(Reading time: 29 - 57 minutes)

08. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

டையறாது பெய்து ஓய்ந்தது மழை. விடியல் கீற்று இன்னும் பூமி தொடாது, இரவு நனைந்து கரைந்துக்கொண்டிருந்தது. மெல்லிய கனவுகளில் திழைத்து உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பியது அலைபேசி.. யாராயிருக்கும்?, திரைகளில் தெரிந்த பெயரைப்பார்த்ததும் வினாக்களுடன் அழைப்பை ஏற்றாள் தர்ஷினி, “தர்ஷினி… கொஞ்சம் கதவ திறக்குரியா? உன் வீட்டு வாசல்ல தான் இருக்கேன்”, கீர்த்தனாவின் குரல், தெளிவான குரல். உணர்ந்ததும் புலன் யாவும் விழித்துக்கொள்ள விருட்டென்று எழுந்து, சாளரம் வழியே அவள் தான் என உறுதிப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்தாள். கீர்த்தனாதான், வாசலில் தர்ஷினி ஒளிர விட்ட வளக்கு கீர்த்தனாவின் நிலையைப் பளிச்சென்றுக் காட்டியது. ஒரு நொடி அதிர்ந்தவள் வாசலருகே ஓடி வந்தாள், தர்ஷினியின் முகத்தைப்பார்த்ததும் மெல்லிய நிம்மதி பரவ, தன் பின்னே திரும்பிப்பார்த்தாள் கீர்த்தனா, வீட்டின் சற்று தூரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இளமாறன் நின்றிருந்தான், “உள்ளே போ” என்பதுபோல் கண் அசைத்து செய்கைகாட்ட,  அவள் அவன் முகத்தை ஆழ்ந்து ஒரு நொடி பார்த்துவிட்டு, விருட்டென்று உள்ளே சென்றாள். மனம் பல எண்ணங்களில் அலைக்கழிக்க, தன் வண்டியைக்கிளப்பினான்.  “என்ன உணர்விது?” கடகடவென நடந்து முடிந்த நினைவுகள் அவன் மனதை உறுத்த இதை வேறுமாதிரி சமாளித்திருக்கலாமா?” தன் இயலாமைமேல் அவனுக்கு கோபம் வந்தது அந்த ஆத்திரத்தை எல்லாம் வண்டியின் மேல் காட்ட அது தன் வேகத்தை அதிகரித்து.. காற்றில் பறந்தது..

”கீர்த்தி”  பெயரை தயங்கி தயங்கி அவள் சொன்னவிதம் மனதை நனைக்க வேகம் மெதுவாக குறைந்தது. அவள் சொல்வதெல்லாம் பொய் என அவனுக்கு தோன்றியது அப்போது.. எனினும் அவள் மீது எள் அளவேனும் கோபம் வரவில்லை மனதில். மாறாக நடந்தவைகள் கசந்தது அவனுக்கு. “என்ன காரியம் செய்தோம்? யாரும் செய்ய தயங்கும் காரியம், என்னால் எப்படி முடிந்தது? உண்மையில் நான் தயங்கிநேனா? இல்லை வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டேனா? சீ…எப்படிப்பட்டவன் நான்? என மனதுக்குள் குமைந்தான். எந்த சூழ்நிலையிலும் கண்ணியத்தோடு நடக்க வேண்டும், எந்த பெண்ணிற்கும் தீங்கிழைத்துவிடக் கூடாதென அவன் தான் கூறிய வார்த்தைகள் அவனை சுட்டது…  இதை இன்றோடு மறந்துவிட்டு, அந்தப் பெண் இருக்கும் திசை பக்கம் கூட கால் வைக்க கூடாதென அவன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான். மீண்டும் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

குளித்து, தூவாலையை தலையில் சுற்றி தோளில் சரிய விட்டித்திருந்த கூந்தலில் இன்னும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது, கண்ணாடியின் அருகில் வைக்கப்பட்டிருந்த டப்பாவிலிருந்து சிறிய ஒட்டுப் பொட்டை நெற்றியில் வைத்தவள், தன்னையே வெகு நேரம் கண்ணாடியில் பார்த்திருந்தாள், இதயம் இன்னும் வேகமாக துடித்தது.. கை தானாக கழுத்திலிருந்த மஞ்சள் சரடை வருடியது.. இவ்வளவு நேரம் சிறிய காலர் ஆடைக்குள் மறைந்திருந்த மங்கல நாண், இப்போது அவள் அனிந்திருந்த இரவு ஆடையில் கழுத்தைப் பளீரென காட்டியது. இதுவரை இல்லாத வகையில் ஏதோ தன் உடல் மெருகேறியதாய் அவளுக்கு தோன்றியது. அப்படியே பார்த்திருந்தவளை தர்ஷினியின் குரல் கலைத்தது, “சீக்கிரம் இந்த காப்பியைக் குடி..“ அவள்  நீட்டிய கையிலிருந்து டம்பளரை வாங்கிக்கொண்டாள் கீர்த்தி, அவளால் தர்ஷினியின் கண்களை ஏறிட முடியாது ஒரு கணம் கண்களை தாழ்த்தி தரையைப் பார்த்தாள்.

“நல்ல வேளை அப்பா வெளியூர் போயிருக்காங்கக இல்லாட்டி, இந்நெரத்திற்கு உன்னையும் அந்த பையனையும்,  உக்காரவச்சு கொடஞ்சு எடுத்திருப்பாங்க”

“தேங்காட்” – கீர்த்தி

“என்னடி தேங்காட்,  ஒழுங்கா சொல்லு கழுத்தில தாலியோட இராத்திரி மூணு மணிக்கு வீட்டுக்கு வந்து நிக்கிற கேட்ட ஒன்னுமில்லனு சொல்ற, இதெல்லாம் என்ன கீர்த்தி? ”

“ஐயோ, வண்டி ஆக்சிடென்ட், நல்ல மழை வேர, இப்படியே வீட்டுக்கு போன அவங்க பயந்திருவாங்க தர்ஷினி..” – கீர்த்தி

“சரி, நல்ல மழை, வண்டிய மரத்தில பார்க் பன்னிட்டு மயங்கி கிடந்த, அவரு காப்பாத்தினாரு.., இத தான் அப்ப இருந்து சொல்லிக்கிட்டு இருக்க, நான் கேக்கிறது உன் கழுத்தில இருக்கிற தாலியப்பத்தி?” – தர்ஷினியின் குரல் உண்மையான ஆதங்கத்துடனும் அக்கரையுடனும் ஒலித்தது. இதை உணர்ந்த கீர்த்தியின் கைகள் மார்புக்குள் புதைந்து, கழுத்திக் நெழிந்துக் கொண்டிருந்த திரு மாங்கல்யத்தை அழுத்திப் பிடித்தது. சின்னதாய் ஒரு தைரியம் வர பெற்றவளாய், “இது நோன்புக் கயிறு” தரையில் பதிந்து கிடந்தது அவள் கண்கள். சுவறில் சாய்ந்து, மார்புக்கு குறுக்கே கட்டிய கைகளுடன் அவளையே கூர்ந்து பார்த்தாள் தர்ஷினி . அவள் மௌனம் ஏதோ செய்ய,  நிமிர்ந்து முகம் பார்த்தாள்.

அவளையே பார்த்திருந்தவளின் கண்கள் கணிந்தது, மெதுவாக கீர்த்தியை அழைத்து வந்து படுக்கையில் அமரவைத்தாள். “உங்கண்ணாவுக்கு சொல்லீட்டியா” – தர்ஷினி

“ரிஷியின் பெயரைக்கேட்டதும், மனம் தளர்ந்தது,  சோர்வாய் பதிலளித்தாள்,”ம்ம்.. கொஞ்சம் பயந்திட்டாங்க, அப்புறமா இங்க தான் உன் வீட்டில இருக்கேனு சொன்னதும், காலைல அழைச்சுட்டு போரேனு சொன்னான், என்னை அப்படி பார்க்காத தர்ஷினி நான் எந்த தப்பும் பன்னல” – கீர்த்தி

கீர்த்தி அமர்ந்திருந்த படுக்கையின் அருகே, வந்து அமர்ந்தவள், “எங்கப்பா குதிருக்குள்ள இல்லனு நீயே சொல்லிட்ட” என்று சிரித்தாள், கீர்த்தியின் முகம் வாட, அவள் கைகளை பற்றிக்கொண்டவள், “கீர்த்தி நீ எந்த தப்பும் பன்னலனா, ஏன் நேரா வீட்டுக்கு போகாம இங்க வந்த?, யாரோ ஒருத்தர் கூட வண்டில இங்க வர்ற வரைக்கும் ஏன் வீட்டுக்கு தகவல் சொல்லல?  நீ சொல்ற மாதிரி அது நோன்புக் கயிறாகவே இருக்கட்டும் நோன்புக் கயிரு சின்னதா நூழ்லிலையா இருக்குமே தவிட, கயிரா மஞ்சள் முடிஞ்சு இருக்காது! நீ எங்கிட்ட ஏதும் சொல்ல வேண்டாம், ஆனா நாளைக்கு வீட்டில அத்தையோ, அண்ணாவோ இது என்னனு கேட்டா என்ன சொல்லுவ?” – தர்ஷினி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.