(Reading time: 29 - 57 minutes)

“ம்ம், கிளம்புங்க” என்று அதட்டலுடன் அவர் முன்னே நடக்க, ஏதோ புரிந்ததுபோல் அவரைப் பின் தொடர்ந்தனர் இருவரும். நாலடி நகர்ந்ததும், “கொஞ்சம் நில்லுங்க!” என்று பின்னாலிருந்து மறுபடியும் அழைத்தார் இன்ஸ்பெக்ட்டர், தன்னுடைய இருக்கையில் இருந்து முன்னே நடந்து வந்தார், “கொஞ்சம் என்னோட வர்றீங்களா” என இருவரையும் காவல் நிலையத்தின் வெளியே அழைத்துவந்தார்.

“மேடம் என்ன சொன்னீங்க?  ம்ம்.. இவரு உங்களுக்கு நிச்சயம் ஆனா பையன்ன்னு, சரி, இந்த மொபைல்ல இருந்து உங்க வீட்டிக்கு கால் பன்னுங்க, நான் கொஞ்சம் விசாரிக்கிறேன்..” – என்றார்

“சார், அது வந்து, இந்த சூழ்நிலைல வீட்டுக்கு கால் பன்னினா அவங்க  பயந்திருவாங்க.. இத பெரிசு பன்னாதீங்க சார், இப்படி ஆக்சிடென்ட் அது இதுனா அப்புறம் நான் இங்க வேலைக்கு போறதும் முடியாத காரியம் ஆயிடும்…” – கீர்த்தன தெளிவாக தான் பேசினாள்.

“ஓ, அப்படியா? சார் எப்படி?” – இன்ஸ்பெக்ட்டர்

“சார் ,என்னோட விலாசம் தர்றேன், தாராளமா நீங்க செக் பன்னிக்கோங்க, ஆனா இந்த அர்த்த இராத்திரி கால் பன்னினாலோ, திடீர்னு போலீஸ் வீட்டுக்கு போனாலோ, அவங்க பயப்பிடுவாங்க.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, ஐடென்டிவிகேஷன் கார்டு எதுவும் இப்போ என் கையில் இல்ல, அதுவும் என்னோட வுட்பீ யும் விபத்தில எல்லாத்தையும் விட்டுட்டு வந்திட்டாங்க..”

“நீ சொல்ற கதைய நான் நம்பனும் இல்ல, நீ சொன்ன இடத்தில விபத்து நடந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்ல, ஏன் அந்த இடத்தில காரும் இல்ல… நீ இவள எங்கேருந்தோ தள்ளிட்டு வந்திட்டு, என் காதில பூ சுத்துறியா?”

உண்மையில் இருவரும் லேசாக அதிர்ந்தனர். இளமாறன் யோசித்தான், கீர்த்தனாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம பார்த்துகொள்ள அவன் மனம் துடித்தது. “சரி, நீங்க சொல்றது உண்மையினு ப்ரூவ் பன்னுங்க, நான் உங்கள விட்டுறேன்” – என்றார்.

கீர்த்தனாவுக்கு ஏதோ பொறி தட்டியது. “நாங்க என்ன பன்னனும்னு சொல்லுங்க சார்” – என்றாள் திருத்தமாக

தன் பின்னால் நின்ற ஒரு காவலரை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்ல, அவர் அங்கிருந்த சிறிய துர்கை அம்மன் ஆலயத்தின் விக்கிரகத்திலிருந்து தாலிக்கொடியை எடுத்து வந்தார். பளீரென்ற மஞ்சள் கொடியில் நடுவே தடித்த மஞ்சள் கட்டப்பட்டு இருந்தது. அதை கையில் வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்ட்டர் இருவரையும் பார்க்க, அவர்களின் பின்னால் நின்ற அந்த முதிய காவலர், “சார், என்னயிது, தாலி கல்யாணம் இதோட எல்லாம் விளையாடக் கூடாது, நம்ம வீட்டிலேயும் பெண்டு பிள்ளைகள் இருக்கு.. “ என்று தயங்கி கூற

“யோவ், என்னயா, என்னமோ நான் இவங்களுக்கு பொருத்தம் பார்த்தமாதிரி சொல்ற, அவங்க இரண்டு பேரும் தான் நாங்க புருஷன் பொண்டாட்டி ஆகப் போரோம், அதனால் இந்த அர்த்த இராத்திரில அவுத்து விட்ட மாதிரி திரியுரோம்னு சொன்னாங்க” – இன்ஸ்பெக்ட்டர் இன்னும் ஏதோ சொல்ல போக, இளாமாறனுக்கு கோபம் தலைக்கேறியது,

“சார், உங்க யுனிஃபார்ம்க்கு மரியாதை குடுத்து, பேசிட்டு இருக்கேன், சும்மா வாய்க்கு வந்த மாதிரி ஏதும் பேசாதீங்க…” – இளா

“பேசினா, என்னடா பன்னுவ? உன்ன தூக்கி உள்ளப்போட்டுட்டு இவள அந்த ப்ராத்தல் கேசுல உள்ள போட்டா உன்னால என்ன பன்ன முடியும்” , விருட்டென்று முன்னால் வந்து, இளமாறனின் நெஞ்சில் கைவைத்து அவனை பின்னால் இரண்டு முறை தள்ள, அதற்குள் கீர்த்தனா நிலைமையை புரிந்து கொண்டு, ஓடி வந்தாள்.

“சார், ப்ளீஸ், அவங்க ஏதோ டென்ஷன்ல பேசிட்டாங்க, இப்ப நாங்க என்ன பன்னனும்னு சொல்லுங்க ப்ளீஸ்” என்றாள் பவ்யமாக, அப்படியே இளமாறனைப் பார்த்து, “மாறன், ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க, சார் சொல்ற மாதிரி பன்னிட்டு பிரச்சன இல்லாம வீட்டுக்கு போவோம்”  என கெஞ்சலுடன் அவனது கண்களைப் பார்த்தாள்.

இளமாறனுக்கு கொஞ்சம் கூட மனம் ஆறவில்லை.. அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, கீர்த்தனா அவன் முன் இரண்டு கைகளையும் கூப்பி மார்புக்கு நேரே உயர்த்தி, “ப்ளீஸ் மாறா… , இந்த இடத்தை விட்டு சீக்கிரம் வெளில போவோம்” என்றாள் மெல்லிய குரலில். அவளருகே குனிந்தவன், “கீர்த்தி நீங்க நினைக்கிற மாதிரி, இது சொல்யூஷன் இல்ல, இதில ஏதோ செக் இருக்கு.. புரியாமா பேசாதீங்க..” என்றான் அதீத கோபத்துடன்.

“எதுவும் இருந்துட்டு போகட்டும், இப்ப இங்க இருந்து எனக்கு கிளம்பனும், அவர் சொல்றத கண்ண மூடிட்டு செய்யுங்க மாறா, ப்ளீஸ்…” என்றாள். அவளுடைய கண்களில் லேசாக கண்ணீர் துளிர்க்க, கரைந்து போனான் இளமாறன். அடுத்து இன்ஸ்பெக்ட்டர், சொன்னது எல்லாம் காதில் விழுந்தது, ஆனால் இதயம் கீர்த்தியின் பெயரை முகவரி ஆக்கி துடிக்க, வேரெதுவும் அவன் மனதில் நுழையவில்லை..இன்ஸ்பெக்ட்டர் நீட்டிய மங்கள கயிரை கையில் எடுத்து, பிரித்தான், மழை பெய்து ஓய்ந்துருந்த வானம், நட்சத்திரங்கள் எதும் இன்றி, நிலவு மட்டும் மெல்லிய ஒளியைப் பரப்ப, அதில் மின்னிய கீர்த்தனாவின் முகம் மட்டும் இளமாறனின் கண்களில் தெரிந்தது.  வார்த்தைகள் ஏதும் அவள் பேசவில்லை, ஆனால் அவள் கண்கள் பேசியது, கண்களில் அவள் கொடுத்த அனுமதியை உறுதியாக்கி அவன் கைகள் உயர்ந்து அவள் கழுத்தில் நீண்டது. கீர்த்தனா, அவன் கண்களைப் பார்த்தாள், சலனமற்ற தீட்சண்யமான கண்கள், அவளது நெஞ்சைக்கீறி உள்ளே நுழைந்தது அந்தப் பார்வை. அந்த தருணம் உண்மையில் கலங்காது அவள் உள்ளம் அவனை ஏற்றுக்கொண்டது. இளமாறனுக்கு என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லை.. தன்னுடைய அலைபேசி காமிராவில் அவர்களுடைய திருமணத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டார் இன்ஸ்பெக்ட்டர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.