(Reading time: 25 - 49 minutes)

அவளுக்கு சுறுகென்றது உள் மனது. தவிப்பாய் அவனைப்பார்த்தாள். அவன் நெருங்கும் போது தவிப்பாய் விலகும் அவள், அவன் அருகே இல்லாதபோது அவன் அருகாமைக்கு ஏங்கி தவிக்கிறாள் தான், இதுவரை துணையாய் இருந்தவை, பொழுதுபோக்கும் தன்மையாய் இருந்தவை அனைத்தும் மனதளவில் விலகிப்போனது, உருப்படியாய் செலவழித்த எல்லாத் தருணங்களும் வீணானதென தோன்றுகிறது, அவன் இல்லாத எல்லாம் வெருமையாய்.. இதில் அளவுக்கு மீறிய உரிமையா? அவனா? அவன் அவ்வாறு எடுக்காதிருந்தால் தான் இவள் தவித்திருப்பாள், ஒவ்வொரு சந்திப்பிலும் தொடுதலிலும் தன்னை அவனுடையவளாக நடத்தும் விதம் தனில் அவள் உருகிபோகிறாள் தான்.… அது எல்லை மீறாத வரையில் இன்பமானதுதான்.. மீறும் தருணம் அவனுடைய சொத்தாய் அவள் இருக்க வேண்டாமா? இன்னும் அவளைப் சார்ந்த உரிமை, அவள் தந்தையிடம் அல்லவா இருக்கிறது… அவனை ஆளும் உரிமையை அவன் தாய் இன்னும் இவளுக்கு கொடுக்கவில்லைதான்.

அவள் சொல்ல நினைத்தது இதுதான்

“என் மனச ஆக்கிரமிக்கிர உரிமைய என்னிக்கோ நான் உங்ககிட்ட கொடுத்துட்டேங்க, ஆனா உங்க மனைவிங்கிற உரிமைய உங்க அம்மாவும் என் அப்பவும் சம்மதிச்ச அப்புறம் தான் அடைய முடியுமில்லயா?”. அவள் கண்களை ஊடுருவி இதயத்தை படிக்கும் வித்தையை அவளைப்பார்த்த அன்றே அவன் கற்றுக்கொண்டான்தான்.

“என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல.. அதான் நீ கொஞ்சம் உங்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டா கூட, அடுத்த நிமிஷமே நீ எங்கிட்ட இருந்து விலகி போயிற்ற..” கோபத்தில் லேசாக அவன் முகம் சிவக்க, அவன் எழ எத்தனிக்கும்போது, அவன் தோள்களை அழுத்தி நிறுத்தினாள் பெண்.

“நான் உங்களை நம்பலனு உங்களுக்கு தோணுதா?”

நிச்சயமாக இல்லை தான். இதயங்களை பரிமாறிக்கொண்ட தருணத்திலிருந்து, அவனை குட்டி போட்ட பூணையாய் பின் தொடருகிறாள் இவள், இன்றுவரை அவன் அழைத்த நொடிதனில் அவனோடு வருகிறாள் தான், பின் விளைவுகள் எதையும் அவள் யோசிப்பதில்லை, சிவாவின் பூரணமே அவள் தான்.

நிமிர்ந்து அவள் முகத்தையேப் பார்த்திருந்தான், எந்த சூழ்நிலையிலும் அவளை இவன் இழப்பதாயில்லை.. அந்த நொடி மௌனம் இருவரையும் நனைக்க அவள் மடிமீது தலையை அழுத்தி இடையை சுற்றிய கையை இன்னுமாய் இருக்கி விழிகளை மூடிக்கொண்டான். தர்ஷினியின் விரல்கள் அவன் தலையைக் கோதியது. சில மணிதுளிகள் அப்படியே கரைய, பின் எழுந்தவனது இதயத்தில் எல்லையற்ற நிம்மதி,,

“கீழ போலாம், நான் உங்களுக்கும் விஷ்ணுவுக்கும் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்” எழப்போனவளை, ஊஞ்சலில் மீண்டும் அமரவைத்தவன், எழுந்து தன் கைகளை அவள் கழுத்தின் ஊடேவிட்டு, குனிந்து நெற்றியில் முட்டினான், “இப்ப ஏதும் வேண்டாம், நாங்க கிளப்புறோம்…எனக்கு கொஞ்சம் டைம் கொடுடா சீக்கிரமா, அம்மாவோட வந்து அங்கிள்ட்ட பேசுறேன்.. நீ எதையும் நினைச்சு ஒரி பன்னாம ஹேப்பியா இரு“. நெற்றியோடு தன் நெற்றியை ஒட்டிக்கொண்டு அவன் உரைக்கும்போது, அது அவ்வளவு எளிதாய் இருக்கப்போவதில்லை, என இருவராலும் உணர முடிந்தது.

னவுகளும், அதை தொடர்ந்து நிகழப்போகும் நிகழ்வுகளையும் கற்பனையாய் மனதில் விரித்துக்கொண்டு நடந்து வந்தாள் தர்ஷினி. மாணிக்கம் ஊரிலிருந்து வந்ததும், சிவாவின் வீடு மாற்றம் பற்றி நிச்சயம் பேச்சுவரும், விவாதத்திற்கு அது உள்ளாகும் இது அவள் அறிந்ததே. புதிதாக கிடைத்த வேலையில் ஆர்வமாய், இன்னும் பிரயத்தனப்பட்டு வெளியூர் பிரயாணங்கள் வரை அதுவும் தர்ஷினியைத் தனியேவிட்டு மாணிக்கம் செல்வது இதுதான் முதல் முறை. அப்பாவின் திடீர் மாற்றங்கள் மனதை பிசைய, பல யோசனைகளுடன் கேட்டைத் திறந்தாள். வாசல் படியில் அமர்ந்து முகத்தை முட்டில் புதைத்து எதிரே அமர்ந்திருந்த காவ்யாவைப் பார்த்ததும், சிந்தனைகள் யாவும் சிதறி, உள் மனம் விழித்துக்கொள்ள பாய்ந்து அவள் அருகே ஓடினாள் இவள்.

“காவீ..” அழுத்தமான உச்சரிப்புக்கு மெதுவாக தலையைத்தூக்கிப்பார்த்தாள் காவ்யா. லேசான முக சுழிப்புடன் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.

“ஏய் சாரி டீ, நீ எனக்கு கால் பன்ன வேண்டிதானே..”

இதற்கு இன்னுமொரு முறை முறைப்பு, அதனை பவ்யமாக ஏற்றுக்கொண்டு தன் கைப்பையத்துளாவ,  சத்தம் அனைக்கப்பட்ட நிலையில் காவ்யாவின் பல அழைப்புகளை எண்ணிக்கையுடன் மின் திரையில் ஒளிர விட்டது அவள் கைப்பேசி.

“காட்” தன் நெற்றியில் அடித்துக்கொண்டாள்..”சாரி டீ, நான் கவனிக்கல”

“முதல்ல கதவ திற..” – இது காவ்யா

பாய்ந்து கதவை திறந்தவள், இவளது கைப்பிடித்து உள்ளே இழுத்துச் சென்றாள்.

“காவீ, ப்ளீஸ் மூஞ்சை தூக்காத, என்னப்பாரு” இன்னுமாய் பல கெஞ்சல்களை தர்ஷினியிடமிருந்து பெற்றுக்கொண்டு அவளை நிமிர்ந்துப்பார்த்தாள் காவ்யா. உண்மையில் ஒரு கூர்மையான பார்வை, காவ்யா தன் கைப்பையைத் துளாவி ஒரு காகிதத்தை தர்ஷினியிடம் நீட்ட, அதை வாங்கிப்பார்த்தவள் முகத்தில் உண்மையில் கவலைப்படிந்தது.

“என்னதிது?” – தெனாவட்டாய் காவியாவிற்கே உரிய தோரனையில் மிரட்டலாய் வந்தது கேள்வி.

மௌனமாக நின்றவளிடம் இன்னுமாய் முகம் சிவக்க கோபத்துடன் கேட்டாள் காவ்யா. “வேலைய நீ ரிசைன் பன்னி  ஒரு வாரம் ஆயிருக்கு..நீ செஞ்ச லெட்சனமான வேலையோட மெயில் காப்பி…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.