(Reading time: 22 - 43 minutes)

உள்ளே கையைவிட்டு கார் கதவின் தாழை உடைத்து கதவை திறந்தான். அவன் திறக்கவும் மயங்கிய நிலையில் வெளியே சரிந்தாள் கீர்த்தனா. ஒரு நோடி அதிர்ந்தவன், வெட்டிய மின்னலில் தன் கைகளில் மயங்கி சரிந்து கிடப்பது ஒரு பெண்ணென உணர்ந்ததும், செய்வதறியாது திகைத்து நின்றான். அடுத்த நிமிடம் தன் நிலைக்கு மீண்டவன், அவளை இழுத்து, காரிலிருந்து சற்று தூரம் தூக்கி வந்து கிடத்தினான், அடித்த சாரல் அவளையும் நனைத்தது. இளமாறன் அவள் கண்ணங்களில் தட்டி அவளை எழுப்பினான். அரை மயக்கமும், லேசான ஞாபகமும் வர, கடினப்பட்டு கண்களைத் திறந்தாள் அவள். எதிரே தீர்க்கமான விழிகளுடன் தன்னை மடியில் போட்டு எழுப்பிக்கொண்டிருந்தவனின் முகம் கண்களில்  மலர, தன் விழிகளில் நன்றியை தெரிவித்தவள் மீண்டும் மயங்கினாள். அவளைத்தூக்கி ஒரு மரத்தின் அடியில் கிடத்தியவன் மழை ஓயும் தனியும் அங்கேயே இருக்க நினைத்தான். சிறிது நேரத்திற்கு பிறகு மழை வெறிக்க, இரவு ஏறியிருந்தது. வெகு நேரத்திற்கு பிறகு கீர்த்தனா கண்களைத் திறந்தாள், அவளது கால்கள் தள்ளாடியது. இளமாறன் தன் தோளோடு ஒரு கையைப் போட்டு அவள் இடையோடு மறு கரம் கோர்த்து தூக்கினான், அந்த இயலாமையிலும் ஒரு அன்னிய ஆடவனின் தொடுதலை விரும்பாது நெளிந்த அவள் நாணமும் உணர்வுகளும் இளமாறனை கலக்கியது. வேறு வழியின்றி தன் பைக்கில் அவளை அமர செய்து அவளது துப்பட்டாவை எடுத்து அவள் நகலாது தன் உடலோடு இருக்கிக் கட்டிக்கொண்டு வண்டியைக் கிளப்பினான்.

தன் வழியிலிருந்து இறங்கி உதவ நினைப்பவனுக்கு இயற்கை பல துன்பங்களைத் தந்தாலும், விலைமதிப்பற்ற நல்ல உறவுகளையும், எதிர்பாரா நிலையில் பல உயர்வுகளையும் கொடுக்கும். கீர்த்தனா கலைவாணியின் வரம் பெற்றவள், சிறந்த அறிவாளி, படிப்பைபும் திறமையையும் தன்னிடம் குவிந்துள்ள செல்வத்திற்கு அடிமையாக்காது, என்றும் திறமையையும் உழைப்பையையும் கண்ணாக நினைப்பவள். அவள் வாணி. எளிதில் அடைமுடியாத கல்வி அறிவை பெறும் செல்வமாக பெற்றவள், இளமாறனின் இடையோடு இருக்கப்பட்டு அவனது பின் புறம் அவன் முதுகில் சாய்ந்து கிடந்தாள். ஒதுக்குப்புறமான அந்தப் பாதையைக் கடந்து நெடுஞ்சாலையை அடைந்ததும் ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தினான். அந்த அந்தகாரம் சூழ்ந்த இரவின் மடியில், மங்கிய மஞ்சள் விடி விளக்கு அளித்த வெளிச்சத்தில் அவன் அவளைப்பார்த்தான். விழிகளை அகற்ற விரும்பாது அவள் தோள்களைப்பற்றி அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் லேசாக மயக்கம் தெழிந்து, கற்றை முடிகள் அடுக்கிய இமைகளை மெதுவாக திறந்து அவனைப் பார்த்தாள். மழை நின்றது. வாடைக்காற்று ஒன்று இருவரது தோளையும் தழுவி சென்றது, அந்தக் காற்றுக்கு நடுங்கிய கீர்த்தானாவின் தோள்களை அழுத்தியது இளமாறனின் கரம்.

“என்னாச்சு தம்பி, யாரிந்தப்புள்ள, நீ கட்டிக்கப்போற புள்ளையா? சரி உள்ளார கூட்டியாந்து டீ குடி, மழைல நனஞ்சு கோழியாட்டம் நடுங்கிக்கிட்டு இருக்கு..” – டீ கடையிலிருந்த ஆயாவின் குரல் இருவரையும் உலுக்கியது. சட்டென விலகி நின்ற இருவரும் சுதாகரித்துக்கொண்டு உள்ளே சென்றனர். வானம் கலைந்து தெளிந்தது.  பெரும் அமைதி ஒன்று அந்த இடத்தை நிறப்ப.. “பார்வை ஒன்றே போதுமா?” என்ற பாடல் மெல்லிய சப்தத்தில் டீக்கடையின் உள்ளே ஒலித்தது. நேரம் கடந்தது.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.