(Reading time: 29 - 57 minutes)

தர்ஷினியின் கேள்விகளில் தளர்ந்துபோனது மனது, விழி முட்டி நீர்நிறைந்தது..முகத்தை கைகளுக்குள் புதைத்தவள் லேசாக விம்ம, அவள் முதுகை மெதுவாக வருடினாள் தர்ஷினி.

“தர்ஷூ, காவ்யாவோட கார கொடுக்கிறதுக்காக கிளம்பினேன், ஆக்சுவலா, அவகிட்ட கொஞ்சம் பேசலாம்னு தோனுச்சு, அவகூடவே நைட் ஸ்டே பன்னலாம்னு நினைச்சேன், ஆனா போற வழில நல்ல மழை, கண்ணே தெரியல வண்டி மரத்தில மோதி டோர் ஸ்ட்ரக் ஆயிடுச்சு, எனக்கு மயக்கம் வந்திடுச்சு… அப்புறமா நான் கண் விழிக்கும் போது..”, அவள் சொல்ல சொல்ல தர்ஷினியின் இதயம் நடுங்கியது…

நடந்தவை:

லேசாக மயக்கம் தெளிந்தும் பாதி தெளியாத நிலையிலும் இளமாறனின் உதவியோடு அந்த நெடுஞ்சாலையின் தேநீர் கடையில் பிரவேசித்தாள் கீர்த்தி, கடையிலிருந்த ஆயா,  “தம்பி, இதுவரைக்கும் இந்த புள்ளய கூட்டியாரலையே? பார்க்கிறதுக்கு அம்சமா இருக்கு, நீ கட்டிக்கப்போறயா?” என்றாள்.

இளமாறன் அதற்கு புன்னகைத்தான், குனிந்து தளர்வாய் நின்ற கீர்த்தியின் முகத்தைப் பார்த்தான். அழகான பெண்தான். மாநிறத்தில், இளமாறனின் தோளை தொடும் உயரம், அவளது தோள் வரை பரந்து கிடந்த கூந்தல், சிலும்பல்கள் ஏதும் இல்லாது திருத்தப்பட்ட புருவம், லேசான புன்னகை உதிர்த்தால் போதும் அவள், யாரும் நிச்சயம் திரும்பிப்பார்க்கும் முகம். வார்த்தை ஏதும் அவள் பேசாத போதும் அவனது கைகளுக்குள் நடுங்கிய அவளது உடல், பல உணர்வுகளை கிளப்பி விட்டிருந்தது. “டீ போடு ஆயா” என்றான். அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் தன்னை சாய்த்துக்கொண்டு கண்கள் மூடிக்கிடந்தாள் அவள், இன்னும் உள்ளூர ஏதோ செய்ய, ஆயாக்கொடுத்த டீயை அவளது இதழருகே கொடுத்தான், தன் கையை அவளது தலையின் பின் வைத்து அளுத்திப்பிடித்திருந்தான், இரண்டி மடக்கு குடித்தவள் வயிற்றைப் பிரட்ட போதுமென தடுத்து அந்த பெஞ்சில் அப்படியே சரிந்தாள். “என்ன தம்பி ஆச்சு? “ பதறியபடியே வந்தாள் ஆயா.

“வர்ற வழில ஒரு விபத்து ஆயா, அதில இருந்தே மயங்கிக்கிடக்கு, இங்க பக்கத்தில ஏதாவது ஹாஸ்பிட்டல் இருக்கா ஆயா?” – இளா

“தம்பி பக்கத்தில ஒரு கிளினிக் இருக்கு ஆனா இந்நேரத்தில யாராச்சும் இருப்பாங்களான்னு தெரில”

“ஆயா, கொஞ்சம் இவள பார்த்துக்கோங்க, நான் போய் ஆட்டோ ஏதாச்சும் எடுத்துட்டு வர்றேன்” என்றவாரே எழுந்தான்

“சரிப்பா, சீக்கிரமா வா”

ஒருமுறை கீர்த்தியின் முகத்தைப்பார்த்துவிட்டு அவன் வெளியில் வரவும், வாசலில் ஒரு காவல் நிலையத்தின் கார் வரவும் சரியாக நின்றது. தீடிரென்று உள்ளே நுழைந்த இரண்டு அதிகாரிகள் இளமாறனை பார்த்தனர், ஏனோ அவர்கள் முன் கீர்த்தியை தனியாய் விட மனதில்லாமல், மறுபடியும் உள்ளே நுழைந்தான் அவன். கீர்த்தி தளர்வாய் படுத்திருந்த பெஞ்சின் எதிரில் அமர்ந்த இருவரும், அவளையும் அவளுக்கு அருகில் தயங்கி நின்ற இளமாறனையும் பார்த்தனர்,

“ஆயா, சார் யாரு?” – ஒரு காவலர் கேட்க,

“தம்பி பகத்தில தான் வேலை செய்யுது இது அவரு கட்டிக்கப்போர பொண்ணு, வர்ற வழில மயங்கிட்டுனு இங்க கூட்டிட்டு வந்தாரு.., ஏம்பா நீ ஆட்டோ கூட்டியாரலயா?” ஆயா கேள்வியுடன் இளமாறனைப்பார்க்க, அவனை சந்தேக கண்களுடன் பார்த்தனர் இருவரும். காவலர் இருவரும் அவன் அருகில் வர, அவன் மெதுவாக கீர்த்தியின் கைகளைப்பற்றினான்.

“ம்ம், விபத்தா.. இல்ல இது கடத்தலா? இந்தப்பொண்ணு மயக்கமா இருக்கிறத பார்த்தா,  நீ சொல்றத ஏதும் நம்ப முடியலையே” , என்றார்.

இளமாறனின் தொடுதலில் எழுந்தவள் விழித்து, தன் எதிரே நின்ற காவலர் இருவரையும் பார்த்து, தன் கையைப்பற்றியிருந்த இளமாறனின் விரல்களை அழுத்திப்பிடித்தாள். இளமாறன், “சார், உண்மையிலேயே விபத்துதான், நான் இங்க பக்கத்தில இருக்கிற கம்பெனியில தான் வேலைப்பார்க்கிறேன், மழை பெஞ்சதால பை முதற்கொண்டு ஆபீஸ்ல இருக்கு..” என்றான்.

“சரி சரி நீயும் இந்தப் பொண்ணும் வண்டில ஏறுங்க, ஸ்டேஷனுக்கு வந்திட்டு உங்க அட்ரஸ் எல்லாம் எழுதிக்கொடுத்திட்டு போங்க..” என்றார்.

இளமாறனுக்கு கோபம் வந்தது, “சார், அதான் நாங்க விபத்துல மாட்டிக்கிட்டோம்னு சொல்றோம்ல, பின்ன ஏன் எங்களை ஸ்டேஷனுக்கு கூப்பிடுறீங்க”

“என்னடா, குரல உயர்துர..நீ என்ன கதை சொல்லனும்னாலும் அங்க வந்து சொல்லு” – காவலர். காவலரின் குரல் உயரவும், கீர்த்தனா இளமாறனின் கைகளை அழுத்தினாள். அந்த தொடுதலில் அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் சற்று குரலை தனித்து பேசினான்.

“சார், கோபப்படாதீங்க, என்னோட டீடைல்ஸ் தர்றேன், நாளைக்கு காலைல ஸ்டேஷன் வர்றேன், நீங்க என்ன கேட்டாலும் எழுதி தர்றேன்!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.