(Reading time: 25 - 49 minutes)

09. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

சூழ்நிலை தடைகள் எல்லாம் ஒரு நாள், நிச்சயமாக உடைக்கப்படும், வாழ்வின் கடும் போராட்டங்களையும், வளைவு நெழிவுகளையும் கடப்பதற்கு, அளப்பற்கரிய பொறுமையும் தன்நம்பிக்கையும் தேவைபடுகிறது. எல்லா இன்னல்களும் முடிவில் ஒரு இன்பத்தைக் கொடுக்கும், அதை உணர்த்தும் விதமாகவே இரவு போர்த்தும் இருளை ஆதவன் கிழிக்கிறான். அன்றும் விடிந்தது. அழகான காலைப்பொழுது. தர்ஷினி, தன் குளியலறையிலிருந்து வெளிப்படும்போது, கீர்த்தனா, படுக்கையில் அமர்ந்து சன்னலின் வழியே விடியலை இரசித்திருந்தாள். மனதின் இருக்கம் கலைந்து, தெளிந்திருந்தாள், அடுத்த பத்து நிமிடங்களில், தர்ஷினியின் கைபேசி சிணுங்கியது, திரையில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து, புன்னகையுடன் கீர்த்தனாவிடம் நீட்டினாள், பெற்றுக்கொண்டவள், அழைப்பை ஏற்றாள்.

“ஹேய் கீர்த்தி, இப்போ எப்படி இருக்கு? , நீ ரெடினா இப்ப நான் அங்க வர்றேன், இல்ல நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கனும்னா எடுத்துட்டு கால் பண்ணு” – ரிஷி

“இல்லண்ணா நீ சீக்கிரம் வா, நான் ரெடி வீட்டுக்கு போணும் அத்தையைப் பார்க்கணும்” -  அவள் குரல் பிசிறியது. அழைப்பைத் துண்டித்து அருகில் நின்ற தர்ஷினியின் முன் நீட்டினாள். “இன்னிக்கு ஈவ்னிங்க நீ சொன்ன அந்த கோவிலுக்கு போலாம், தர்ஷூ, நான் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்.. உன்னோட காலர் வச்ச சுடி ஏதாவது தா, அண்ணா வர்றதுக்குள்ள ரெடி ஆயிடுறேன்” – கீர்த்தனா

அரைமணி நேரத்தில் தர்ஷினி கொடுத்த ஆடையில், கிளம்பினாள் கீர்த்தனா, வாசலில் ஹார்ன் சத்தம். “ரிஷி” தான், ஏனோ கீர்த்தனாவுக்கு மனதுள் ஒரு நடுக்கம், கிளம்பும்போது, தர்ஷினி புன்னகையுடன், “கீர்த்தி பயப்பிடாத எல்லாம் சரி ஆயிடும், நேரம் பார்த்து வீட்டுல சொல்லிடு, ஈவ்னிங்க் மீட் பன்னலாம், என்னனாலும் கால் பன்னு, உன் கூட எப்போவும் நானும் காவ்யாவும் இருப்போம்” என் புன்னகைத்தாள்.

“தர்ஷூ, காவ்யா கேட்டா என்ன சொல்லுவ? திடீர்னு என் கூட வெளில போறேனு சொன்னா அவ கோபப்படுவா தானே?” – கீர்த்தனாவின் முகம் வாடியிருந்தது. அவள் அருகே வந்து அவள் கண்ணத்தை தட்டியவள், “ஹேய் லூசு நீயும் காவ்யாவும் எனக்கு ஒன்னுதான், அவ அப்படியேல்லாம் கேட்கமாட்டா, கோவில்னு சொல்லு அவ விட்டாபோதும்னு ஓடிருவா..” என்றாள்.

இருவரும் புன்னகையுடன் வெளி வர, வாசலில் காருடன் நின்றிருந்தான் ரிஷி, “உள்ளவாங்க ரிஷி” புன்னகையுடன் வரவேற்ற தர்ஷினியிடம்,  “ஹாய் தர்ஷினி, கொஞ்சம் அவசர வேலையிருக்கு, முக்கியமான மீட்டிங்க ஒன்னு இருக்கு, அடுத்த தரவ கீர்த்தனா வர்றப்ப நிச்சயம் நானும் வர்றேன், அங்கிள் எப்படி இருக்காங்க..? “

“நல்லா இருக்காங்க, வெளியூர் போயிருக்காங்க” – தர்ஷினி

“கூல், வரட்டுமா! தலையசைத்துவிட்டு தன் காருக்குள் ஏற, கீர்த்தனா காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு தர்ஷினிக்கு கையசைத்துவிட்டு கிளம்பினாள். கார் நகர்ந்ததும், “ஏதோ சரி இல்லையே..தலைல ஏதாச்சும் அடி பட்டுடா கீர்த்தனா” – என்றான் கேலியாக.   அவனைப் பார்த்து லேசாக முறைத்தாள் அவள். “இல்ல நீயா திடீர்னு அண்ணானு கூப்பிடுற, அப்புறம் இவ்ளோ அமைதியா வேர வர்ற, ஒரு வேளை பேய் பிசாசு ஏதாச்சும் பிடிச்சிருக்குமோ? இப்போ அமைதியா இருந்துட்டு பின்னாடி கழுத்த நெரிச்சா என்ன பன்றது? எதுக்கும் நான் கொஞ்சம் கவனமா இருக்கனும்!” – என்றான்

“ஆமாம், பேய் தான் பிடிச்சிருக்கு, உன்ன கடிச்சு குதர போகுதுனு” சத்தமாக சொலியவாரே, பின்னலிருந்து, ரிஷியின் சட்டைக் காலரைப் பிடித்தாள் கீர்த்தனா. அடுத்த நொடி அவளை சரேலென முன்னாடி இழுத்து முன் சீட்டில் கிடத்தினான் ரிஷி. இரண்டு முன் இருக்கையின் ஊடே நுழைந்து தட்டு தடுமாறி முன்னால் வந்து விழுந்தாள் கீர்த்தனா.

“டேய் மாடு, இப்படி முரட்டுத்தனமா ஏதாச்சும் பன்னினா, அத்தைகிட்ட சொல்லிருவேன்!” – என்று அவள் சிரித்தவாரே சிணுங்க,

“ம்ம், கண்டிப்பா இது பேய் தான், இது வெரும் கீர்த்தனாவா இருந்தா இதுகுள்ள என்னை ஓரு வழி ஆக்கிருக்கும், நேத்து நீ புளியமரத்தில காவ்யாவோட கார ஹேங்க் பன்னின அப்பவே நினைச்சேன் இது ஏதோ பேயோட வேலைதான்நு” – அவன் சிரிக்க அமைதியானாள் கீர்த்தனா

“ஏய், என்னாச்சுடி, உனக்கு ஒன்னுமில்லயே? டாக்ட்டர பார்த்துட்டு வீட்டுக்கு போவோம்” – ரிஷி

“இல்ல ரிஷி, வீட்டுக்கு போலாம், அடி ஒன்னும் படல, லேசா டையர்டா இருக்கு, இது டாடிக்கு தெரியுமா?” –கீர்த்தனா

“இல்ல, யாருக்கும் தெரியாது, உனக்கு லேசா உடம்பு சரியல்லனு அத்தைகிட்ட மட்டும் சொன்னேன், அதுக்கே அவங்க பதரிட்டாங்க.. நைட் என்னாச்சுடா, கார் மரத்தில மோதினப்புறம் எப்படி தர்ஷினிவீட்டுக்கு போன” – ரிஷி

“ரிஷி, எப்படியோ அவ வீட்டுக்கு போனேன், என்னால அத உங்கிட்ட ஷேர் பன்றதுக்குகூட ரீக்கால் பன்னமுடியாது. ப்ளீஸ் அத பத்தி ஏதும் எங்கிட்ட இப்ப கேட்காத” – கீர்த்தனா

“ஓகே..ஃபீல் ஃப்ரீ, நீ பத்திரமா இருக்கிறதே எனக்கு ஹேப்பி” - ரிஷி

“ம்.. சாரி ரிஷி காவ்யாவோட கார டேமேஜ் பன்னிட்டேன்..” – கீர்த்தனா

“அத விடு, அந்த ராட்ஷசி, இவ்ளோ நாளா கார் என்ன ஆச்சுன்னு கேட்கவேயில்ல,  நீ, அவ கார் ட்ரைவ் செஞ்சு பார்த்ததேயில்ல இல்ல, சோழவரம் ரேஸ் மாதிரிதான் மேம் எப்பவும் கார ஓட்டுவாங்க.. இப்ப உன்னோட உபயத்தில கார் காலி, பேசாம இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்கமா தர்ஷினி கூட போவா..விடு” – ரிஷி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.