(Reading time: 29 - 57 minutes)

“ஆமா, சார், அன்னிக்கு ஒரு சின்னப் பிரச்சனை, நான் ரிஷி, சாரோட விஸ்வம் இண்டஸ்ட்ரீஸ்ல ப்ரொடக்சன் மேனஜரா இருக்கேன், தவறுதலா ஒரு பொண்ணு என்மேல் கொடுத்த கம்ப்ளைன்ட் நானல அன்னிக்கு நான் ஸ்டேஷன் வந்தேன், அதுக்கப்புறம் தான் உங்களுக்கு தெரியுமே..” – இளமாறன்

“இப்போ என்ன பிரச்சன தம்பி, இந்த பெண் யாரு..?”

இளமாறன் முதலில் தயங்கினாலும் பின் நடந்த உண்மைகளை மறைக்காது அவரிடம் சொன்னான்.. இளமாறன் தன் அண்ணனின் அலுவலத்தில் தான் வேலைப் பார்க்கிறான், என்று தெரிந்ததும் அந்த கணம் மகிழ்ந்தது அவள் மனது, ஆயினும் தன்னைப் பற்றி வெளிப்படையாக அவனிடம் சொல்ல தயங்கியது, தன்னைப் பற்றி கூறினால், அவன் விலகிப்போகக் கூடும் என தோன்றியது கீர்த்தனாவுக்கு. மேலும் அண்ணனின் மனதை அறியாது, கொஞ்சம் கோப குணம் கொண்ட ரிஷியிக்கு இவைகள் தெரிய வந்தால், தன் தங்கைக்கு அவப்பெயர் வர இளமாறனும் காரணம் என ஒரு வேளை, அவன் இளமாறனை தவறாக நினைக்க கூடும் என அவளுக்கு  தோன்றியது..

“நீ யாரும்மா? “ என்ற அந்த காவலரின் கேள்விக்கு அமைதியாக நின்றாள் கீர்த்தனா

“ப்ளீஸ் நீங்க உங்களை பத்தி சொன்னால் தான் நான் ஏதாச்சும் பண்ண முடியும்..?”  - என்ற இளமாறனின் வார்த்தைகளுக்கு அவள் நிமிர்ந்தாள்.

“என் பேர் கீர்த்தி, ஊர் பேங்களூர், இங்க ஒரு இன்டர்வியூக்காக வந்தேன், வந்த இடத்தில என் ஃப்ரண்டோட கார ஓட்டிட்டு போகும் போது ஆக்சிடென்ட் ஆயிட்டு”  இதை தவிர அவள் வேரேதுவும் சொல்லவில்லை இளமாறனும் அவளை, வர்புருத்தவில்லை. சிறிது நேரம் யோசித்த அந்தக் காவலர், “தம்பி, பழைய காரணத்தினால உங்க மேல இன்ஸ்பெக்ட்டர் ஏற்கனவே வெருப்பில இருக்காரு, போதாதற்கு இந்த பொண்ணு யாருன்னு தெரியாதுன்னு அவர்கிட்ட சொன்னீங்கன்னா மேலும் பிரச்சனை, இந்த பெண்ணுக்கு எந்த ஆபத்துமில்ல சும்மா விசாரிச்சிட்டு விட்டுருவாருனு நினைக்காதீங்க, ஆளு கொஞ்சம் மோசமானவரு, பார்க்க என் பெண் போல இருக்கு, பேசாம முன்னாடி சொன்ன மாதிரி நீங்க கட்டிக்கப்போற பொண்ணுனு சொல்லுங்க.. அது மட்டுமில்லாம உங்க பாஸ் ரிஷிக்கு இந்த பெண் ரிலேஷன்னு சொல்லீடுங்க.. உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்குனு சொன்னா, அட்ரச வாங்கிட்டு விட்டுருவாரு இல்லனா வேரெதுவும் பிரச்சன பன்ன யோசிப்பாரு, உங்க மேல ஏதாச்சும் கேசப்போட்டுடா அப்புறம் எதையும் சரி பன்ன முடியாம போயிடும்..”

இளமாறன் யோசித்தான், “என்ன தம்பி யோசிக்கிறீங்க..?”

“அவங்க சொல்ற மாதிரியே செய்யலாங்க, இந்த இடத்தை விட்டு சீக்கிரம் என்ன கூட்டிட்டு போயிடுங்க ப்ளீஸ்” என்றாள் கீர்த்தனா, தலையை மட்டும் அசைத்து வேரெதுவும் பேசாது, தன் கையைப் பற்றி நின்றவளைப் பார்த்தான் அவன்.

அறையினுள் சென்ற இன்ஸ்பெக்ட்டர் தீவிர யோசனையில் இருந்தார், அவர் அருகே நின்றிருந்த காவலர் ஒருவர்,  “சார், நான் கன்ஃபர்ம சொல்றேன் இந்த பொண்ணு அந்த ரிஷியோட தங்கச்சி தான் சார், இது ஏதோ காதல் விவகாரம்னு நினைக்கிறேன்.. பேசாம இவங்க அப்பா விஸ்வ நாத்துக்கு சொல்லீருங்க, நாம இதில் தலையிட்டால் நமக்கு பிரச்சனையே தவிர எந்த ஆதாயமும் இல்ல..” . லத்தியை நெற்றி பொட்டில் ஊன்றி யோசித்தார், தன்னை அன்று எல்லா ஊழியர் முன்னும் அவமதித்த அந்த ரிஷிக்கு பலத்த இழப்பு ஒன்று நிகழுமாயின் அது ஒன்றே அவர் மனதில் உள்ள ஆத்திரத்தை அடக்கும்..பெரும் செல்வந்தனும், பெரும் பலமும் கொண்ட அவனிடம் தன்னால் நேரிடியாக மோத முடியாதென அவருக்கு தோன்ற, மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டே வெளியே வந்தார்.

லத்தியை கையில் ஆட்டிக்கொண்டு ஒரு கண்ணால் கீர்த்தனாவை மேய்ந்துக்கொண்டே, ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். “சரி, என்ன கதை ரெடி பன்னி வச்சிருகிறியோ அத சொல்லு” என்றார், இளமாறனைப் பார்த்து..

“சார், இதுதான் உண்மை இவங்க, ..இவங்க என்னோட உட்பீ, அது வந்து” என அவன் சொல்ல தயங்க.. ,  கீர்த்தனா ஒரு அடி முன்னால் வந்தாள், “ஏங்க, தயங்குறீங்க, நாம என்ன பொய்யா சொல்றோம், போலீஸ பார்த்து நாம ஏன் பயப்படனும், சார், இங்க பாருங்க, இவரு என்னோட அத்தை மகன், எங்க இரண்டு பேருக்கு நிச்சயம் ஆயிருக்கு, இங்க ஒரு இன்டர்வியூவுக்காக வரும்போது, ஒரு சின்ன அக்சிடென்ட் இவருக்கு போன் பன்னினேன் என்ன அழைச்சுட்டு போக வந்த இடத்தில தான், உங்க ஆளுங்க இங்க கூட்டிட்டு வந்திட்டாங்க..” – என்றாள்.

பிசிறின்றி, கொஞ்சமேனும் தயக்கமின்றி, கணீரென தெளிவாக ஒலித்தது அவள் குரல், நடந்தவை இதுதான் என அங்கிருந்த அனைவரும் நம்பினர், இளமாறன் அவளையே பார்த்திருந்தான், இன்ஸ்பெக்ட்டர் ஏதோ யோசித்தவராய் “அப்படியா, அப்ப நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க, யோவ் ஏட்டு!”, என அருகே நின்ற காவலரை அழைத்து, “இந்த பெண்ணையும், சாரையும் அவங்க வீட்டில விட்டுட்டு வாயா என்றார், அவங்ககிட்ட ரிட்டன் ஸ்டேட்மென்ட் ஒன்னு வாங்கிக்கோ” என்றார். அந்த காவலர் தான் இளமாறனுக்கு அறிவுரை வழங்கியவர், அவருடைய முகம் மலர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.