும் அரைமணி நேரம் தான்.. எல்லாம் உனக்கு பிடிச்ச அயிட்டம்ஸ் தான், இரண்டு பேரும் முகம் கழுவிட்டு, கொஞ்ச நேரம் தோட்டதில் இருங்க நான் ரெடி ஆனதும் கூப்பிடுறேன்….” என்றார்.

அதற்காகவே காத்திருந்ததுபோல், தர்ஷினி காவ்யாவின் கைகளைப் பற்றி தோட்டத்திற்குள் இழுத்து போனாள், அங்கிருந்த வேப்ப மரத்தின் ஊஞ்சலில் காவ்யாவை அமரவைத்து கீழே இருந்த ஒரு சிறுய கல்லின் மீது தர்ஷினி உட்கார்ந்துகொண்டு ஆர்வமாக காவ்யாவிடம், “காவீ, எனக்கு நேத்திக்கே தெரியும்” – தர்ஷினி

“என்ன தெரியும்?” – காவ்யா

“நீ ஓவரா பில்டப் கொடுக்கும்போதே, இப்படி ரிஷியப்பார்த்ததும் பொத்துனு விழுவேனு நினைச்சேன்!” – தர்ஷினி

“தர்ஷூ நான் ஒன்னும் மயங்கிலாம் விழல.. “ – காவ்யா

“காவீ, இது என்ன புது கதையா இருக்கு, கண்ணம்லாம் வேர சிவந்திருக்கு, அப்ப வேர எதுவோ நடந்திருக்கு… ஏதாச்சும் கசமுசாவா?”- தர்ஷினி குறும்பு ததும்பும் கண்களுடன் காவ்யாவைப் பார்க்க..

“கசமுசாவும் இல்ல, எந்த கன்றாவியும் இல்ல..!” – காவ்யா

“அப்ப ஏண்டி கண்ணம் சிவந்திருக்கு?”

“அவன் என் கண்ணத்தில அடிச்சுட்டாண்டி, பளார்னு…!”  காவ்யா இதை சொல்லிவிட்டு விசும்புவதைப்போல் நடிக்க, அதை பார்த்து தர்ஷினிக்கு சிரிப்பு வந்தது அவளைப் பார்த்து காவ்யாவும் சினுங்குவதை விட்டு சிரித்தாள். காவ்யா நடந்ததைக் கூற, ஆர்வம் ததும்பும் கண்களுடனும், புன்னகையுடனும் கேட்டிருந்தாள் தர்ஷினி..

“ம்ம்.. நல்ல வேளை அவன் பொறுக்கித்தனமா, ஏதும் செய்யாம கண்ணத்தில அரைஞ்சதோட விட்டானே.. அதுவரைக்கும் தப்பிச்சேன்!” – காவ்யா

“காவீ, அவரு பொறுக்கித்தனமா ஏதும் செய்யலனு உனக்கு தெரியுமா?” – தர்ஷினி

காவ்யா அதிர்ந்து தர்ஷினியைப் பார்க்க, அவளோ புன்னகையுடன், நீ தான் அவர் விட்ட அரைல மயங்கி விழுந்திட்டீயே.. பின் அப்புறம் என்ன நடந்ததுனு உனக்கு என்ன தெரியும்? ம்ம்.. அது மட்டுமில்லாம நீ மயங்கிவிழுந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழிச்சு தான் அவர் உன்ன இங்க தூக்கிட்டுவந்தாரு, இதெல்லாம் வச்சு பார்க்கும்போது…” என்று தர்ஷினி இழுக்க..

“பார்க்கும்போது??” – காவ்யாவின் முகம் சுருங்கிவிட்டது, அவள் பயத்துடன் தர்ஷினியைப்பார்க்க..

“பார்க்கும்போது, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணும்னு தோணுது!” – தர்ஷினி

“ஐயோ, அப்டினா அவன் என்னை ஏதாச்சும் செஞ்சிருப்பானா தர்ஷூ?” காவ்யா அவசரமாக ஊஞ்சலில் இருந்து இறங்கி, அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“அது அவரே வாயாத்திறந்து சொன்னால்தான் தெரியும்..? எதுக்கும் அவர்கிட்ட உன்னோட வாலை ஆட்டாம கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இரு!”

காவ்யா.. தலை அசைத்தவாரே.. கண்ணத்தை தடவிக்கொண்டாள்.. ஏனோ அவன் விட்ட அரை கண்ணத்தோடு சேர்த்து அவள் பெண்மையையும் காயப்படுத்தியது.. கொஞ்சமேனும் புரிந்துகொள்ள முடியாத ரிஷியிம் போக்கு அவளை வருத்தியது.. அவள் கண்கள் மூடி யோசித்தாள், ரிஷியின் மீது எந்த ஒரு ஆர்வமும் இன்றி, அவனைப் பற்றி அறிந்துகொள்ள கூட விரும்பாத நிலையில் அவளின் திருமணம் ரிஷியோடு நிச்சயிக்கப்படும் சூழல் உறுவாகியுள்ளது. தன் பெற்றோரிடமும், ஏன் காவ்யாவின் பெற்றோரிடமும் தன் மன விருப்பத்தை சொல்லிய ரிஷி  காவ்யாவிடம் ஒரு முறையேனும் அதைக் காட்டாதது,  அவளுக்கு வெறுப்பையும் சந்தேகத்தையும் அளித்தது.. உண்மையில் இது ஒரு வியாபார ஒப்பந்தமாக அவளுக்கு தோன்றியது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.