(Reading time: 25 - 49 minutes)

“ஹலோ, என் ஃப்ரண்ட பத்தி எங்கிட்ட ஏதாச்சும் தப்பா சொன்னனா நான் நிஜமாவே பேய் ஆயிடுவேன்..” என்று கண்களை உருட்டி அவள் ரிஷியை மிரட்ட, புன்னகைத்தவாரே, தன் தங்கையிடம் இருக்கும் மாறுதல்களை, ரிஷி உணரத்தான் செய்தான்,  சாதாரணமாக, கீர்த்தனா இப்படி இருக்க மாட்டாள், தன் வேலை, அலுவலகம், தொழில் என சதா அதைப்பற்றி மட்டும் தான் யோசிப்பாள். இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து விஸ்வத்தின் இரு பெரு நிறுவனங்களுடைய வளர்ச்சி பற்றிய போர்டு மீட்டிங்க் இருக்க, இந்த நேரத்திற்கு புயலென சுழன்றிருக்க வேண்டியவள் அமைதியாக அவனுடன் விளையாடிக்கொண்டு வருகிறாள்…

கீர்த்தனா ரிஷியை விட  ஐந்து வயது சிறியவள். கீர்த்தனா பிறந்து, சில மாதங்களில் அவள் தாய் இறந்துவிட, ரிஷியையும் கீர்த்தனாவையும் பார்த்துகொள்ளும் பொறுப்பு விஸ்வத்தின் தலையில் விழுந்தது, சற்று சரிந்து இருந்த தொழிலை மேம்படுத்தும் நிலைமையில், இருவரையும் வளர்க்க முடியாது கீர்த்தனாவை அவர் தங்கை அருந்ததியின் பொருப்பில் விட்டார் விஸ்வம். விளைவு, ரிஷி தனிமைப் படுத்தப்பட்டான், அவனுடைய கண்மூடித்தனமான போக்குக்கு அதுவும் ஓர் காரணம். இதுவரை அண்ணன் தங்கைக்கு இடையே இருந்த இடைவெளி, கீர்த்தனா நிரந்திரமாக விஸ்வத்திடம் வந்ததும் கொஞ்சம் குரைந்து. கீர்த்தனா திறமையான பெண், தன்னுடய இரண்டு பெரும் நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ரிஷிக்கும், கீர்த்தனாவுக்கும் சமமாக கொடுத்திருந்தார் விஸ்வம். என்று கீர்த்தனா தன்  பொறுப்பை முழுமையாக ஏற்றுகொண்டாளோ அன்றுடன் விஸ்வம், அலுவலக பணிகளில் அதிகமாக தலையிடுவதில்லை, தன் தொழில் விவகாரங்களில் கீர்த்தனாவிற்கு கொடுத்த முழு சுதந்திரத்தை அவர் ரிஷிக்கு கொடுக்கவில்லை, காரணம் ரிஷியிடம் திறமை இருந்ததே தவிர விவேகம் இல்லை, தொட்டதில் எல்லாம் வெற்றி பெற நினைக்கும் அவன் தொழிலையும் அவ்வாறே கையாண்டன்.வளைவு தன்னை சுற்றி நிறைய எதிரிகளையும் பெற்றுக்கொண்டான். வளைந்து போவதென்பது அவன் அகாராதியில் கிடையாது.

ரிஷிக்கு இதுபெரும் சாவாலாகவே இருந்தது, ஆனால் விஸவம் பிரித்துகொடுத்த கிளையை பத்துமடங்கு வேகமாக உயர்த்திவிட்டான் ரிஷி, எந்த வேகத்தில் உயர்த்தினானோ அதே வேகத்தில் அதை இழக்கும் அளவுக்கு எதிரிகளையும் சம்பாதித்துக் கொண்டான், சமீபகலாலமாக அவனுடைய முயற்சிகள் எதுவிற்கும் விஸ்வம் பொருளாதார ரீதியாக எந்த உதவியும் செய்யவில்லை, அதை அவன் பொருட்படுத்தவும் இல்லை. விளைவு அவன் தொழிலில் ஈட்டிய பொருளனைத்தையும் மீண்டும் முதலீடு செய்யும் நிலை.அவனின் இந்த பெரும் வளர்ச்சிக்கும் அதை தொடர்ந்த சரிவிற்கும், எதற்கும் விஸ்வம் அசைந்துகொடுக்கவில்லை. காரணம் ரிஷி தான் நினைத்ததை செய்பவன், யாருடைய அறிவுரையும் கேட்கும் பொருமையற்றவன். விஸ்வம் இதை பெரிதுபடுத்தவில்லை தான், ஆனால் அவர் ரிஷியின் நடவடிக்கைகளை கண்கானுத்துக்கொண்டுதான் இருந்தார்.

காரை செலுத்திக்கொண்டே, அருகே சீட்டில் கண்கள் மூடிக்கிடந்த தங்கையை அவன் பார்வை வருட, மெதுவாக யோசித்தான், “நேற்று ஒரு இரவில், அப்படி என்ன நடந்திருக்கும்.?”

ன் தனி அறையில் தன் கணினியின் உள்ளே கண்களை புதைத்து, ஆழ்ந்து வேலை செய்துகொண்டிருந்தவனின், கவனத்தைக் கலைத்தான்  ரிஷி.

“ஹலோ, விக்னேஷ்” – ரிஷி

ரிஷியைப்பார்த்த கனத்தில் எழுந்து புன்னகைத்து கைக்குலுக்கி, தன் எதிரே இருந்த இருக்கையைக்காட்ட அதில், அமர்ந்தான் ரிஷி.

“சொல்லுங்க, சார், இந்தப்பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டீங்க, இன்னைக்கு காத்தே அடிக்குது?”

ரிஷி சிரித்தான், “போர்டு மீட்டிங்க் வென்யூ, இங்க தானே”

“ம்ம், அது இங்க தான், ரிஷி சார் இது வரைக்கும் இந்த மீட்டிங்க் வந்ததே இல்லையே, எப்போதும் உங்க அசிஸ்டென்ட், இல்ல பர்சனல் மேனேஜர் தானே வருவாங்க. ரிஷி சிரித்தான்.

“நியூ ப்ராஜெக்ட் மொடல்ஸ்லாம் எப்ப ப்ரசன்ட் பன்ன போறீங்க? ஐ கேம் வார் தெட்” – ரிஷி

“சார், அத டெஸ்டிங்க் மோட்ல வச்சிருக்கோம், இப்போதைக்கு யாருக்கும் ப்ரசன்ட் பன்னவோ, இல்ல டீடெயில்ஸ் ஷேர் பன்ன கூடாதுன்னு மேம் சொல்லிருக்காங்க! சோ வீ ஆர் கீப்பிங்க் இட் அஸ் சீக்கிரெட்.”

“ஹலோ, எனக்குகூடவா?”

“முக்கியமா உங்ககிட்ட தான் ஷேர் பன்னக்கூடாதுன்னு சொன்னாங்க!”

ரிஷிக்கு கோபம் வந்தது, “மிஸ்டர், மைன்ட் யுவர் வேர்டுஸ், யூ ஆர் ஜெஸ்ட் எ எம்ப்ளாயீ ஹியர்!” – ரிஷி

“யேஸ் சார், ஐயம் டூங்க் மை டியூட்டி, நீங்க தான் தேவையில்லாம என்ன டிஸ்டர்ப் பன்னறீங்க..!”

“என்னடா ஓவரா பேசுர”, ரிஷி எழுந்து விக்னேஷின் காலரைப்பிடித்து, அவனுடைய இருப்பிடத்திலிருந்து வெளியே இழுத்தான்,

“டேய் மச்சீ, விடுறா, ஷர்ட் கசங்குது பாரு, கீர்த்தனா மேம் வேற இன்னிக்கு மீட்டிங்க என்னை ஹேண்டில் பன்ன சொல்லிட்டாங்க!” அவசரமான வந்தது வார்த்தை. நண்பர்கள் இருவரும் புன்னகையுடன் கட்டிக்கொண்டனர்.

“ம் சரி, மீட்டிங்க் முடிஞ்சதும், கட்டிங்க், ஓழுங்கா வந்து சேரு..” –ரிஷி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.