(Reading time: 29 - 57 minutes)

அவனுக்கு சிரிப்பு வந்தது.. “இல்ல மிஸ் கீர்த்தி” என்று சிரித்துகொண்டே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவள் கேள்விகளை பெரிது படுத்தாதுபோல் நடித்தான்.

“நீங்க, நீங்க, வேர யாரையாவது விரும்புறீங்களா?” அவள் கேட்டுவிட்டு மனதிற்குள் அவன் இல்லை என கூறவேண்டுமென யாசித்தாள்.

“இல்ல, ஆன அதுக்காக, இப்ப நடந்த இந்த கேலிக்கூத்த, பெரிசு பன்ன முடியாது, கீர்த்தி தயவு செஞ்சு இப்ப நடந்தத  மறந்திருங்க, என்னோட அம்மா எனக்காக பார்க்கிற பெண் தான் எனக்கு மனைவி ஆக முடியும், அந்த உரிமைய நான் கூட எடுத்துக்க விரும்பல, இப்ப நடந்ததை யார்கிட்ட சொன்னாலும் அவங்க சிரிப்பாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில விடுஞ்சிரும், உங்களை உங்க ஃப்ரண்டு வீட்டில ட்ராப் பன்னிட்டா நீங்க யாரோ, நான் யாரோ..உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.. சோ அந்தக் கயிர களட்டிப்போட்டுட்டு வாங்க..” என்றான்.

கீர்த்தனாவுக்கு புரிந்தது, குடும்பத்தில் கட்டுண்டு கிடக்கும் அவன் இப்படிதான் யோசிப்பான், அவன் மீது அவன் அம்மாவிற்கு இருக்கும் உரிமையை எண்ணி அந்த நொடி அவளுக்கு ஏக்கமும், பொறாமையும் வந்தது.. ஒன்று மட்டும் புரிந்தது, தன் கழுத்திலிருக்கும் தாலிக்கு எந்த அர்த்தமும் இல்லை என அவன உணர்த்துகிறான், இதன் பொருட்டு அவனிடம் நான் எந்த உரிமையும் எடுக்க முடியாது, என அவளுக்கு புரிந்தது.

“சரிங்க சார், நாளைக்கு காலைல ஏதாச்சும் கோவில் உண்டியல்ல இத போட்டுடுறேன்..” என்றாள் நிதானமாக.

தீடீரென்று அவள் “சரி என்றதும்” இளமாறனின் முகம் மாறியது. “வாங்க  போலாமென” அவன் அழைத்ததும் மௌனமாக அவன் பின்னால் எறினாள். தர்ஷினியின் வீட்டுக்கு வழி சொன்னாள், அவள் வீடருகே வந்ததும் இளமாறனின் கைப்பேசி வாங்கி தர்ஷினியை அழைத்தாள். பேசிவிட்டு அவனிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு கைகள் கூப்பி, “ரொம்ப தேங்க்ஸ் சார், நீங்க கிளம்புங்க, இது என் ஃப்ரண்டு வீடுதான், ஒன்னும் பிரச்சன இல்ல” என்றாள்

“கீர்த்தி அவங்க, கதவ திறக்கட்டும் உங்க ஃப்ரண்டு வந்ததும் நான் கிளம்புறேன்” -  என்றான். சற்று தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு அவள் வீட்டின் கதவை திறக்கும் வரை அவன் அங்கேயே நின்றான். கீர்த்தனா இளமாறனின் பக்கம் திரும்பவேயில்லை,  பத்து நிமிடம் கழித்து தர்ஷினி கதவை திறக்கும் வரை கீர்த்தனா, கதவையும் தரையையும் பார்த்திருந்தாள். கதவு திறந்ததும் ஒரு முறை அவன் பக்கம் திரும்பி அவள் விடைபெற அவனை அறியாது அவன் கண்கள அவள் கழுத்தில் பதிந்தது.. கீர்த்தனா, திருமாங்கல்யத்தை அழகாக ஆடைக்குள் மறைத்த விதம் அவன் மனதை நனைக்க, அவளை உள்ளே அனுப்பிவிட்டு வண்டியில் பறந்தான். பின்பு நடந்ததை நாம் அறிவோம்..

கீர்த்தனா தர்ஷினியின் மடியில் படுத்திருந்தாள், அவளின் தலைமுடியைக் கோதியவாரே, சுவறில் சாய்ந்து அனைத்தையும் கேட்டிருந்தாள் தர்ஷினி. “நான் ஏதாவது தவறு செஞ்சுட்டேனா தர்ஷூ, இதை யார்கிட்ட சொல்லனும்னு தெரியல, இப்படியே வீட்டுக்கு போனா அத்தைகிட்ட என்ன சொல்லுவேன் சொல்லு, அவங்க என் மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கிராங்க, அவங்களுக்கு ஒர் பெண் இருந்தா எப்படி வளர்த்திருப்பாங்களோ அதை விட நூறு மடங்கு அன்பையும் கண்டிப்பையும் சேர்த்து என்னை வளர்த்ததா அவங்க பெருமை படுறாங்க, இப்படி ஒரு விசயம் நடந்ததுனு அவங்களுக்கு தெரிஞ்சா அவங்க ரொம்ப வேதனை படுவாங்க..,” – கீர்த்தனா

“நிச்சயமா, இந்த விசயம் நீ சொல்லாம அவங்களுக்கு தெரிய வந்தால், அப்பவும் வேதனை படுவாங்க..”, தர்ஷினி இப்படி சொல்லவும் அவள் மடிமீதிருந்து எழுந்து அவள் முகத்தைப் பார்த்தாள் கீர்த்தனா. “கீர்த்தனா, இது இன்னும் முடியல, இப்ப தான் ஏதோ ஆரம்பிக்கிறதா.. எனக்கு தோணுது,  அந்த இன்ஸ்பெக்ட்டர், ஏதும் ஆதாயம் இல்லாம உங்க இரண்டு பேத்தையும் ஃபோட்டோ எடுத்திருக்க மாட்டான், ஒன்னு நீ யாருனு நல்ல தெரிஞ்சே இத செஞ்சிருக்கனும், இல்ல அத வச்சு ஏதாவது ப்ளாக் மெயில் பன்னலாம்னு, தோணிருக்கனும்..” – தர்ஷினி

“இப்ப என்ன பன்னலாம் தர்ஷூ” – கீர்த்தி

“முதல்ல நாளைக்கு காலைல, உன் கழுத்தில இருக்கிறத களட்டி பக்கத்தில இருக்கிற துர்கை அம்மன் கோவில் உண்டியல்ல போட்டிரு…” –தர்ஷினி

கீர்த்தனா அமைதியாக இருந்தாள். “கீர்த்தி, வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அத பன்னிரு, வீட்டுக்கு போனதும், அத்தைகிட்ட நடந்ததை சொல்லிரு, பொறுமையா நேரம் பார்த்து அப்பாகிட்டேயும், அண்ணாகிட்டேயும் சொல்லு, மத்தபடி இது நமக்குள்ளேயே இருக்கட்டும், காவ்யா உட்பட..புரியுதா..” – தர்ஷினி

தர்ஷினி சொல்வது சரி, காரணமில்லாது நடந்தவைகளை களைந்து விடுவதே நல்லது, மனதில் அதை தீர்மானித்தவளாய், படுக்கையில் சாய்ந்தாள், தர்ஷினியின் கையைப் பிடித்துக்கொண்டு உறங்க முயன்றாள்..மனம் முழுதும் இளமாறனின் முகம்..நடந்த நிகழ்வுகள் அவளை அழுத்த தன்னை அறியாது உறங்கிப்போனாள்.  தர்ஷினி இரவு முழுக்க உறங்காது.. கீர்த்தனாவையே நினைத்திருந்தாள்.. அவளுக்கு புரிந்தது கீர்த்தனாவின் மனம் அவளிடம் இல்லை, குழந்தை தன்னுடைய பொம்மையை பிறருக்கு கொடுக்க எப்படி விரும்புவதில்லையோ அதை போல் கீர்த்தனாவும், தன் கழுத்தில் விழுந்த தாலியையும் இளமாறனையும் யாருக்கும் விட்டுகொடுக்க விரும்பவில்லை, தர்ஷினியின் அலைபேசியிலிருந்து அவனது எண்ணை மனதுக்குள் கீர்த்தனா குறித்ததை தர்ஷினி பார்க்காமலில்லை.. இத்தகைய இன்னலில் யாரிடமும் உதவி கோராது, தன்னைத் தேடி வந்தவளை தன் உயிர்த்தோழியாக ஏற்றுக்கொண்டது அவள் மனம். எப்படியேனும் கீர்த்தனாவை எந்த இன்னலும் சூலாது காக்க வேண்டுமென தர்ஷினி மனதிற்குள் நினைத்தாள். ஆடைக்குள் புதைந்து கிடந்த தாலியை ஒரு கையில் பற்றிக்கொண்டு மற்றொரு கை தர்ஷினியின் மீது கிடத்தி உறங்கிக்கொண்டிருந்த தன் தோழியையேப் பார்த்திருந்தாள் அவள்.. கீழ்வானம் சிவக்க, விடியல் கீற்று மெதுவாக பூமி மீது படர்ந்தது.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.